Sunday, September 4, 2016

புனிதர் பட்டமும் , தமிழக புண்ணியவான்களும்...

அன்னை தெரசாவிற்கு புனிதர் பட்டம் வழங்கும் நன்னாளில் பொதுத்தொண்டாற்ற உறுதியேற்போம் :ஸ்டாலின்


உங்கள் தந்தை கூட இப்படி பகீர் ரக பாவங்களை செய்ததில்லை, மனசாட்சிபடி சொல்லுங்கள்?, அந்த அன்னைக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? அவர் பெயரினை சொல்ல என்ன அருகதை உண்டு? அவர் வாழ்ந்த காலத்தில் ஆளும்கட்சியாக இருந்த நீங்கள் அவருக்கு செய்த மரியாதை என்ன?




உங்கள் அரசியலுக்கு பெரியார் அண்ணா பட்டுகோட்டை அழகிரி என வரிசை உண்டு, புனிதமான இந்த பெயர் உங்களுக்கு வேண்டாம்


அவர் புனிதர் வரிசைக்கு சென்றுவிட்டவர், நீங்களோ இன்னும் மனிதர் வரிசைக்கும் வராதவர்கள்.


தீப்பொறி ஆறுமுகம் போல எல்லா கட்சிகளிலிருந்தும் அவமானமாக திட்டி தீர்த்தவரை பார்த்துவிட்ட கையோடா அன்னை தெரசாவினை பற்றி பேசுகின்றீர்கள்? கொஞ்சமேனும் மன சாட்சி உண்டா?


தெரசாவின் வாரிசாக நிற்கும் சகோதரிகளின் நிலை என்ன? உங்கள் பின் நிற்கும் திமுகவினரின் சொத்து மதிப்பென்ன?


அப்படி தெரசாவின் எந்த கிளை தமிழகத்தில் வர அனுமதித்தீர்கள்? அல்லது கொட்டி கொடுத்தீர்கள்? ஒரு அரை பிஸ்க்ட் அல்லது பழைய வேட்டி அவர் ஆஸ்ரமத்திற்கு கொடுத்திருப்பீர்கள்?


அவருக்கு இந்த உலகம் கொட்டிகொடுத்ததை எல்லாம் பொதுநலனிற்காக கொடுத்தவர் அன்னை, ஆனால் தமிழக பொதுநலமிற்காக கிடைத்ததை எல்லாம் சுயநலனிற்கு பயன்படுத்திகொண்டர்கள் நீங்கள்


அவர் பாவம், இன்றுதான் அவரை தெய்வமாக அறிவித்திருக்கின்றார்கள், உங்கள் மவுனமே அவருக்கான சரியான பதில்


மறாக இப்படி எல்லாம் உருகி ஓவர் ஆக்டிங் செய்தால் உங்களின் உண்மையான அருவெறுப்பான முகம் வெளிப்படும்


வேண்டாம், அவருக்கும் உங்களுக்கும் ஏணி வைத்தால் கூட, ஏன் ஏணியே வைக்கமுடியா மகா இடைவெளி


அந்த புண்ணியவதியின் பெயர் வேண்டாம், மாறாக உங்கள் கம்பெனி பெண்களின் பெயர்களில் ஏதாவது ஒன்றை பயன்படுத்திகொள்ளுங்கள்


அன்னை தெரசாவினை அவருக்கான இடத்தில் விட்டுவிடுங்கள், அவர் அன்னை தெரசா, மாறாக தயாளு அம்மாள் அல்ல, நான் சொல்லவந்தது வழக்கிற்கு பயந்து தான் நோயாளி என காட்டிகொண்ட அந்த தயாளு அம்மாள்.


தெரசாவினையாவது விட்டு விடுங்கள் அய்யா, தயவு செய்து.






வாடிகனில் தெரசா தெய்வம் என அறிவித்தால் திமுகவினர் வரவேற்பார்களாம், ஆனால் முனீஸ்வரனோ அல்லது சுடலைமாட சாமியோ தெய்வம் என்றால் அது மூட நம்பிக்கையாம், பகுத்தறிவு வேண்டுமாம்.


போப் செய்தால் வரவேற்பு, அதுவே தமிழகத்தில் பன்னெடுங்காலம் முன்பு நடந்திருந்தால் மூட நம்பிக்கை.


இந்த நம்பிக்கையினை கொண்டிருக்கும் திமுகவின் தொண்டன் தானொரு பகுத்தறிவுகாரன் என பெருமை கொள்கிறான். அவ்வளவு பரிதாமகரமாய் இருக்கின்றது அவர்கள் கொள்கை, இவ்வளவு பரிதாபத்திற்குரிவர்கள்தான் அவர்கள்




அவர்களை பார்க்கும்பொழுது பாலும் பழமும் படத்தில் எம்,ஆர் ராதாவிடம் சிக்கியிருக்கும் அப்பாவி வைத்தியனின் நிலைதான் நினைவுக்கு வருகின்றது, பரிதாபம்


அடேய், உங்களை விரட்டாமல் தமிழகத்தில் ஒரு மாற்றமும் சாத்தியமில்லை, தலைவனாவது சந்தர்ப்பவாதி அப்படித்தான்,


ஆனால் பின் செல்லும் மந்தைகளை முதுகிலே போடவேண்டும்




No comments:

Post a Comment