Wednesday, September 14, 2016

தமிழர்களே, நம் இனத்தை காப்பாற்ற தயாராகுங்கள்: பாரதிராஜா அழைப்பு

தமிழர்களே, நம் இனத்தை காப்பாற்ற தயாராகுங்கள்: பாரதிராஜா அழைப்பு


நமது இனம் என்றால் இவர் படங்களில் காட்டும் இனம் என்று சிலர் தவறாக நினைத்துவிட்டால் என்ன ஆவது?


அதெல்லாம் சரியப்பூ.. முன்னாடி அடிக்கடி தமிழன் முதல்வராக இல்லாததுதான் பிரச்சினை என கலைஞரை சாடினீகளே, இப்போது கன்னட பிறப்பு முதல்வராக இருக்கும்பொழுது அந்த வார்த்தையினை பிரயோகிக்க என்ன தயக்கம்?




ராமச்சந்திரன் காலத்தில் முல்லை பெரியாறு பிரச்சினையின் போதும் அதனை சொல்லவில்லை, அமைதிபடை காலத்தில் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோதும் சொல்லவில்லை, இப்பொழுது ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போதும் சொல்வதில்லை


ஆனால் கலைஞர் முதல்வராக இருக்கும்போது மட்டும் தமிழன் முதல்வராக வேண்டும் என அன்னார் கிளம்புவார், வித்தியாசமான மனிதர் இவர். இவர் வழியே இவர் சீடர் சைமன்


எல்லா திரையுலக இம்சைகளும் இப்படித்தான், ராஜ்குமார் கடத்தபட்டபொழுது பொங்கிய ரஜினிகாந்தினை காவேரி கடத்தபட்டபொழுது காணமுடியாது


பெங்களூர் சொத்துக்களை கொண்ட தமிழக திரையுலகினர் அதிகம், இன்னும் அது தமிழ்படங்களுக்கு மார்கெட் உள்ள ஊர் என்பதால் தென்னிந்திய நடிகர் சங்கமும் ஜகா வாங்குகின்றது


இவர்களுக்கு காவேரி அவசியமில்லை ஆனால் அவசர காலத்தில் வீராணம் தண்ணீர் வேண்டும்.


தலைவன் எம்.ஆர் ராதா சொன்னபடி "ஏண்டா டாய்..இந்த கூத்தாடி பயலுகளுக்கு என்ன தகுதிடா இருக்கு நாட்டுக்கு கருத்து சொல்ல..


நடிக்க தெரிஞ்சா மேடையில மட்டும் நடிங்கடா.."


போன்ற வசனங்கள் நினைவுக்கு வருகின்றன.



1 comment:

  1. இவர் படங்களில் தமிழ் நடிகர்களை மட்டும் நடிக்க வைத்தாரா?
    இந்த நாய்க்கு தமிழ் உணர்வு ஒருகேடா?
    கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து இவன் படங்களைப் பார்த்தோம்.
    திடீர்ன்னு கிளம்பிட்டான் தமிழ் அது இதுண்ணு.
    போடா போய் சேலைய படிச்சி தொங்குடா.

    ReplyDelete