Thursday, September 8, 2016

ரிலையன்ஸ் ஜியோ....

ரிலையன்ஸ் ஜியோவுக்கு எதிராக இந்திய செல்போன் நிறுவனங்கள் போர்க்கொடி


தனியார் பட்ஜெட் விமாங்கள் வந்து அரசு விமான நிறுவணங்களை ஆட்டம் காண செய்தால் அது மக்களுக்கான குறைந்த பயண வசதி.


தனியார் பேருந்துகள் பெருகி அரசு போக்குவரத்துகழகங்களை நிர்மூலமாக்கினாலும் அது மக்களுக்கான பயன்.


ஆனால் ஒரு தனியார் நிறுவணம் இன்னொரு தனியார் நிறுவணத்தை விட சல்லி விலைக்கு இணையம் விற்றால் அது அவர்களை அழிக்கும் சதி, உடனே ஆர்ப்பாட்டம் செய்வார்கள்


இப்படி தனியார் நிறுவணங்கள் அரசு நிறுவணங்களை அழித்தால் அதனை கேட்க யாரும் இல்லை, ஆச்சரியமாக அரசே கேட்காது


ஆனால் தனியார் நிறுவணம் இன்னொரு தனியார் நிறுவணத்தை சந்தியில் நிறுத்தும்பொழுதுதான் அவர்கள் அடித்துகொண்டிருக்கும் கொள்ளைகள் எல்லாம் வெளிவருகின்றன‌


அவன் அதனை 250 ரூபாய்க்கு விற்றான் கட்டுபடியாயிற்றாம், இவனுக்கு 50 ரூபாய்க்கு விற்றாலே கட்டுபடி ஆயிற்றாம், அப்படியானால் அரசு 10 ரூபாய்க்கு விற்றாலும் அதற்கு கட்டுபடியாகுமோ? என நாம் யோசிக்க கூடாது


ஆக அரசு பத்து ரூபாய்க்கு கொடுக்க கூடிய சமாச்சாரத்தை ஒருவன் விற்று 25 மடங்கு லாபம் பார்த்திருக்கின்றான், இதில் பாதி கட்சி நிவாரண நிதி, அதிகாரிகள் பங்கு என ஒதுங்கினாலும் மீதி இவனுக்கு


ஆக ஒவ்வொரு தொழிலதிபரும் இப்படித்தான் உருவாகிறான், மண் அள்ளுபவன் முதல் இணையம் விற்பவன் வரை.


வானுயர்ந்த கோபுரங்கள் எல்லாம் கட்டுவது என்றால் சும்மவா..இன்று அரசாங்கத்தை விட பெரும் அளவு சாம்ராஜ்யங்களை இந்த தொழிலதிபர்கள் நடத்துகின்றார்கள் என்றறால் இப்படித்தான்


"எப்படி அம்பானிய தூண்டிவிட்டு இந்த மொபைல் கம்பெனிகளுக்கெல்லாம் ஆப்பு வச்சார் பாத்தியாலா மோடி.." என அவரின் அடிப்பொடிகள் இனி புளகாங்கிதம் அடையலாம்


இப்படி கல்வி, மருத்துவம் என வியாபரங்களில் எல்லாம் போட்டிகள் பெருக பெருகத்தான் தனியார் அடிக்கும் கொள்ளைகள் எல்லாம் வெளிவரும்.


அப்படியே இன்னொருவன் வந்து சில அறிவிப்புகளை வெளியிட்டால் அம்பானியின் பெட்ரோல் கொள்ளை முதல் ஜவுளி கொள்ளை வரை வெளிவரும்


அதற்கு மோடி யாரை தூண்டிவிடுவார் என அடிப்பொடிகள் சிந்தித்துகொண்டிருக்கின்றன‌.


இது தகவல் தொழில்நுட்பம், அதன் தன்மை வேறு. கனரக தொழில் எனும் அமைப்பு வேறு


அப்படி இந்தியாவிற்கு தேசிய கார் எனும் அடையாள இன்று இல்லை, அம்பாசிடரும் சென்றாகிவிட்டது


இந்தியாவின் கார் எது? என்றெல்லாம் நாம் கேட்க கூடாது,


தம்மாதுண்டு ஜப்பானும், தென் கொரியாவும் இது எங்கள் நாட்டு கார் என பல அடையாளங்களை சொல்வது போல இந்திய அடையாளம் எது? இது ஒருவகை அவமானம். நிச்சயமாக அவமானம்.


அதாவது மலிவான தொலைதொடர்பு விஷயங்களில் இப்படி விளையாடுவார்களே தவிர, கனரக தொழில்பற்றி வாய்பேசவே மாட்டார்கள்


அதாவது பங்கு பிரித்தாகிவிட்டது கனரக தொழில் எல்லாம் டாட்டாவிற்கு, அதனை தவிர இம்மாதிரி சீசன் தொழில்கள் எல்லாம் அம்பானிக்கு


ஒருவர் தொழிலில் ஒருவர் தலையிட மாட்டார்கள், அப்படியும் ஒரு கூட்டணி இருக்கின்றது, அரசு என்ன செய்யும் பாவம்


காரணம் அரசு அமைக்கும் கட்சிகள் இவர்களிடம்தானே பிச்சை எடுத்து தேர்தலை சந்தித்து ஆட்சி அமைக்கும், அந்த ஊமை அரசு என்ன செய்ய முடியும்?


வாழ்க பாரதம்.


இதில் தமிழக அரசு வித்தியாசமானது, எளிதில் விடாது. அப்படித்தான் தனியார் நடத்தி கொள்ளை லாபம் பார்த்த சாராய வியாபாரத்தை தானே எடுத்துகொண்டது, பெரும் லாபம் சம்பாதிக்கிறது, "குடி"மக்களுக்கான அரசு இது


ஆனால் தயாரிப்பவன் எல்லாம் கட்சிக்காரனாக இருப்பான், அதனை பற்றி எல்லாம் பேசகூடாது,


இப்படி கட்சிக்காரன் தயாரிக்க வந்துதான் அதுவரை கோலோச்சிய மல்லையாவினையே மல்லாக்க கிடத்திவிட்டார்கள்


அப்பொழுதே வழக்கு தொடுத்திருந்தால் இப்படி ஆகியிருக்கமாட்டார் மல்லையா.


சரி இந்த கருமம் எல்லாம் பேச பேச பேசிகொண்டே இருக்கலாம், முடியாது.


அதனால் முடித்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment