Thursday, September 29, 2016

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி


ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியும் நடைபெறவில்லை நடந்தவரைக்கும் ஒரு அறிக்கையுமில்லை.


Stanley Rajan's photo.


கேட்டால் பதில் இருக்காது, கம்மென்று இருப்பார்கள்.


நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஆதிச்சநல்லூரில் கிடைக்கபெற்றது என சில பொருள்களை பார்த்த நினைவு உண்டு அவ்வளவுதான். சென்னை எழும்பூர் மியூசித்தில் சில பொருட்கள் உண்டு. அவ்வளவுதான் ஆதிச்சநல்லூர் ஆராய்சி.


பொருளாவது மிஞ்சி இருக்கின்றது.


பண்டைய மதுரை பற்றி ஏற்கனவே குறிப்புகள் உண்டு, இப்பொழுது இருப்பது பண்டைய மதுரை அல்ல, அது சற்று தள்ளி வேரொரு இடத்தில் இருந்தது, பின்னாளில் அது அழிந்து அருகில் இப்போது இருக்கும் மதுரை உருவானது என கருத்துக்கள் உண்டு.


அதற்கு வலுசேர்க்கும் வகையில்தான் கீழடியில் ஒரு தென்னந்தோப்பில் கிடைத்த சில அடையாளங்கள், ஒரு பெரும் ஆராய்ச்சிக்கு அடிகோலின, அது தொடர தொடர தமிழர் பழங்கால ஆவல் கொண்டோர் அதிரத்தான் செய்தனர்.


Stanley Rajan's photo.


மதுரை கீழடியில் அவ்வளவு பெரும் நாகரீகம் உறங்கி இருக்கின்றது, நிச்சயம் அது சிலப்பதிகார காலத்தோடு தொடர்புடையதாகவே இருக்கும், அல்லது அதற்கு முந்தைய காலமாகவும் இருக்கலாம்


சரி கிடைத்த பொருளை மதுரையிலே வைக்கவும் ஒரு ஏற்பாடும் செய்யபடவில்லை, எங்கோ கொண்டு செல்லபோகின்றார்களாம்


ராணி மங்கம்மாவின் மாளிகையினை காந்தி மியூசியம் என மாற்றி அழிச்சாட்டியம் செய்தார்கள். அந்த மாளிகை முழுக்க காந்தி பொருளா குவிந்திருக்கின்றது? அதன் ஓரத்தில் வைக்கலாம் அல்லவா?


நாயக்கர் மகாலில் ஒரு ஓரமாக கூட இந்த அருமையான பழம் பொருளை வைக்கலாம், மதுரையில் இடமா இல்லை?


எங்கோ கொண்டு சென்று என்னமோ செய்ய போகின்றார்கள்


தமிழர், தமிழ் என குரல்கொடுத்த திமுகவினை காணவில்லை, சரி அவர்களை அகற்றிவிட்டு தமிழர் ஆட்சி அமைப்போம் எனும் தமிழ் இன உணவாளர்களையும் காணவில்லை


சிங்களம், கன்னடம், ஆந்திரா என்றே அவர்களின் இனமானம் ஓடிகொண்டிருக்கின்றது


விசித்திரமாக இந்த பொருட்கள் எல்லாம் அங்கே கிடைத்தால் தமிழகத்திற்கு கொண்டுவரவேண்டும் என குரல்கொடுப்பார்கள். இங்கே கிடைத்தால் எங்கேயும் கொண்டுபோகட்டும் என அடங்கிவிடுவார்கள்


முதல்வர் மருத்துவமனையில் இருந்தாலும் ஆட்சி அவர் செய்வதாகவே சொல்லபடுகின்றது, என்ன செய்யபோகின்றாரோ தெரியவில்லை


அழிச்சாட்டியக்காரர் என்றாலும் இப்பிரச்சினையில் உருப்படியான கருத்தினை, அதாவது மதுரையிலே இப்பொருட்களை வைக்கவேண்டும் என சொன்னவர் டாக்டர்.ராமதாஸ் மட்டுமே


