Thursday, September 29, 2016

இலக்கியத்தை காப்பாற்ற வந்தவர்கள் ....

இலக்கியத்தை காப்பாற்ற வந்தவர்கள் டால்டாய்ஸ், தத்வோஸ்கி, லத்தீன் அமெரிக்க இலக்கியம், சீன டிங் டாங் இலக்கியம், பெர்சிய இலக்கியம் என காதில் ரத்தம் வருமளவு இலக்கியம் பேசுபவர்கள் எல்லாம் ஏன் சிங்கப்பூருக்கே சென்று சர்ச்சை வளக்க வேண்டும்


இந்த பின் நவீனத்துவம், தொன்மம், படிமம் , ஆழ்மம், புரிதல், சொரிதல், சொல்லாடல், கல்லாடல் (கல் எறிவது), ஆத்மானுபவம், உள்ளோளி என இலக்கிய இம்சைகளை ஆப்கன், ஈரான்,சீனா, நைஜீரியா, மெக்ஸிகோ, போன்ற நாடுகளில் சென்று வளர்த்தால் என்ன?


சிங்கப்பூருக்கு சென்று மட்டும்தான் சென்று வளர்க்கவேண்டுமா? சிங்கப்பூர் எழுத்தாளரின் எழுத்தை மட்டும்தான் விமர்சிக்க வேண்டுமா?




இதனை பற்றி எல்லாம் நாம் பேசகூடாது,


பேசினால் உனக்கு இலக்கியத்தை பற்றி என்ன தெரியும் என்பார்கள்


மக்களை யோசிக்க வைக்காத, நாட்டுபற்றை வளர்க்காத, சமூகத்திற்கு நல்ல கருத்தினை சொல்லாத, வரலாற்றினை சொல்லாத‌ எதுவும், குறைந்தபட்சம் மொழி அழகு கூட இல்லாதது இலக்கியமே அல்ல,


அது குப்பையே


முன் நவீனத்துவம், பின் நவீனத்துவம், நடு இடுப்பு தத்துவம், ஆத்மம், பிரக்ஞை, கவிதானுபவம் போன்ற இம்சைகளால் இந்த உலகிற்கும், மக்களுக்கும் கிடைக்கும் நன்மை என்ன? ஒரு மண்ணாங்கட்டியும் இருக்க முடியாது.


இன்றைய தமிழக இலக்கிய உலகம் அப்படிபட்ட மனபிறழ்ச்சி அடைந்த சிலரால் நிரம்பி இருக்கின்றது, அவர்கள்தான் இலக்கியவாதிகளாம், அவர்கள் சொல்வதுதான் விமர்சனமாம்.


அவர்கள் படைப்பதுதான் இலக்கியமாம், என்ன கொடுமையோ தெரியவில்லை,


இத்தலைமுறை வாங்கி இருக்கும் இலக்கிய சாபம் அப்படி.


இலக்கியவாதிகளிடமிருந்து தமிழகத்தை காப்பாற்ற தனி சட்டம் இயற்றும் அளவிற்கு இம்சைகள் வளர்ந்துகொண்டிருக்கின்றன.


சும்மா திண்ணையில் மல்லாக்க படுத்துகொண்டு எதனையாவது எழுதிவைத்துவிட்டு அதனை வைத்து பேசிகழுத்தறுப்பது என்பது இப்பொது இலக்கிய விமர்சனம் என்றாகிவிட்டது.


நாட்டிற்காக உழைத்துவிட்டு அதன் பின் 4 வரி எழுதட்டும் என ஒரு சட்டமியற்றட்டும், எவனாவது ஒருவன் எழுத வருவான்?



No comments:

Post a Comment