Tuesday, September 6, 2016

அங்கே இரட்டை இலை, இங்கே இரட்டை நிலை

கர்நாடகாவுக்கும் தமிழகத்துக்கும் என்ன வித்தியாசம்: கருணாநிதி கடும் குற்றசாட்டு


ஒன்றுமே இல்லை, அவன் தேசிய உணர்வில் இருக்கும் மாநிலம் , தேசிய கட்சிகள் ஆட்சி அப்படித்தான் இருப்பான்.


தமிழகம் திராவிட உணர்வில் ஊறி தேசிய கட்சிகளை ஏதோ ஐ.நா சபை தூதர்களை போல அணுகும் மாநிலம், அப்படி ஆக்கி வைத்தது சாட்சாத் இவர்தான், அதனால் தமிழகம் இப்படித்தான் இருக்கும்


என்னமோ இவர் ஆட்சியில் தஞ்சையில் முப்போகம் விளைந்தது போலவும், கல்லணையே இவர் கட்டியது போலவும் பேசுவார்.


ஜெயா காத்த அமைதியினைத்தான் அன்று இவரும் காத்தார், ஜெயா எழுதிய கடிதங்களைத்தான் இவரும் எழுதினார். கூடுதலாக 15 வருடம் மத்திய அரசில் அட்டைபோல் ஒட்டிகொண்டும் இருந்தார்


ஆக குற்ற தராசு முள் இவர் பக்கமே அதிகம் சாயும், இதே கலைஞர் ஆட்சியிலிருந்து நீர் வரவில்லை என யாராவது கேட்டால் என்ன சொல்வார் தெரியுமா?


"அங்கு வாழும் தமிழர் நலன் முக்கியம் (மகள் செல்வி நலம்), பேசி முடிவெடுக்கலாம், நான் என்ன அணையில் குதிக்கவா முடியும்? பொறுமை காப்பீர், ஏற்கனவே டெல்லிக்கு கடிதம் எழுதியாகிவிட்டது"


அவர் அப்படித்தான் பதவியில் இருந்தால் ஒரு நிலை, எதிர்கட்சி என்றால் இன்னொரு நிலை, இரட்டை நிலை


அங்கே இரட்டை இலை, இங்கே இரட்டை நிலை. வாழ்க தமிழ்நாடு






சீனாவினை அமெரிக்கர்கள் கண்டிக்க தொடங்கிவிட்டனர், சீனாவிலே சீன கடல் ஆதிக்கத்தை அமெரிக்க அதிபர் சாடியுள்ளார்.


சீனா எப்படி பதிலடி கொடுத்திருக்கின்றது?


கலைஞரை சாடினால் துரைமுருகன் பதிலளிப்பார், சர்ச்சையான கருத்துக்களுக்கு வீரமணி பதிலளிப்பார் இது கலைஞர் ஸ்டைல்.


அதே அங்கு எப்படி நடக்கின்றது? அதே தான் வடகொரியா ஏவுகனை சோதனை மிரட்டல் , இன்று நடந்திருக்கின்றது :)


இதுவும் ஒரு வகை அரசியல்

No comments:

Post a Comment