Thursday, September 1, 2016

நடிகை ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா...



[caption id="" align="aligncenter" width="553"]Image may contain: 1 person , people smiling , close-up நடிகை ரம்யா (திவ்யா ஸ்பந்தனா)[/caption]

குத்து படத்தில் சிம்பு உடனும் , பொல்லாதவன் திரைப்படத்தில்  தனுஷுடனும்  கதாநாயகியாக நடித்தவர்.

அவ்வப்போது யாராவது நாட்டுபற்றாளர் என சொல்லிகொள்வோர் கையில் சிக்குவார்கள், இம்முறை சிக்கி இருப்பது ரம்யா எனும் நடிகை. காங்கிரஸ் கட்சிக்காரர்.


அம்மணி முதலில் என்ன சொன்னார்? முதலில் பாகிஸ்தானையும், இலங்கையினையும் நேசிக்கிறேன் என்றார். யார் நேசிக்கவில்லை? அவர்களின் ஆட்சியாளர்களின் வெறுப்பு மதவாதம், இனவாதம் தவிர எல்லா பொதுமக்களையும் நேசிக்கின்றோம்


பாகிஸ்தான் பொதுமக்களும் நம்மை மனதார நல்ல உறவாக விரும்புகின்றார்கள். அந்த அடிப்படையில் வாஜ்பாய் பஸ் விட்டார், மன்மோகன்சிங்க் பிரியாணி ஊட்டினார், இப்பொழுது மோடி சொல்லாமலே சென்று நவாசை தழுவினார்


அதாவது இருநாட்டின் மக்கள் மனமும் அதேதான், இனவாத புத்த தலமை பீடத்ததை தவிர சிங்களனுக்கும் நமக்கும் என்ன தகறாறு?


வலிய உதவபோய் மாட்டிகொண்ட ஈழவிவகாரங்களில் சில கருங்காலிகளை தவிர மற்றவருக்கும் நமக்கும் என்ன தகறாறு?


மக்கள் மக்களாய் இருக்கின்றார்கள், மானுட அடிப்படையில் நேசிக்கின்றார்கள். இந்தியா பாகிஸ்தான் இணையமுடியுமா என இருநாட்டு இளம் சமுதாயமே வெளிப்படையாக விவாதிக்கும் நேரத்தில் திவ்யா சொன்னது தேசதுரோகமாம்.


அம்மணி அடுத்து என்ன சொன்னார்?


ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புக்கள் சுதந்திரத்திற்கு பாடுபடவில்லை என்றார். இது யாருக்கு தெரியாது?


ஜின்னாவின் முஸ்லீம் லீக் எப்படி தனி பாகிஸ்தான் என சீன் போட்டுகொண்டிருந்ததோ, அப்படி அகண்ட பாரதம் என சொல்லிகொண்டிருந்தது ஆர்.எஸ்.எஸ்


அதாவது கடைகாலம் என தெரிந்துவிட்ட வெள்ளையன் இந்த இரு கட்சிகளை வைத்து அரசியல் செய்து குழப்பம் விளைவித்துகொண்டிருந்தான். உதாரணம் வேண்டுமானால் கலைஞர் ஸ்டாலினையும், அழகிரியினையும் வைத்து ஒரு மாதிரி ஆடுவார் அல்லவா? அப்படி


உண்மையில் ஜின்னா கோஷ்டியும், இந்த ஹெட்கோவர் கோஷ்டியும் சுதந்திரத்திற்காக பெரிதும் பாடுபடவில்லை. பிறக்கபோகும் இந்தியா இந்து இந்தியவா அல்லது இஸ்லாமால் உடைபட்ட இந்தியாவா என பட்டிமன்றம் நடத்திகொண்டிருந்தன அவ்வளவுதான்.


பாகிஸ்தான் எனும் பெயர் அன்று கனவில் கூட இல்லை.


ஜின்னா அப்பட்டமான மதவாதம், ஆர்எஸ்எஸ் நாட்டுபற்றில் தன்னை மறைத்து கொண்ட இயக்கம். இந்து மகா சபை போன்றவகைள் வேறு வகை.


இதனைத்தான் ரம்யா சொன்னார். மறுபடி பொங்கிவிட்டார்கள்.


சரி அந்த ஹெட்கோவர், கோவல்கர் எல்லாம் என்ன போராடினார்கள் என்று நிரூபித்தால் முடிந்தது கதை.


முடிவில் காந்தி கொலையில் அந்த மதவெறி அப்பட்டமாக தெரிந்தது, தேசத்தின் தலைவனை விட மதம் பெரிது என அவர் கொல்லபட்டு , பின் ஆர்எஸ்எஸ் தடைசெய்ய்யபட்டதும் உலகம் அறியாததா? மறுக்க முடியுமா?


கருப்பு காந்தி காமராஜர் மததுரோகி என அறிவித்து அவரை கொல்லமுயன்றவர்கள் யார் என்பதுமா தெரியாது?


உண்மையான இந்திய பற்றுள்ளவன் காமராஜரை கொல்ல முயற்சிப்பானா?


ஆக மனிதாபிமானம், சகோதரத்துவம், நாட்டுபற்று என அப்பெண் சொன்னால் சகட்டு மேனிக்கு கொதிக்கின்றார்கள், கொஞ்சம் நிதானித்து யோசிக்க வேண்டாமா?


நாட்டுபற்று என்றால் என்ன?


தமிழகத்தில் ஒருவன் அந்நிய நாட்டு தீவிரவாதி படத்தை பிடித்து என் அண்ணன் என சொல்லி திரிகின்றான்.


காஷ்மீரில் இந்திய ஆக்கிரமிப்பு படை என சொந்த ராணுவத்தை பழிக்கின்றான்.


கண்ணையா குமார் என்பவன் சீனாவிற்கு சார்பாக பேசிகொண்டிருக்கின்றான்.


சம்பந்தமே இல்லாமல் அரசு நிர்வாகத்தில் தலையிடும் சுப்பிரமணியன் சாமி, அமெரிக்க நலன்களுக்காக இந்தியாவில் காய் நகர்த்தும் சு.சாமி என்ன இந்திய தேசிய அபிமானியா?


அவர்களை எல்லாம் என்ன வகையில் வைப்பீர்கள், தேசப்பற்றாளார்கள் என்றா?


அப்படி தெரிந்தால் ரம்யா எனும் தேசாபிமானி, உள்ளதை உள்ளபடி சொல்லும் இந்தியபெண் உங்களுக்கு தேசதுரோகியாகத்தான் தெரிவாள்


அவள் நடிகையாம் சிலர் சொல்லி ஏளனம் செய்கிறார்கள்.


தமிழகத்தில் ஒரு நடிகைதான் 4 ம் முறையாக ஆண்டுகொண்டிருக்கின்றார்.


அவருக்கு வாக்களித்தவன் தான் இன்னொரு நடிகை பற்றி, "நடிகை தானே அவளுக்கு என்ன தெரியும்?" என பேசிகொண்டிருக்கின்றான்.





No comments:

Post a Comment