அவர் வழகமாக காமெடி கருத்துக்களை சொல்வதால், இந்த சீரியசான கருத்தினை யாரும் கண்டுகொள்ளவில்லை, மனிதர் உருப்படியாக பேச தொடங்கி இருக்கின்றார். தேர்தல் இம்சை இவரை மாற்றாமல் இருக்கட்டும்


இதுவும் இந்து கலாச்சாரம் தான், கீழடியில் கிடைக்கபெற்றவை இந்து சமய மக்களின் பொருளாக இருக்கலாம் என பிஜேபி மக்களிடம் சொல்லி, இவைகளை பாதுகாப்போம், ஒருவேளை சிவபெருமான் மதுரைக்கு மாப்பிள்ளையாக வந்து திருவிளையாடல் நடத்தியகாலமாக இருக்கலாம், காப்பாற்றுங்கள் என்றாலும் அவர்கள் போராட்டம், அறிக்கை என கடும் பிசி.


கடந்த சிலமாதங்களாகவே உலகமே இதனைபற்றி பேசதொடங்க, தமிழகம் அதே சினிமா, அரசியல், சாதி, சுவாதி, தியாகி ராம்குமார், சமூக சேவகி நடிகை ராதா போன்ற செய்திகளிலே மிக கவனமாக இருந்தது.


பெரும் பாரம்பரிய அடையாளத்தினை மீட்கும் முயற்சி நம் கண்முன்னே சறுக்கி இருக்கின்றது.


தமிழகம் எதனை எல்லாமோ இழந்தது, இதனையும் இழக்க இருக்கின்றது


நமது மனம் துடித்தலும், இது அரசுகள் முடிவெடுக்கவேண்டிய பிரச்சினை, காரணம் இவை தொல்பொருள் துறை கட்டுபாட்டில் வருபவை, தனி நபர்கள் ஒன்றும் செய்ய முடியாது


இல்லாவிட்டால் நாமே ஏதாவது செய்து நல்ல முறையில் பாதுகாக்க இறங்கிவிடலாம்


அதற்கும் சட்டம் வழி விடாது. அதாவது காக்கவும் செய்யாது, காப்பாற்றவும் விடாது.


செய்ய வேண்டிய அரசு தூங்குகின்றது, முதல்வர் இப்போழுது ஓய்வில் இருந்தாலும் அமைச்சர்கள் செய்யலாம் அல்லவா?


அவர்கள் மண்சோறு தின்னுதல், தீ மிதித்தல், அலகு குத்துதல் , கரகாட்டம் போன்ற விஷயங்களில் பிசி, யாரோ ஒருவர் மாமல்ல புரத்தில் பகீரதன் தவம் செய்யும் சிற்பம் போல அருகே அமர்ந்து அம்மா வந்து அழைத்தால்தான் எழுவேன் சிவனே அன அமர்ந்துவிட்டாராம்.


ஆகா அக்காலத்திலே சட்டை போட்ட சிற்பமா? என இனி வெள்ளைக்காரன் கடத்தாமல் இருந்தால் சரி.


டெல்லியில் குரலெழுப்ப வேண்டிய எம்.பிக்களோ உள்ளாட்சி தேர்தலில் மல்லுகட்டிகொண்டிருக்கின்றனர்


அப்படியே நாம் டெல்லியிடம் கேட்டாலும், வெளிநாட்டிலிருந்து மீட்கபட்ட பழங்கால தமிழக சிலைகள் இங்கு குவிந்திருக்கின்றது, ஆனால் தமிழக அரசுதான் மீட்டு சம்பந்தபட்ட ஆலயத்தில் மறுபடி நிறுவவில்லை தெரியுமா? இந்த லட்சணத்தில் அப்பொருளை அங்கே வைத்தால் என்ன் பாதுகாப்பு என திருப்பி கேட்பார்கள்.


