Thursday, September 8, 2016

காவேரிப் பிரச்சினையும் , காவியர் சிந்தனையும்



காவேரி பிரச்சினையில் ஸ்கோர் செய்யும் வாய்ப்பு தமிழக பாஜகவிற்கு அமோகமாக இருக்கின்றது, அவர்களோ செய்ய வேண்டியதை விட்டுவிட்டு சும்மா அழுதுகொண்டு இருக்கின்றார்கள் எப்படி? இப்படி


காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என‌ சென்னையில் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்கிறார்.


கோரிக்கை எழுப்பவேண்டிய டெல்லியினில் தூங்கிவிட்டு சென்னையில் வந்து முழங்குகின்றாராம்,


ஏன் நாகர்கோவில் சென்று அங்கு தென்னந்தோப்பு கயிற்றுகட்டிலில் படுத்துகொண்டு சொன்னால் என்ன?


அம்மணி தமிழிசையும் அதேதான் கோவையில் சொல்கின்றார்,


இப்படி செய்தால் காவேரியில் நீரும் வராது, இவர்களுக்கு வோட்டும் வராது. இரண்டையும் அலேக்காக அள்ள ஒரு அழகான திட்டம் இருக்கின்றது


இவர்களுக்கு காதோரம் நம்மால் ஒரு ரகசியம் சொல்லமுடியும், ஆனால் அந்த ராமகோபாலனும் இருந்தால் இன்னும் நலம், செயல்படுத்தினால் கன்னடன் அவ்வளவுதான்


அதாவது முன்பு ராமர்பாலத்திற்கு ஆபத்து என்றவுடன் வடக்கே எப்படி பொங்கினார்கள் என்பது தெரியும், இப்போது பசு விவகாரமும் சேர்ந்திருக்கின்றது இதனை வைத்து அடிக்கலாம்.


அன்று ராமர்பாலம் இடிபடபோகின்றது என்றவுடன் வடக்கே காசி கூட்டம் எப்படி பொங்கியது? இந்தியாவே முடங்கியது.


Stanley Rajan's photo.


வழக்கென்ன? கலைஞருக்கு மிரட்டலென்ன?


அமெர்க்காவே அண்ணாந்து பார்த்த விஷயம் அது.


அப்படி காவேரி நீர் இல்லாததால் திருவரங்கம் ரங்கநாதர் முதல் தஞ்சாவூர் பெருவுடையார் வரை பாதிக்கபட்டிருக்கின்றார், கும்பகோணம் கோயில்கள் எல்லாம் பொலிவிழந்தன என சொன்னால் எப்படி இருக்கும்?


காவேரிக்ரை பசுக்கள் எல்லாம் நீரில்லாமல் கிடக்கின்றன என்றால் உங்கள் பரிவாரங்கள் அலறாதா?


பயிரினை விடுங்கள், பசுவிற்கு நீர் தராத கன்னடனை வடக்கே விடுவார்களா? பிய்த்து விடுவார்கள் ஆமாம்.


ராமர்பாலத்தில் கலைஞருக்காக பொங்கிய சாமியார்கள், கன்னடர்களை வைத்து பார்ப்பார்களா?


இன்றைய தேதியில் உங்கள் கட்சியினால் செய்ய கூடிய பெரு முயற்சியும், நடக்ககூடிய சாத்தியமுள்ள முயற்சியும் இதுதான்.


தமிழகத்திற்கு காவேரி வராததால் தமிழக இந்துகோயில்கள் அழிகின்றன என கிளம்புங்கள், திருச்சி உச்சிபிள்ளையார் முதல் கடைகோடி அம்மன் வரை நீரின்றி தவிக்கிறாள் என ஒப்பாரி வையுங்கள்.


சிலை அபிஷேகம் செய்ய கூட தென்னக கங்கை காவேரி இல்லை என்றால் எப்படி? என ஒரு அழுகை வையுங்கள் மொத்த இந்தியாவும் ஓடிவரும்


Stanley Rajan's photo.


வசதியாக ஏராளமான ஆலயங்கள் காவேரி கரையோரம் அமைந்திருக்கின்றன, கோவிலுக்கு 4 பசு கூட்டம் காட்டினால் விஷயம் மகா சீரியஸ் ஆகும்.


நீரில்லா பசு எப்படி ஹோமியம் தரும் என்று ஒரு கேள்வி கேட்டால் வடக்கத்திய சாமியார் கூட்டம் வந்து கன்னட அணைகளையே தூக்கிவிடாதா?


கட்சியும் தமிழகத்தில் ஒரே நாளில் எங்கோ சென்றுவிடும்


நீங்களாக ஒன்றும் செய்யமாட்டீர்கள், செய்தால் தமிழக மோடி கூட்டத்திற்கு அவ்வளவு காலி நாற்காலிகள் வராது.


ராமர் பாலத்திற்கு ஒரு நீதி, திருவரங்கம் திருவையாறு தஞ்சாவூர் கோயிலுக்கு ஒரு நீதியா என கேட்டால் ஒரு ரயில் இந்தியாவில் ஓடும்?


கலைஞருக்கு ஒரு நீதி, சித்தராமய்யாவிற்கு ஒரு நீதியா என கேளுங்கள், சித்தராமையா இதயம் இன்னும் கனத்து அணையினை இடித்தே விடுவார்.


மனிதர்கள், விவசாயம், பயிர் என்பதுவரை யார் கவலைபடுவார்கள்? ஆனால் ஆலயம், பசு , வழிபாடு என கிளம்புங்கள் தேசமே வரும்.


உதாரணம் ராமேஸ்வரம் மீணவன் சாகும்போது வராத கூட்டம், ராமர்பாலம் காக்க வந்ததல்லவா? அதற்கொரு சங்கமும் இருக்கின்றது, இதுதான் இந்தியா


காற்று வீசிக்கொண்டிருக்கின்றது தூற்றிகொள்ளுங்கள்.


சொல்லிதந்தாகிவிட்டது இப்படி ஒரு கோணம் இருக்கின்றது இப்படியும் சிந்தித்துபாருங்கள் தமிழக பாஜக தலைவர்களே.















No comments:

Post a Comment