Monday, September 26, 2016

வெங்கடேச பண்ணையாரின் நினைவிடத்தில் சசிகலா புஷ்பா அஞ்சலி செலுத்தினார்



வெங்கடேச பண்ணையாரின் நினைவிடத்தில் சசிகலா புஷ்பா அஞ்சலி செலுத்தினார்.


அடுத்த அஞ்சலி கராத்தே செல்வின் சமாதியா?


டெல்லியில் துறைவாரியாக ஒவ்வொருவரையும் சந்தித்து தமிழக உரிமைகளுக்காக குரல்கொடுக்கவேண்டியவர் இங்கே சமாதி சமாதியாக சாதிவாரியாக அஞ்சலி செலுத்திகொண்டிருக்கின்றார்.


வெங்கடேச பண்ணையார் என்பவர் அப்படி இந்த‌ நாட்டிற்கு ஏதும் என்னதான் செய்தாரோ தெரியவில்லை? அப்படி ஒரு தேசாபிமானி இருந்ததாகவோ ராணுவத்திலோ அல்லது அரசியல் பதவிகள் வகித்ததாகவோ இதுவரை தகவலே இல்லை.


பசுபதிபாண்டியன் எனும் பாகிஸ்தான் ராணுவதளபதி படையெடுத்து தூத்துகுடி வரை வந்தது போலவும், அதனை 10 பேர் கொண்ட படையுடன் வெங்கடேசபண்ணையார் ஓட விரட்டியது போலவும் அப்படி ஒரு பில்டப்


அதே தூத்துகுடியில்தான் மாவீரன் கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, வெள்ளையனுக்கு எதிராக கலகம் செய்த ராஜகோபால் என ஏராள தேசபக்தர்களின் நினைவிடம் நிறைந்த தூத்துகுடியில் அவர்களுக்கு எல்லாம் அஞ்சலி செலுத்த யாருமில்லை


இந்த வெங்கடேசன், பசுபதி பாண்டியன் போன்றவர்களுக்காக குழுமும் சாதிவெறிபிடித்த இளையசமுதாயத்தைத்தான் அடுத்து உருவாக்கி இருக்கின்றோம் என்றால், இது எவ்வளவு ஆபத்தானது


எல்லாம் சாதி வாக்கு கொடுமை.


அது என்னமோ தெரியவில்லை தமிழகத்தில் போலிஸ் சுடுபட்டு இறந்தவர்களுக்கு எல்லாம் வீரவணக்கம் செலுத்திகொண்டிருக்கின்றார்கள், கீழத்தூவல் கிராமம், வீரப்பன், வெங்கடேச பணையார் என வரிசை பெரிது.


மலையூர் மம்பெட்டியான், கரிமேடு கரிவாயன், சீவலபேரிபாண்டி போன்ற சமீபகால இதிகாச நாயகர்களை எப்படி மறந்தார்கள் என் தெரியவில்லை, நினைவுபடுத்தியாயிற்று இனி அவர்கள் பார்த்துகொள்ளட்டும்


ஆனால் கன்னியாகுமரி லிங்கம் எப்படி மறக்கப‌ட்டார்?


லிங்கம் அவ்வகையில் பரிதாபம், வீரவணக்கம் அழிச்சாட்டியம் எல்லாம் அவருக்கு செய்ய யாருமே இல்லை. ஏன் என்று தெரியவில்லை


ஆனால் செல்வின், வெஙகடேசனை எல்லாம் விட மாபெரும் "வீரன்" அவர்தான்


வெங்கடேசன், செல்வின் போன்றோர் சில இலக்குகளை குறிவைத்து தாக்கியதாக கருதபட்டவர்கள். ஆனால் மாவீரன் அலெக்ஸாண்டர் போல கண்ணில்பட்டதெல்லாம் எனது இலக்கே என முரசரைந்து மொத்த கன்னியாகுமரி மாவட்டத்தையும் அலற வைத்த மாவீரன் அவர்.


சசிகலா புஷ்பாவின் புரட்சியிலாவது அவருக்கும் "வீரவணக்கம்" நடக்கும் என கன்னியாகுமரி மக்கள் எதிர்பார்க்கலாம்






No comments:

Post a Comment