சரி இவர்கள் ஏன் சிலையினை வாங்கவில்லை என்றால், எந்த கோவிலில் எந்த சிலை? அதன் அமைப்பு அடையாளம் என்ன என்ற இன்வெண்டரி லிஸ்ட் தமிழக அமைச்சரிடம் இருக்குமா என்பது தெரியவில்லை, இது காணாமல் போனதுதான் என நிரூபிக்க ஆதாரம் இல்லை


அப்படி ஆகிவிட்டது நிலை, ஆக்கிவிட்டார்கள்


இவை எல்லாம் பற்றி நினைக்க நினைக்க கடும் எரிச்சலே மேலோங்குகின்றது, பரமாரிப்பில்லா ஆலயத்திலிருந்து தங்களை பாதுகாக்க வெள்ளையனுக்கு இந்த சாமிகளே தூதுவிட்டிருக்குமோ என எண்ண தோன்றுகின்றது


எப்படியும் போகட்டும், யாருக்கும் பழம்பொருளை பாதுகாக்கும் ஆர்வம் இல்லை, நம் பழம் பெருமையினை நாகரிகத்தை அடையாளாத்தை போற்றிபாதுகாக்கும் ஆசை இல்லை, அப்பொருளின் அருமை தெரியவில்லை


இதோ மதுரை கீழடியில் கிடைக்கபெற்றவை பெரும் நாகரீகத்தை நிரூபிக்கும் சான்றான பொருட்கள் என்கின்றார்கள், ஒரு மண்ணாங்கட்டியும் நிரூபிக்கவேண்டாம், அதனை மதுரையில் பாதுகாப்பாக வையுங்கள் என்றாலும் கேட்பதாக இல்லை.


அந்த சுனாமி மொத்தமாய் அன்றே அழித்திருந்தால் என்ன?


மீட்புபணிக்கு வந்த வெள்ளையனாவது தமிழன் பிணத்தினை தோண்டும்போது, இதனையும் தோண்டி உலகிற்கு உண்மையினை பழந்தமிழரின் நாகரீகத்தை ஓங்கி உரைத்திருப்பாம்


என்ன செய்வது? இந்த கீழடியில் கிடைத்த பொருட்களை கூட பாதுகாக்கமுடியாத நாமா? பூம்புகார் கடலடியில் புகுந்து..., சீ சீ நடக்குமா?


மனதிற்குள்ளே அழுது, இந்த பாமாயில் மரங்களில் முட்டி மோதுவதை தவிர நாம் என்ன செய்துவிட முடியும்?


தன் பாரம்பரிய பொருளை, தன் முன்னோர் புழங்கிய பொருளை, யாராவது தூக்கி கொண்டு செல்வதை கண்ட ஒரு சிறைபட்ட ஊமையன் எப்படி அழுவானோ அப்படி அழுகின்றது மனம்


அதனை கத்தி சொல்லவும் முடியவில்லை, சிறை தாண்டி வரவும் முடியவில்லை


பெரும் சோகம் மனதினை நிரப்பிகொண்ட தருணம் இது.


ராமதாஸின் குரல் இன்னும் வேகமாக ஒலித்தால், இன்னும் பலரின் குரல் கூடி ஒலித்தால் நிச்சயம் பாதுகாக்கலாம்


இன்னும் கொஞ்சகாலம் இருக்கின்றது, அதற்குள் விழித்துகொள்ளும் தமிழகம் என நம்புவோம்.


(மறைமலை அடிகள், மபோசி, தேவநேய பாவணர் போன்ற பெரும் தமிழறிஞர்கள் இருந்தார்கள், அவர்களை ஒற்றிய அடுத்தடுத்த தலைமுறை உருவாகி வந்திருந்தால் இன்று பெரும் முயற்சி எடுத்து இந்த கீழடி நாகரீகம் வெளிகொணரபட்டிருக்கும்,


ஆதிச்சநல்லூர் உறங்கி இருக்காது


நாமோ அண்ணா, கலைஞர், புரட்சி தலைவன், தலைவி என இவர்களுக்கு வாரிசுகள் யாரென தேடி தேடியே எல்லாம் தொலைத்துவிட்டோம்)




No comments:

Post a Comment