Wednesday, September 28, 2016

சார்க் மாநாட்டில் மோடி பங்கேற்க மாட்டார்




பாகிஸ்தானில் நடைபெறும் சார்க் மாநாட்டில் மோடி பங்கேற்க மாட்டார் : இந்திய வெளியுறவுத்துறை அறிவிப்பு


சொல்லிகொண்டே இருங்கள், ஒரு அறிவிப்பும் இன்றி, பாகிஸ்தானின் அழைப்பும் இன்றி திடீரென நவாஸ் ஷெரிப் முன் பாகிஸ்தானில் தரிசனமாகி அவருக்கு கேக் ஊட்டிவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்த வரலாறு மோடிக்கு உண்டு.


அன்று வானிலிருந்து சடீரென்று குதித்தவர், இப்பொழுது உருளைகிழங்கு மூட்டையில் மறைந்தாவது செல்லும் சாத்தியம் இருக்கின்றது





அதனால் எதற்கும் மாநாடு முடிந்தபின் அறிக்கை விடுவது நல்லது. அது ஒருபுறம் இருக்கட்டும்

பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரின் அளவினை கட்டுபடுத்தி பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர மத்திய அரசு ஆலோசனை செய்கின்றதாம்

யார் அந்த குழுவில் இருக்கின்றார்கள் என தெரியவில்லை, இந்த வாட்டாள் நாகராஜ், தேவகவுடா, எடியூரப்பா வகையறாக்களுக்கு
ஆற்றுநீரை தடுப்பது எப்படி என்பது கைவந்த கலை. அவர்களை நிச்சயம் அந்த குழுவில் சேர்க்கவேண்டும்.

அதன்பின் பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர் செல்வதை பார்த்துவிட முடியுமா?

பாகிஸ்தான் ஐ.நாவிலே முறையிட்டாலும் எப்படி சமாளிக்கவேண்டும் என்ற வித்தை அவர்களிடம் உண்டு, காவேரி விவகாரத்தில் அப்படித்தான் செய்துகொண்டிருக்கின்றார்கள்.

ஆக பிரதமர் அலுவலகம் சிந்துநதி விவகாரத்தில் வாட்டாள் நாகராஜ் மற்றும் கன்னடர்களிடம் ஆலோசனை கேட்பது நல்லது,
காவேரி டெல்டா போல பாகிஸ்தானை சுடுகாடாக்கும் அற்புத திட்டம் அரை நிமிடத்தில் தயாராகிவிடும்

வேண்டுமானால் பிரதமர் தமிழக காவேரி பாசன பகுதியினை சுற்றிபார்க்கட்டும், அவருக்கே கன்னடர்களின் "திறமை" விளங்கும்.

இப்படிபட்ட அனுபவஸ்தர்களை விட்டுவிட்டு டெல்லியில் அப்படி என்ன சிந்து நதி தடுப்பு பற்றி விவாதிக்கின்றார்களோ தெரியவே இல்லை.

எப்படியோ விரைவில் சிந்துநதியினை தடுத்து தொலையுங்கள் மத்திய அரசே

காரணம் ஐ.நாவில் பாகிஸ்தான் வைக்கபோகும் நியாயங்களை வைத்துதான், அதே நியாயத்தை காவேரி விவகாரத்தில் நாங்களும் உங்களை நோக்கி உள்வீட்டில் கேட்கமுடியும்.

இனி பாகிஸ்தானுக்கு சிந்துநதியில் உலகம் சொல்லபோகும் நியாயத்த்தை காவேரியில் தமிழருக்கும் கொடுத்தே தீரவேண்டி இருக்கும்

ஆனாலும் மோடி பெரும் ராஜதந்திரி, கன்னடர்களை வழிக்கு கொண்டுவர எப்படி சிந்துநதி வைத்து விளையாட்டினை தொடங்கிவிட்டார் பார்த்தீர்களா?

ஒரே கல்லில் இரண்டு தாமரை, இல்லை மாங்காய் என தமிழக பாஜகவினர் கன்னத்தில் போட்டு மகிழலாம்

ஆதலால் வாட்டாள் நாகராஜ் சிந்துநதி ஒழுங்காக பாகிஸ்தானுக்கு போகும் வரைதான் உங்களுக்கு ஆட்டம். அங்கு ஏதும் உலக நாட்டாமை பஞ்சாயத்து என்றால் உங்களுக்கும் பொருந்தும், யோசியுங்கள்.

முடிவுக்கு வந்தாயிற்றா?

எங்கே ஆரம்பியுங்கள் பார்க்கலாம்,

"ஏய் இந்திய அரசே ஒழுங்காக பாகிஸ்தானுக்கு சிந்துநதியினை கொடுத்துவிடு..., காவேரி எங்களுக்கே.. சிந்து பாகிஸ்தானிற்கே"

மத்திய அரசே காவேரி ஆணையத்தை விட அவசரமாக நீங்கள் செய்யவேண்டியது சிந்துநதி நிறுத்தம், அதனை விரைவாக செய்யுங்கள்

அதன் பின்னர்தான், உலக பஞ்சாயத்து முடிந்தபின்புதான், அது மண்டையில் கொட்டியபின்புதான் காவேரியில் தமிழன் வலி உங்களுக்கு புரியும்

ஆக முதலில் அதனை செய்யுங்கள், அது தேசத்திற்கு எப்படியோ?, தமிழனுக்கு மிக உதவியாக இருக்கும்.






No comments:

Post a Comment