தனிமை எவ்வளவு கொடியது, ஆனாலும் தனிசிறையில் அந்த தனிமைமையினையும் சிந்தனை களமாக மாற்றியவர்கள் உண்டு,
சீமான் போல பிரியாணி உப்புகறி எல்லாம் செய்து சிறையில் உடல் வளர்க்கவில்லை அவர்கள்.
காந்தியும் நேருவும் அதில் குறிப்பிடதக்கவர்கள். நேரு சிறையிலிருந்து எழுதிய கடிதங்கள் எல்லாம் பெரும் கட்டுரைகள் ஆயின, அபாரமான சிந்தனை. இன்னும் ஏராளமானோர் உண்டு.
கண்ணதாசன் மாங்கனி எனும் காவியமே எழுதினேன் என்பார்.
அப்பொழுதே அப்படி எழுதியவர்கள், இப்பொழுதிருக்கும் விஞ்ஞான வசதிகள், முகநூல் எல்ல்லாம் இருந்தால் எப்படி எழுதி தள்ளி இருப்பார்கள் எனும்பொழுது அவர்தான் நினைவுக்கு வருகின்றார். வேண்டாம் அக்காலத்தில் அந்த வசதிகள் இல்லாமல் இருந்ததும் நல்லது
91 வயதிலும் முகநூலில் என்ன போடு போடுகின்றார் கலைஞர், இவருக்கெல்லாம் அன்று இளம் வயதில் பாளையங்கோட்டை சிறையில் இணைய வசதிகொடுத்து அடைத்து வைத்திருந்தால் எப்படி வந்திருப்பார். நொடிக்கொரு எழுத்து எழுதி தள்ளியிருக்க மாட்டார்.
இணையம் சிறையில் இல்லை என்றாலும் நொடிக்கொரு ஸ்டேட்டஸ் அவர் சார்பில் வந்துகொண்டே இருக்கும், அவர் போராட்டம் அம்மாதிரியானது.
நல்லவேளையாக அக்காலங்களில் இந்த தகவல் தொடர்புகள் இல்லை, இருந்திருந்தால் மனிதர் எவ்வளவு ஆட்டம் ஆடியிருப்பார்.
அந்த் வெறும் கையெழுத்து காலங்கள், அச்சு காலங்களில் அவர் எழுதிய எழுத்துக்களை விட, அவர் காட்டிய உக்கிரத்தை விட இந்த நவீன காலத்தில் அவரின் வாரிசுகள் ஒன்றும் கிழித்துவிடவில்லை, ஆனால் ஆசை மட்டும் அவர் இடத்திற்கு.
சில இடங்களில் அவரை ரசிக்கத்தான் வேண்டியிருக்கின்றது.
No comments:
Post a Comment