Saturday, September 24, 2016

உலகின் முதல் அரசியல்வாதி அவனே...

முதலில் மனிதன் அறிவுபெறுவதே கடவுளுக்கு பிடிக்கவில்லை, பாம்பின் உதவியால் அவன் அறிவு பெற்றதும் கடவுள் அவனை ஓட ஓட விரட்டினார்.


பின் மனிதன் ஒரே மொழி பேசி ஒரே இனமாக இருந்தது கடவுளுக்கு பிடிக்கவில்லை, மொழிகுழப்பம் கொடுத்தார்


மொழிப்பிரச்சினை உண்டாயிற்று




ஒரே ஒருவனை மட்டும் அழைத்து உன் சந்ததி என் இனம் என சொல்ல ஆரம்பித்ததில் இனப்பிரச்சினை உண்டாயிற்று.


அதுவும் இது உன்நாடு, நீங்கள் எனமக்கள் மற்றவர்கள் எல்லோரும் நாசமாய் போகட்டும் என்பதில்தான் வரலாற்றின் முதல் இனவெறி தொடங்கிற்று


இந்த சம்பவங்களை எல்லாம் பைபிளும் குரானும் அழுத்தமாக சொல்கின்றன.


பாலஸ்தீன தீரா அழுகைக்கும், நொடிக்குநொடி வெடிக்கும் அரேபிய வெடிகுண்டுகளுக்கும் இதுதான் முதல் மூலப்பிரச்சினை.


நால்வகை சாதிபிரிவினை நானே உருவாக்கினேன் என இந்துக்களின் கடவுள் சொல்கிறது


இந்தியாவின் ஏழ்மைக்கும், கண்ணீருக்கும் இதுதான் அடிப்படை பிரச்சினை.


ஆக இந்த மொழி,இனம்,சாதி எல்லாமே கடவுள் ஆரம்பித்து வைத்த பிரச்சினைகளே, மனிதன் எப்படி முடித்துவைக்க முடியும்?


இவ்வுலகில் மனிதன் பிரிந்துகிடந்து அடித்து சாகட்டும் என அவரே தொடங்கிவைத்தபின் புத்தனும்,மார்க்ஸும், பெரியாரும் என்ன செய்துவிட முடியும்?


எங்கெங்கோ சுற்றி இப்போது கோயமுத்தூரும் நிம்மதி இழக்கும் நேரம்.


கடவுள்களுக்கு மனுக்குலத்தின் மீது அப்படி என்ன பயம் அல்லது வெறுப்பு??


பதில் கேட்டாலும் கிடைக்காது,


ஆனால் இப்பூமியில் மனுக்குலம் ஒற்றுமையாக வாழ கடவுளுக்கு பிடிக்கவில்லை என்பது மட்டும் தெரிகின்றது.


உலகின் முதல் அரசியல்வாதி அவனே, நிச்சயம் அவனே.


ஆனால் அதில் அவனுக்கென்ன லாபம் என்பதுதான் புரியவே இல்லை.










சொர்க்கம் என்பது மீன் குழம்பு ஊற்றி பிசைந்த சம்பா அரிசி சோற்றில் இருக்கின்றது.





No comments:

Post a Comment