Wednesday, September 28, 2016

தமிழ்நாட்டில் இலக்கியவாதிகள் தொந்தரவு தாங்கமுடியலடா சாமி

https://youtu.be/iy0xpl5NztA

The Writer Who Extended The Boundaries - எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்


ஜெயகாந்தனின் படைப்புகளில் கலைதன்மை இல்லை : ஜெயமோகன்


கலைஞர் எழுதியது வசனமே அல்ல, பெரியார் செய்தது புரட்சியே அல்ல, சிவாஜி நடித்தது நடிப்பே அல்ல , என முன்பு சொன்னவருக்கு ஜெயகாந்தனை சொல்ல எவ்வளவு நேரமாகும்.


கண்ணதாசன் எழுதியது கவிதையே அல்ல, கண்ணதாசனை விட என் தேவதேவன் பெருங்கவிஞன் என கொஞ்சமும் சிரிக்காமல் சொன்னார்


(யார் அந்த மகாகவி தேவதேவன் என நீங்களே தேடுங்கள்)


கொஞ்சநாளைக்கு முன்பு பாரதியார் மகாகவியா என இவரும் இவரின் அடிப்பொடிகளும் விவாதித்ததும், பின் அவர் கவிஞர்தான் ஓகே, ஆனால் மகா கவிஞன் அல்ல என இவர்களே முடிவு செய்து பஞ்சாயத்தினை கலைத்தார்கள்.


பாரதியாரை யார் தரம் பிரிக்கின்றார்கள் பார்த்தீர்களா? 4 காக்கைகள் சேர்ந்து சூரியனை ஆராய்ச்சி செய்த கொடுமை அது.


ஜெயகாந்தனின் எழுத்துக்கள் ஆயுதம் போன்றவை, அதில் என்ன கலையும் அழகும் வேண்டியிருக்கின்றது?


இந்த மனிதர் சும்மாவே ஒருமாதிரியானவர், இப்பொழுது அவரின் வெண்முரசினை படித்தால் வியாசரே தற்கொலை செய்யலாம்


இப்பொழுது சிங்கப்பூர் சூர்யரத்னா இவரை போட்டு தாக்க, இவரோ ஜெயகாந்தனை இழுக்கின்றார்


அவர் மட்டும் இருந்திருந்தால் இப்பொழுது நடப்பதே வேறு....


நெல்லை வழக்கு மொழிகளுக்கு வசனம் எழுதுவதை விட ஜெயமோகன் என்ன கிழித்தார் என தெரியவில்லை. அவரினை மதித்து, கடல் படத்தில் அனுமதித்த மணிரத்னம் அதன்பின் கடலிலேதான் விழுந்துகிடந்தார்.


காவிய தலைவன் தயாரிப்பாளர் தலையினை வாங்கிற்று, இவ்வளவுதான் அன்னாரின் திறமை.


பாபநாசம் படத்தில் வசனம் என்றார்கள், அந்த வசனத்தை நடிகர் நெல்லை சிவா கூட அழகாக எழுதுவார்.


சுஜாதா இவரின் எழுத்தினை பற்றி புகழவில்லையாம், (அவர் சரியாகத்தான் கணித்திருக்கின்றார்) அன்னாருக்கு கோபம் பொத்துகொண்டு வந்தது, பல இடங்களில் அவரை சாடினார்


காரணம் விஷ்ணுபுரம் எனும் இவரின் நோபல் பரிசு பெற தவறிய கதைக்கு அவர் முன்னுரை எழுதவில்லையாம்.


அவர் சுஜாதாவா? அல்லது ஒரு டீக்கு ஜாமீன் கையெழுத்துபோடும் பிளாட்பாரவாசியா?


ஆனாலும் பழிவாங்கபோகின்றேன் என‌ சில இம்சை கதைகளை எழுதிவிட்டு, நான் தான் அடுத்த சுஜாதா என கிளம்பிய இவர் சினிமாவில் பட்ட அடியில் சில உண்மைகளை கண்டிருக்கலாம்,


அதாவது சுஜாதா வேறு, அவரின் திறமை தன்மை அறிவு வேறு,


அதனை இன்னும் வாய்விட்டு அன்னார் சொல்லவில்லையே தவிர உணர்ந்துகொண்டார்,


சுஜாதா எவ்வளவு பெரிய ஜாம்பவான் என்பது மணிரத்னம், ஷங்கள் படங்களின் அந்நாளைய வெற்றியில் தெரியும், அவர் தொடாத துறைகள் இல்லை


சுஜாதா இடத்தினை நிரப்புகின்றேன் என சென்று இவர் சாதித்தற்கு கடல் படமே சாட்சி.


அவ்வகையில் ஜெயமோகன் புலியினை பார்த்து சூடுபோட்ட பூனையாக இருக்கலாம்


என்னமோ விஷ்ணுபுரம் என ஒரு புத்தகம்
எழுதினாராம், அதுக்கொரு ரசிகர் மன்றமாம்,


அதில் ஆண்டுக்கொரு விருதும் கொடுப்பார்களாம்


இவர் கூட்டத்தில் சில கவிஞர்களும் உண்டு, மனுஷ் வகை. அதில் ஒரு அழுகை, அழகு என ஒரு உணர்ச்சியும் இருக்காது அழுகை தவிர‌


இவர்தான் ஜெயகாந்தனின் எழுத்துக்களை தரப்படுத்துகின்றாராம்


எல்லாம் காலகொடுமை, ஏதும் சொன்னால் உனக்கு இலக்கியம் பற்றி என்ன தெரியும் என சாடுவார்கள்.


40 பக்கம் கிறுக்கி வைத்துவிட்டு நான் இலக்கியவாதி என கிளம்புபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே வருகின்றது, இதில் எவனாவது அங்கீகரிக்கபட்டவனா என்றால் இல்லை.


அதனால் அவர்களே ஒரு கும்பலாக கூடி ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி அங்கீகரித்துகொண்டே இருக்கின்றார்கள்.


அதில் அடிக்கடி விருதுகளும் கொடுத்துகொண்டிருக்கின்றார்கள்.


விரைவில் நோபல் பரிசையே தங்களுக்கு தாங்களே மாற்றி மாற்றி கொடுத்து சந்தோஷம் அடைவார்கள் போல தெரிகின்றது, நிலமை அவ்வளவு மோசமாகிவிட்டது


அடடடா.........தமிழ்நாட்டில் இலக்கியவாதிகள் தொந்தரவு தாங்கமுடியலடா சாமி..

No comments:

Post a Comment