Monday, September 5, 2016

கம்பன் கண்ட சீதை ....


j


இப்பொழுது ஒரு நண்பர் சொன்னார், பல செய்திகளை தருகின்றீர்கள், இடை இடையே ஜெயபிரதா போன்ற காமெடிகளையும் செய்கின்றீர்கள்.


என்னது ஜெயப்பிரதா பற்றி சொல்வது உங்களுக்கு காமெடியா? அய்யகோ எப்படி ஏற்றுகொள்ள முடியும்?


அவர் அழகினை பாட தெய்வீக கவிஞனால் மட்டுமே முடியும், அதனால் கம்பன் சீதைக்கு சொன்னது அப்படியே ஜெயபிரதாவிற்கும் பொருந்தும், ரசனை இருந்தால் கவனியுங்கள்


"பொன்னின் சோதி, போதின் நாற்றம், பொலிவேபோல்
தென் உண் தேனின் தீம் சுவை, செம் சொல் கவி இன்பம்,
கன்னி மாடத்து உம்பரின் மாடே களி பேடோடு
அன்னம் ஆடு முன் துறை கண்டு ஆங்கு அயல் நின்றார்"


தங்கத்தின் பிரகாசம், பூவின் நறுமணம், வண்டுகள் அருந்துகின்ற தேனின் இனிமையான ருசி, சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதிய நல்ல கவிதை தரும் இன்பம்… இவை எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டியதுபோன்ற ஓர் உருவம், கன்னி மாடத்தில் நிற்கிறது. அங்கே அன்னங்கள் சேர்ந்து விளையாட, அவற்றின் நடுவே சீதை தோன்றுகிறாள்.


இது நமது ஜெயபிரதாவிற்கு பொருந்தாதா? நிச்சயம் அப்படியே பொருந்தும்.


இன்னும் ஒரு இடத்தில் கம்பன் சொல்வான், மின்னல் அரசியாம் சீதை.


‘சதகோடி முன் சேவிக்க, மின் அரசு எனும்படி நின்றாள்’ என்கிறார். நூறு கோடி மின்னல்கள் சுற்றிலும் வந்து நின்று வணங்கி நிற்க, நடுவில் அவர்களுக்கெல்லாம் தலைவியாக நின்றாள் என்கிறான் கம்பன்


அப்படி ஆயிரம் கம்பனின் சீதைகளுக்கு தாய் நமது ஜெயபிரதா.


’இமையா நாட்டம் பெற்றிலம் என்றார்,
இரு கண்ணால் அமையாது என்றார் வானத்தவர்’


சீதையைப் பார்த்த மனிதர்களெல்லாம் ‘அடடா, தேவர்களைப்போல நமக்கும் இமைக்காத விழி கிடைத்தால் இவளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாமே’ என்று ஏங்குகிறார்களாம்.


அந்தத் தேவர்களோ ‘நமக்கு இரண்டு கண்கள்தானே இருக்கிறது, சீதையைப் பார்க்க இவை போதாதே, இன்னும் ஏழெட்டுக் கண் கிடைத்தால் நன்றாக இருக்குமே’ என்று தவிக்கிறார்களாம்.


அதனைத்தான் நாங்களும் சொல்கிறோம், இரு கண்கள் என்ன? இந்திரன் போல உடலெல்லாம் கண்கள் இருந்தாலும் ஜெயபிரதாவினை பார்க்க போதாது என்பது முக்கால உண்மை. அந்த உதட்டோர மச்ச அழகினை பார்க்கவே கோடி கண்கள் போதாது.


கல்லாதார் மட்டுமல்ல, ஜெயபிரதாவினை ரசிக்க தெரியாதோரும் முகத்திடை இரண்டு புண்ணுடையார் என்பது எமது குறள்.


இன்றும் தமிழ்சினிமாவில் அவருக்கான் இடங்கள் உண்டு கபாலியில் அவரை வைத்திருக்கலாம், . வயதான ரஜினியாம் ஆனால் மனைவி மட்டும் இளமையாம், என்ன கொடுமையோ.


பாபநாசம் படத்தில் கவுதமிக்கு பதிலாக ஜெயபிரதாவினை வைத்திருக்கலாம்.


வில்லன் அப்பெண்ணின் தாய் மீது மையல் கொண்டதற்கு சரியான தேர்வாக இருந்திருக்கும், கவுதமி மீது மையல் கொண்டதற்காகவே கொல்லபட வேண்டிய வில்லன் அவன்,


அவ்வையார் அளவிற்கு வந்துவிட்ட கவுதமியினை பார்த்து ஆசைபட்டான் என்றால் அவன் கொல்லபடவேண்டியவன் சந்தேகமே இல்லை.


ஒருவேளை கதை அப்படி
கொடூரனாக அவன் பாத்திரம் அமைக்க பட்டிருக்கலாம்.


எனினும் விரைவில் எங்கள் ஜெயபிரதா மறுபடி தமிழ்திரையுலகில் வருவார் என என்னைபோல ஒரு கூட்டமே எதிர்பார்த்துகொண்டிருக்கின்றது


வயதான கமலும், ரஜினியும், ஶ்ரீதேவியும் வரும்பொழுது ஜெயப்பிரதா வரமாட்டாரா?


ஆக நண்பரே, இது காமெடி எல்லாம் இல்லை. ரசனை


இறைவன் படைத்த அற்புதமான ஒரு ஓவியத்தை ரசிக்கும் ரசனை. இந்த படத்தினை பாருங்கள், அவர் கம்பன் சொன்ன‌ மின்னலின் அரசி என்பதும் சரிதானே?.


(இருக்கட்டும், பாகம்பிரியாள் செல்லும்பொழுது, ஒரே ஒரு கட்டளைதான் இட்டாள், இரவெல்லாம் ஜெயபிரதா படம் பார்க்ககூடாது சரியா? என்றாள். அதனை எல்லாம் கடைபிடித்தால் அது தலைவிக்கு செய்யும் துரோகம் அல்லவா? அவரின் படங்களை பார்த்துகொண்டே இருக்க்கின்றேன்


ஆனாலும் நிச்சயம் பேக் ஐடியிலிருந்து என்னை பார்த்துகொண்டே இருப்பாள் அவள், வந்தபின்புதான் தெரியும்  )













No comments:

Post a Comment