Wednesday, September 14, 2016

என்னதான் நடக்குது நம்ம நாட்டிலே ...

2 பதிவுகள் 





அவராவது அன்று உண்ணாவிரதம் என்றாவது எதனையோ சொல்லி கடற்கரையோரம் கிருஷ்ண சயன கோலம் கொண்டிருந்தார், ஒரு பக்கம் பாமா இன்னொரு பக்கம் ருக்மணி என ஏதோ ஒரு எதிர்ப்பினை மாய கண்ணனாக செய்துகொண்டிருந்தார்.


அவரை எம்மாதிரி எல்லாம் பழித்தார்கள்.


இன்றோ கன்னடத்தில் தமிழர்கள் பதைபதைப்புடன் உயிர் பயத்துடன் பரிதவிக்கும் போது முதல்வர் கட்சி விழா, இணைப்பு விழா, உள்ளாட்சி தேர்தல் வெற்றிவிழா என ஏக அழிச்சாட்டியங்களை மகிழ்வோடு செய்கிறார்.





அதுவும் பட்டருக்கு காட்சியளித்த அபிராமி போல அப்படி ஒரு நிதானம், புன்னகை முகமெல்லாம் ஒரு திருப்தியோடு கொஞ்சமும் சஞ்சலமின்றி ஆன்ம சுத்தியுடன் செய்துகொண்டிருக்கின்றார்.

மைசூர் சாமுண்டீஸ்வரி என்றால் மகமாயி என பணிந்துவிடும் கூட்டம், வாமணன் என்றால் "ஏய் தமிழின‌ துரோகி.." என கர்ஜிக்கும் மர்மம் ஏனென்றே புரியாத தமிழகம் இது.

இந்த பக்தர்கள்தான் தமிழ்தேசிய வாதிகள் என நாம் நம்பிகொள்ள வேண்டும்.

இதற்கு இனமானம், உணர்வு என்ற வார்த்தை எல்லாம் எதற்கு?

ஒருவேளை தோட்டத்து காவல் நாய்களுக்கு போடும் எலும்பு எனும் வார்த்தைக்கு அப்படி தமிழ்தேசிய அகராதியில் ஏதும் பொருளிருக்கலாம்

நன்றாக இனி தமிழ் பழம் வார்த்தைகளில் தேடி பார்க்கவேண்டும்.





கன்னடம் 1975களில் தீவிரமாக காவேரியில் அணைகட்டிகொண்டிருந்த போது பிரச்சினைகள் வலுக்க தொடங்கியபோது அல்லிநகரத்தது இளைஞன் அங்கே சுற்றிகொண்டிருந்தான்


அதே கர்நாடகாவில் அன்றைய பிரபல கன்னட இயக்குநர் புட்டண்ணாவிடம் அசிஸ்டண்டாக இருந்து , கன்னடர்களோடு பழகி கன்னட சினிமாவிலே சினிமா தொழில் படித்தான்,


அவர்தான் பின் தமிழ்சினிமாவில் சம்பாதித்து, இன்று தமிழர்களை காவேரி புரட்சிக்கு அழைக்கும் பாரதிராஜா. தமிழர்களுக்கு உணர்ச்சி ஊட்ட உணர்வு கொப்பளிக்க வந்திருக்கும் பாரதிராஜா




பாரதிராஜா நன்றாக நடித்துகாட்டுவார் என்பார்கள், அதனை இப்போது நாமெல்லாம் காணும் வாய்ப்பு.


எப்படி இருக்கின்றது இவர் நடிப்பு?


இவரிடம் தொழில், அரசியல், வடுக வந்தேறி இன்னபிற அழிச்சாட்டியங்களை படித்த மாணவர்தான் அங்கிள் சைமன்


பின் அவரின் நடிப்பு எப்படி இருக்கும்?



No comments:

Post a Comment