Monday, September 5, 2016

ஓட்டுநர் இல்லா காரினை சோதித்தது சிங்கப்பூர்


Stanley Rajan's photo.


ஓட்டுநர் இல்லா காரினை சோதித்தது சிங்கப்பூர், ஓட்டுநர் இல்லா தானியங்கி பேருந்தினை அறிமுகபடுத்தியிருக்கின்றது பிரான்ஸ், மிக விரைவில் அறிமுகபடுத்தபோவதாக சீனா அறிவிப்பு


மாறிகொண்டே இருக்கும் உலகம் இது, வருங்காலத்தில் இனி வாகன‌ ஒட்டுநர் தேவைபட மாட்டார். ஜிபிஸ் முதலில் பயன்படுத்தியபொழுதே இது அடுத்தகட்டம் என அடித்து கூறினார்கள் இதோ வந்துவிட்டது.


பிரான்ஸில் அறிமுகபடுத்தியிருக்கும் இச்சேவை சிறிய பஸ். மின்சாரத்தில் இயங்க கூடியது 15 பேர் பயணிக்கலாம், 10 நிமிடம் இப்பொழுது அனுமதி என்கின்றார்கள், பெரும் புரட்சிகள் இப்படித்தான் தொடங்கும். அன்று ரைட் விமானத்தில் முதலில் பறந்தது 10 வினாடிகளே.


அங்கே பெரும்பாலும் மெட்ரோ ரயில்கள் தானியங்கிகள், மகா துல்லியமாக செயல்பட்டுகொண்டிருப்வை. இனி பேருந்தும் சேர்ந்துவிடும்.


உடனே சிலர் எச்சரிக்கை மணி அடிக்க ஆரம்பித்துவிட்டனர். இனி ஓட்டுநர் வேண்டாம், வேலை இழப்பு, டிரைவிங் ஸ்கூல் மூடல் என பெரும் கருத்து கணிப்புகள்


ஒன்று கவனிக்கலாம், இன்று அன்றுபோல் வங்கியில் சென்று பணம் எடுப்பது, செக் கொடுப்பது, பணம் போடுவது எல்லாம் இல்லை. ஒரு ஏடிஎம் செண்டருக்கு போனால் சகலமும் சுபம், எளிது. அது வேலை வாய்ப்பினை பறித்தது என சொல்லமுடியிமா?


முடியாது, காரணம் பின்னால் இருக்கும் மனித கண்காணிப்பு அப்படி. ஒரு சிக்கல் வந்தால் அவ்வளவுதான். பெரும் மூளை உழைப்பு பிண்ணணியில் தேவைபடும் பணி அது.


அது என்றெல்ல எதெல்லாம் தானியங்கி என மக்களுக்கு எளிதான பயன்பாட்டினை தருகின்றதோ, அதன் பின்னால் இருக்கும் பணியாளர்கள் எண்ணிக்கையும், உழைப்பும் மகா பெரியவை


வருங்கால உலகமும் அப்படித்தான் இருக்கும், எல்லாம் தானாக இயங்கினால் போல் தோன்றினாலும் பின்னால் மனித உழைப்பு இருந்துகொண்டே இருக்கும். ஆக பணியார்களுக்கான தகுதிகள் வேறு மாதிரி இருக்கும், அதனைத்தான் வளர்த்த்து கொள்ள‌ வேண்டும்.


காலம் மாறக்கூடியது, ஒருகாலம் இருக்கும் தேவை இன்னொரு காலம் வேறுமாதிரி மாறக்ககூடியது. எந்திரங்கள் அந்த தேவைகளில் உதவுமே தவிர, அடுத்த கட்டத்திற்கு அவற்றை நகர்த்த மனிதனே தான் வேண்டும். மனித சக்தி தான் வேண்டும்


இக்கால மாற்றம் பிழையாகாது, அன்றே சொல்லியிருக்கின்றார்கள் முன்னோர்


"பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல்ல கால வகையினாலே"


இப்படி சொன்ன தமிழகத்தில்தான், உலகமெல்லாம் அட்டகாசமான பேருந்துகள், ஆளில்லா பேருந்துகள் எல்லாம் அசத்திகொண்டிருக்க, இங்கோ மகாத்மா காந்தி, நேரு காமராஜர் கால பேருந்துகள் இன்னும் ஓடிகொண்டிருக்கின்றன‌


tr


விரைவில் உலகின் மிக பழமையான பேருந்துகள் ஓடுமிடம் என தமிழகத்தை சொல்லலாம், இதில் பஸ்நிலையம் எல்லாம் வைபை வைக்கின்றார்களாம்


தகவல் தொடர்பினை இந்நூற்றாண்டுக்கான வேகத்தில் கொடுத்துவிட்டு, பேருந்தினை கடந்த நூற்றாண்டு பாணியிலே வைத்திருப்பது எவ்வகையோ..  பிள்ளையாருக்கே வெளிச்சம்.


உலகில் சில பழக்கம் உண்டு, பழமை விரும்பிகள் என்ன செய்வார்கள்? பழைய மாடல் காரினை போலவே மாடல் செய்து நவீன எஞ்சின் பொருத்தி ஓடுவார்கள். இன்றும் ஹென்றி போர்டு கார் மாடல், ஹிட்லர் காலத்து மாடல் எல்லாம் சாலையில் ஓடுவதை பல நாடுகளில் காணலாம்.


தமிழக அரசுக்கும் அப்படி ஒரு பழமையான ஆசை இருக்கலாம். எம்ஜி ராமச்சந்திரன், அண்ணா என சில பழமையினை இழக்க விரும்பாதவர்களாக இருக்கலாம்


ஆனால் எல்லாம் ஒழுங்காக சீரமைத்துவிட்டாவது ஓட விடலாம் அல்லவா? போகட்டும் ஏதும் சொன்னால் நம்மை டிராபிக் ராமசாமி வரிசையில் வைத்துவிடுவார்கள், யார் வைப்பார்கள்? நிச்சயம் அவர்கள் அல்ல,


மாறாக தமிழக மக்கள்.


என்ன செய்வது வெளிநாட்டில் ஓட்டுநர் இல்லா பேருந்தினை இயக்குகின்றார்கள். நாமும் சும்மா இல்லை டயர் இல்லா, கூரை இல்லா, சில சமயங்களில் ஸ்டியரிங் கூட இல்லா பேருந்தினை இயக்கிகொண்டுதான் இருக்கின்றோம்.


அவன் டிரைவர் கூட இல்லா பேருந்தினை விட்டு அசத்துகின்றான், நாமோ பயணிகள் எல்லாம் சேர்ந்துதள்ளும் பேருந்தினை வைத்து காலம் கழித்துகொண்டிருக்கின்றோம்


... ண்ணா சும்மா இல்லை.













No comments:

Post a Comment