Thursday, September 15, 2016

மாணவர்களே, படிப்பினை தொடருங்கள்.

மாணவர்களே கோபம் கொள்ளுங்கள் போராடுங்கள் : தீக்குளித்த மாணவர் கடிதத்தில் செய்தி


இவனை விடுங்கள், எப்படியும் போகட்டும். பைத்தியக்காரன்.


மாணவர்களே, இவனை போன்ற மண்டை கழற்றி அரசியல்வாதிகளின் கால்களில் வைத்துவிட்டு போராட வந்தவர்களால்தான் தமிழகம் நாசமாய் போயிற்று


படிக்காமல் ஆயுதம் ஏந்தி போராடியதால்தான் அண்டை நாடு நாசமாயிற்று


நீங்கள் படியுங்கள், சிந்தியுங்கள்


உங்களுக்கு காலம் இருக்கின்றது, வாய்ப்புக்கள் பின்னால் இருக்கின்றன‌


உங்களை நம்பி இருக்கும் குடும்பங்களை பாருங்கள், அதனை ஓவ்வொருவரும் உருபடியாக பொறுப்பாக கவனித்தாலே நல்ல மாற்றத்தை உருவாக்கலாம்


இந்த வோட்டு பொறுக்கிகளுக்கு வேறு தொழில் தெரியாது, இப்படி எதனையாவது சொல்லி எவனையாவது கொன்று உணார்ச்சி அரசியல் நடத்துவது அவர்கள் பொழப்பு


உங்கள் பிழைப்பினை நீங்கள் பாருங்கள், இந்த அறிவுகெட்டவனை எல்லாம் கெட்ட கனவாக மறந்துவிடுங்கள்.


கல்வியே உயர்வுக்கு வழி


அந்த பெற்றோரை நினைத்து கண்ணீர் விடுகின்றோம்,


இந்த சமூகத்தில் பத்திரிகை, ஊடகம், போலி அரசியல்வாதிகள் என எல்லோரிடமிருந்தும் தங்கள் பிள்ளைகளை காப்பாற்றும் பொறுப்பு பெற்றோருக்கு இருக்கின்றது என்பதை உணர்த்தும் சம்பவம் இது


பருந்துக்கும், கழுகுக்கும், காக்கைக்கும் தன் குஞ்சுகளை கொடுக்காமல் செட்டைக்குள் வைத்து பாதுகாக்கும் தாய் கோழி போல, அவர்கள் நிறைய பிள்ளைகளுக்கு சொல்லிகொடுக்க வேண்டி இருக்கின்றது.


அவ்வகையில் நான் கொடுத்துவைத்தவன் என் தந்தை எல்லாமும் எனக்கு போதித்தார், எது எதன் மூலம்? யார் எப்படிபட்டவர்கள்? எது உண்மை? எது வீண் ஆரவாரம், எது இனவாதம்? எது நாட்டுபற்று? என ஒரு நாளைக்கு 10 நிமிடமாவது போதித்தார்


அதனால்தான் சில விஷயங்களை கலங்கல் இல்லாமல் தெளிவாக பார்க்கமுடிகின்றது.


பெற்றோரே உங்கள் ஒவ்வொருவருக்கும் போலி அரசியல்வாதிகள் முகம் தெரியும், அதனை பகிரங்கமாக சொல்லமுடியாவிட்டாலும் 4 சுவர்களுள்ளாவது பிள்ளைகளுக்கு சமூக பொறுப்போடு சொல்லிகொடுங்கள்


பிள்ளைகளே இந்த சமூகத்தை காக்க கிளம்புகிறேன் என செல்லுமுன் உங்கள் பெற்றோருக்கு என்ன செய்துவிட்டீர்கள் என உங்களையே கேள்விகேட்டு கொள்ளுங்கள், காரணம் அவர்களும் இந்த சமூகத்தில் ஒரு பக்கம்


அவர்களை கதற வைத்துவிட்டு என்ன மாற்றத்தினை கிழித்துவிடுவீர்கள்?


இதோ சீமான் உயர்த்திபிடித்தானே பிரபாகரன் படம். அந்த பிரபாகரன் தாய்க்கு செய்தது என்ன? தானும் செய்யாமல் மற்றவர்களையும் செய்யவிடாமல் அனாதையாக சாகவிட்டான், அவனா ஈழ மக்களை காப்பாற்றுவான்?


ஆனால் தமிழக அரசியல் உலகினை பாருங்கள், அவர்கள் நல்லவர்கள் இல்லை, அரசியலுக்கான எந்த தகுதியும் அவர்ர்களுக்கு இல்லை, ஆனால் உச்சம் தொட்டிருப்பார்கள்


கூர்ந்துபார்த்தால் அவர்கள் தாயினை தெய்வமாக வணங்கி இருப்பார்கள், ஈன்றவள் நெஞ்சினை குளிரவைத்திருப்பார்கள்


அன்னையினை தந்தையினை வணங்குங்கள், நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அவர்களை மனதில் கொண்டு செய்யுங்கள், நீங்கள் விரும்பும் மாற்றம் அமைதியாய் நிகழும்


இந்த போலிகளின் கூச்சல் நம்பி சாக துணிந்த இவனை எல்லாம் ஒரு புள்ளிக்கு கூட மனதில் நினைக்காதீர்கள்


படிப்பினை தொடருங்கள்.

No comments:

Post a Comment