Friday, September 2, 2016

பைபிளை தாண்டி யோசிக்கவே செய்யாது....

பைபிளை தவிர ஏதும் வாசிக்க விரும்பாத‌ , வாசித்தால் பாவம் என கருதும், அதுவும் அடுத்த மத நூல்களை வாசித்தால் சாவுக்கான பாவம்ஸ்டிரிக்ட் கிறிஸ்தவன் ஒரு தீவிரவாதியின் மனநிலையினை பெற்றுவிடுகின்றான்.


அவன் எல்லை ஒரு நாளும் அந்த பைபிளை தாண்டி யோசிக்கவே செய்யாது, அதற்குள்ளே தான் சுற்றிகொண்டிருக்கும், செக்கு மாடாகவோ அல்லது அடிமை எம்.எல்.ஏவாகவோ அல்லது கிணற்று தவளையாகவோ. அதனை தாண்டாது.


அவனுக்கும் குரானை காட்டி மேற்கு பிராந்தியத்தை நாசமாக்கும் ஐ.எஸ் இயக்கத்திற்கும் பெரும் வித்தியாசம் ஒன்றும் இருக்கமுடியாது




மதநூல்களில் சொல்லி இருப்பது இருக்கட்டும், அதனை தாண்டி சொந்த மூளையில் கொஞ்சமாவது மனிதாபிமானத்தோடு யோசிக்க தெரியாதவனால் என்ன பலன் இருக்க முடியும்? பலன் வேண்டாம் ஆபத்து அதிகம்


ஷிகா வைரஸ் தாக்காமலே குறுகிபோன மண்டைகள் அவை. எபோலா கிருமியினை விட ஆபத்தானவர்கள அவர்கள்


ஆனால் பெரும் விசித்திரம் என்ன?


பழம் கட்டுபாடுகள் நிறைந்த யூத மத நூல்களை தூக்கி எறிந்துவிட்டு மானிட நேயம் பேசிய இயேசுகிறிஸ்து இவர்களின் கடவுள்


ஆனால் அந்த பைபிளை தாண்டி இவர்கள் யோசிக்கமாட்டார்கள். மடையர்களே, இயேசு அப்படி மதநூல் முக்கியம் என அடைபட்டு கிடந்திருந்தால் இம்மாபெரும் மாற்றம் உலகில் வந்திருக்குமா?


பைபிள் அருமையான நூல்தான், அதற்காக அதற்குள் அடைந்துகிடந்து முடங்கிகொள்வீர்களோ?


பைபிளை முதலீடாக வைத்து, சிலுவையினை வட்டிக்கணக்கில் வைத்து தொழில் நடத்தி சொத்துகுவிப்வனை கண்டிக்க தெரியாதவனெல்லாம் ரோமை கத்தோலிக்கனுக்கு எல்லாம் பாடம் நடத்த கிளம்பிவிட்டானாம்


உங்களை எல்லாம் நரகத்தில் கூட பிசாசு சேர்க்காது, காரணம் உங்களை விட அவன் நல்லவன்.


உங்களுக்கெல்லாம் நரகத்திலும் இடமில்லை. நீங்கள் செய்யும் அழிச்சாட்டியம் அப்படி.


அக்கால பீட்டர் பேசினால் எல்லோரும் தத்தம் அந்நிய மொழியில் புரிந்துகொண்டார்கள். உங்களால் முடியுமா? உங்களுக்கே புரியாத மொழி அந்நிய பாஷையா? உங்களுக்கே அந்நியமா?


எவ்வளவு பெரும் மோசடியான காரியங்களை செய்கின்றீர்கள்?


எது கிறிஸ்தவ வாழ்வு என எங்களால் பலபேரை காட்டமுடியும், அது செயிண்ட் பீட்டர் முதல் அன்னை தெரசா வரை இது கிறிஸ்தவ வாழ்வு என காட்ட முடியும்.


உங்களால் யாரை காட்ட முடியும்?


பால் தினகரனையா? அல்லது அவரை போல இன்னும் பலரையா? அவர்கள் கிறிஸ்தவர்கள் என உலகம் ஒப்புகொள்ளும் என நினைக்கின்றீர்கள்?, அந்தோ பரிதாபம்.



No comments:

Post a Comment