Friday, September 23, 2016

தமிழக முதல்வர் விரைவில் நலம் பெற்று பணிக்கு திரும்ப பிரார்த்திப்போம்

ஜெயலலிதா சிறையில் இருக்கும்பொழுது பிரார்தித்த அந்த சர்வமத பிரார்த்தனையாளர்களை இம்முறை காணவில்லை


அவர்கள் சிறை என்றால் மட்டும் ஜெபிப்பவர்கள் போல..






பொற்கால ஆட்சி என்பார்கள், அரசு மக்களின் நலனை காக்க அப்படி செலவழிக்கின்றது, அள்ளி கொடுக்கின்றது என அள்ளிவிடுவார்கள்.


சுகாதர்துறை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் என பெரும் துறைகளே உண்டு, அவற்றின் கீழ் ஏராளமான மருத்துவமனைகளும் உண்டு


ஆனாலும் அரசியல்வாதிகள் சிகிச்சை பெறுவது அப்பல்லோ ஆஸ்பத்திரியில் மட்டுமே.





தங்கள் துறையின் கீழ் இயங்கும் மருத்துவமனைகள் மீது அவர்கள் நம்பிக்கை அப்படி.

அது இருக்கட்டும், ஏதோ சென்னை பக்கம் ஒரு காய்ச்சல் வந்தபோது அமைச்சர் அது உடல்சூடு என்றார், தமிழகமும் நம்பிகொண்டது

அதாவது மக்களுக்கு வந்தால் உடல்சூடு, ஆனால் முதல்வருக்கு வந்தால் காய்ச்சல்

இப்போது முதல்வருக்கு வந்திருப்பது மட்டும் காய்ச்சல் என்கின்றார்கள்,

அமைச்சர் விளக்கவா போகிறார்???





முதல்வர் தினம் 20 மணி நேரம் உழைப்பதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது..!’ - நாஞ்சில் சம்பத்


ஒரு பென்ஸ் கார் கொடுத்திருந்தால் தினமும் 28 மணிநேரம் உழைப்பதால் முதல்வருக்கு உடல்நலக்கேடு என சொல்லியிருப்பார்,


இன்னோவொ என்பதால் 20 மணிநேரத்தோடு நிறுத்திகொண்டார்.






எந்த டிவி சேனலாவது, பத்திரிகையாவது சசிகலா புஷ்பாவிடம் முதல்வரை நலம் விசாரிக்க எப்பொழுது செல்கின்றீர்கள் என கேட்பார்களா?






1980களில் அமெரிக்க மருத்துவமனையில் அந்நாளைய முதல்வர் ம.கோ.ராமச்சந்திரன் சிகிச்சை பெற்றுகொண்டிருக்கும் போது நடந்த தேர்தலில் கலைஞரின் வேண்டுகோள் இப்படி இருந்தது


"மக்களே என்னிடம் ஆட்சியினை ஒப்படையுங்கள், எம்ஜிஆர் நலம் பெற்றதும் திரும்ப கொடுத்துவிடுகின்றேன்.."


இப்பொழுதும் அப்படி ஏதும் அறிக்கை விடுவாரோ? நல்லவேளையாக தேர்தல் முடிந்துவிட்டது.





ஆனாலும் தமிழ்நாட்டின் ஆட்சி என்னாவது என விரைவில் அறிக்கைவிடலாம். இப்போது விடமாட்டார், முதல்வர் நலம் என அறிவிப்பு வந்தபின் நிச்சயம் தொடங்குவார்?

தமிழ்நாட்டின் ஆட்சிநலன் மீது தலைவர் அக்கறை அப்படி. வேறொன்றுமில்லை





முதல்வர் ஜெயலலிதாவிற்கு காய்ச்சல் அப்பல்லோவில் அனுமதி


மனிதராக பிறந்தவர்களுக்கு நோய் சாதாரணம், இதற்காக எவனும் கதறிகொண்டு தீகுளித்தல், பேனர் வைத்தல் போன்ற அழிச்சாட்டியங்களில் இறங்காமல் இருக்கட்டும்.


சும்மாவே அழும் அமைச்சர்கள் இனி எப்படி எல்லாம் போஸ் கொடுக்க போகின்றார்களோ?, எங்களையும் பக்கத்து அறையில் நோயாளிகளாக அனுமதித்து ஏதாவது மருந்தினை ஏற்றுங்கள் என சொல்லமாட்டார்கள் என நம்புவோம்,




எனினும் அவர்களை நம்ப முடியாது.


பொதுவாக தலைவர்கள் மருத்துவமனையில் இருந்தால் மற்ற கட்சி தலைவர்கள் சென்று நலம் விசாரிப்பது மரபு.


இங்கு எப்படியோ, யாரெல்லாம் செல்கின்றார்கள் என தெரியவில்லை? சோ ராமசாமி நிச்சயம் செல்வார்.


தமிழக முதல்வர் விரைவில் நலம் பெற்று பணிக்கு திரும்ப பிரார்த்திப்போம்







 

No comments:

Post a Comment