Friday, September 9, 2016

இருமுகன்




இருமுகன் என்றொரு படம் வந்திருக்கின்றதாம்

கமல்ஹாசனின் அந்நாளைய விக்ரம் படத்தினை தூசுதட்டி, நடிகர் விக்ரமை வைத்து எடுத்தால் அது இருமுகனாம்.

       Stanley Rajan's photo.           ir

கிட்டதட்ட அதே கதைதான் , அதன் ரீமேக்தான். சலாமியாவிற்கு மதில் மலேசியா, அம்பிகாவிற்கு பதில் நயந்தாரா, அந்த கணிப்பொறி லேடி லிசிக்கு பதில் நித்யா மேனன் அவ்வளவுதான் படம், டிம்பிள் கம்பாடியா கேரக்டர் எல்லாம் இல்லை, அது கமல்ஹாசனுக்கு மட்டுமானது என்பதால் விட்டுவிட்டார்கள்





ஆனால் எழுத்தாளர் சுஜாதாவும் , விக்ரம் படத்தின் அபாரமான வில்லன் சத்யராஜும் இல்லாமல் நடிகர் விகரமின் இருமுகன் ஏதோ வந்திருக்கின்றது என்கின்றார்கள்,

அது இரண்டும் நிரப்பமுடியாத இடங்கள் என்பதால் அப்படியே விட்டிருக்கலாம், அந்த ஜாம்பவான்கள் அப்படியானவர்கள்.

சுஜாதாவின் அபாரமான விஞ்ஞான கதை அது, அன்று கால்குலேட்டரே பட்டன் தட்ட தடுமாறிய காலத்தில் கம்யூட்டர் கட்டுபாடு கொண்ட ஏவுகனை கதையினை அன்றே சொன்ன கதை அது.

பின்னாளில் பின்லேடன் ஆப்கானில் காட்டிய சில காட்சிகள், தாவுத் இபாரஹிம் அடையாளங்கள் என முன்கூட்டியே சொன்ன சுஜாதா உண்மையில் மகத்தான கலைஞன்

ராக்கெட்டை கடத்தும் இடத்தில் "நெசமாவா, நீ வாத்தியங்கள தூக்கிட்டு போ, நா கச்சேரி வைக்க வாரேன்" என சொல்லும் சத்தியராஜ் படம்முழுக்க அசத்தி இருந்தார்

ஒரே காட்சியில் அமைச்சராக வந்தாலும் , கப்பல் தளபதிய பார்த்து" என்ன கப்பலு சவுக்கியமா..தண்ணி தொட்டி திறக்கபோனேன் லேட்டாயிட்டு" என சொல்லும் வி.கே ராமசாமி இந்நாளைய அமைச்சர்களை அன்றே காட்டினார்.

அந்நாளைய விக்ரம் சுஜாதாவின்
தமிழக யதார்த்தம் மீறிய கனவு,

1980களில் ஆப்கனில் ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து போராடிய தீவிரவாதிகள், ரஷ்ய ராக்கெட்டை கடத்த முயன்ற சம்பவம் நடந்தது. அதனையொட்டி எழுதபட்ட கதை அப்படி.

ராணுவம், விஞ்ஞானம், உலக அரசியல், இந்திய அரசியல், உளவுதுறை, சில நாட்டு அரசுகளை கட்டுபடுத்தும் தீவிரவாதம், சில மன்னராட்சி நாடுகள் என எல்லா அறிவும் ஒருங்கே பெற்ற அந்த கதை பல உண்மைகளை அழகாக சொல்லியது

அதாவது உலகத்தோடு ஒருநிமிடம் தாமதிக்காமல் ஓடியிருக்கின்றார் சுஜாதா

அந்த ஒன்றிற்காகவே சுஜாதாவினை கைதட்டி, கட்டி அணைத்து பாராட்டலாம், மனிதர் அப்படிபட்ட இருமூளைக்காரராக இருந்திருக்கின்றார்.

விக்ரம் படத்தில் டைட்டில் சாங்கில்
"ம்ம் பொறுப்பது புழுக்களின் குணமே
ஆம் அழிப்பது புலிகளின் குணமே
எட்டிப்போ அதோ புலி வருகுது
திட்டத்தால் அராஜகம் ஒழியுது
சித்ததில் மனோ பலம் தெரியுதி
ஜெயிப்பது நிஜம்"

என ஈழபுலிகளை மனதில் வைத்து சில வரிகளும் வந்தது, 80களில் புலிகளுக்கு அப்படி ஒரு அபிமானமும் இருந்தது.

நிச்சயமாக சொல்லலாம் மிக குறிப்பிட்டு சொல்ல கூடிய படம் அது, அதுவும் அந்த கால அரசியல்,பனிப்போர், தொழில்நுட்பம், போராட்டம், உளவுதுறை கலைகள் என சொன்ன காலகல்வெட்டு அது, இன்று பார்த்தாலும் 1980கள் அப்படியே கண்முன் வரும் காரணம் சுஜாதா.

ஆனால் முந்த்தானை முடிச்சு, ரயில் பயணங்களில் போன்ற தாக்கத்தில் இருந்ததால் தமிழகம் அதனை ரசிக்கவில்லை, தமிழகம் அப்படித்தான் எந்த நல்லபடத்தினை ரசிக்கும்?

அந்த கதையினை இன்று சுட்டு படமெடுத்திருக்கின்றார்கள்.

திருட்டு தோசைதான், ஆனால் தரமான‌ தோசைக்கல்லும் மாஸ்டரும் இல்லாமல் வேறு அடுப்படியில் சுட்டிருக்கின்றார்கள், பக்குவம் வரவில்லையாம், கொஞ்சம் கரிந்து போய்விட்டதாம்.

படத்து கதை இதுதான் என நண்பர் சொன்னபொழுது, கமல் ஹாசனின் விக்ரமும், அதில் சத்யராஜ் அசால்ட்டாக சொல்லும் பிரபலவசனமும் நினைவுக்கு வந்தது

"நெசமாவா.."




No comments:

Post a Comment