
ஒரு நண்பர் ஜெயபிரதாவிற்கு மகள் இருந்து நடிக்க வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என மனம் நொடிந்து பதிவிட்டிருந்தார்.
என்ன செய்ய எல்லோரும் ஆண்வாரிசு வேண்டிதான் தவமிருப்போம், இக்கவலை அன்றே இருந்திருந்தால் இறைவா ஜெயபிரதாவிற்கொரு பெண்குழந்தை கொடு என அக்காலத்தினர் தவமிருந்திருக்கலாம், ஆனால் இருக்கவில்லை.
நாம் எல்லாம் அன்று சிறுவர்கள், அக்கால இளைஞர்களுக்காவது பொறுப்பு வேண்டாம்?
அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்?, சில்க் ஸ்மிதா கண்களில் மயங்கி எல்லாம் மறந்திருக்கலாம்.
இது போன்றதொரு பிரச்சினை எம்ஜிஆர் காலத்திலே வந்தது, அதாவது எம்ஜிஆருக்கு யார் வாரிசு எனும் வகையில் வந்தது. அவர் யாரையாவது சட்டென்று சொல்லிவிடமுடியாதல்லவா? சினிமா, அரசியல் என பலதுறை அரசர் அவர். முதலில் சொல்லாமல் பின்னாளில் சொன்னார் பாக்கியராஜ் என் கலை உலக வாரிசு
அப்பொழுதும் அவர் கலை உலக வாரிசு என சொன்னாரே அன்றி வேறொன்றுமில்லை
எஜிஆர் பாணி என்ன? பாக்யராஜ் பாணி என்ன? ஒரு சம்பந்தமும் இருக்காது, அரசியல் எல்லாமே அரசியல்.
அதனை விடுங்கள்
ஏறகனவே திருமணமான ஒருவரை மணந்த ஜெயபிரதாவிற்கு ஏராளமான சிக்கல்கள். அவருக்கென்று ஒரு குழந்தை கிடையாது, விவாகரத்து வாங்கிய ஜெயபிரதா இன்று தனிமரமே.
அந்த அழகான முகத்தை வரைத்த இறைவன் தலையெழுத்தை எழுதும்பொழுது குழம்பிவிட்டான். அந்த அழகோவியத்தின் விதி சரியாக அமையவில்லை.
கடவுள் மீது நாம் வெறுப்புகொண்ட தருணங்களில் எல்லாம் அவர் நினைவும் வரும், அவர் விதியினை மாற்றிய அந்த முன்னாள் கணவர் நினைவும் வரும், விடுங்கள் கண்ணீரை துடைத்துகொள்ளுவோம்.
ஆனால் ஜெயப்பிரதாவிற்கு ஒரு மகள் இருந்து நடிக்க வந்திருந்தால் எப்படி இருந்திருப்பார் என்பதற்கு நம் கண்முன் ஒரு கோல மயில், பேசும் சிலை, உருகொண்ட தென்றல் ஒன்று உண்டு
அனுஷ்கா ஷெட்டி
சும்மா சொல்ல கூடாது, உயரமும் ஜெயபிரதா உதட்டோர மச்சமும் தவிர எல்லாமும் மகா அம்சமாக பொருந்தியே இருக்கும். ஆளை அடித்தே போடும் அந்த புன்னகை உட்படஆக ஜெயப்பிரதாவின் ரசிக கண்மணிகளே, அவர் அழகின் வாரிசாக நாம் அனுஷ்காவிற்கு முடிசூட்டி கொள்வோம்
ஜெயப்பிரதா கொள்ளை அழகு, அனுஷ்கா அழகோ அழகு
சரி இவர்கள் இருவருக்கும் ஒரே குலதெய்வம் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?
குஷ்பூ போல இருந்திருக்குமோ? :)
No comments:
Post a Comment