Monday, September 12, 2016

காவேரி : என்னை சிறையில் அடைத்து விடுவார்கள் : சீமான்

தமிழ்நாட்டில் இப்போது காவேரிக்காக நான் போராட்டம் நடத்தினால் என்னை சிறையில் அடைத்துவிடுவார்கள் : சீமான் அறிக்கை.


அப்படியானால் முன்னர் இவர் இலங்கை தமிழர்களுக்காகவும் இன்னபிற அழிச்சாட்டிய போராட்டம் நடத்தும்பொழுதெல்லாம் "யாரோ"" உங்களுக்கு ஆபத்து இல்லை, சிறையில் அடைக்க மாட்டோம் அல்லது அடைக்கவிட மாட்டோம் என சொல்லி இருகின்றார்களா? என்றேல்லாம் நாம் கேட்க கூடாது.


அப்படியானால் தமிழகத்தில் பிரபாகரன் கொடியினை பிடி, படத்தினை பிடி, தடை எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் இந்திய அரசு உன்னை பிடித்துவிடாமல் நாங்கள் பார்த்துகொள்கிறோம் என யாரோ சொல்லி இருந்தார்களா?


இப்பொழுது ஜெயலலிதா அரசு இவரை பிடித்து உள்ளே போடமாட்டோம் என உத்திரவாதம் கொடுத்தால் இவர் போராடுவாரா? இதனை அதிமுகவின் ஒன்றிய செயலாளர் கூட அழகாய் செய்வானே, இந்த தமிழர் கோஷம், முஷ்டி கோஷம் எல்லாம் ஏன்?


ஈழதமிழருக்கு ஒன்று என்றால், அதாவது பிரபாகரனின் புலிகளுக்கு ஏதும் என்றால் கடும் போராட்டங்கள் நடத்த்தி, முத்துகுமார் போன்றோர்கள் உணர்வில் உந்தபட்டு சாக காரணமாக இருந்த இவரை போன்றவர்கள் எல்லாம் இப்போது தமிழக தமிழர்களுக்காக ஏன் அமைதி?


ஈழதமிழனுக்கொரு நியாயம், காவேரி கரை தமிழனுக்கொரு நியாயமா?


அப்படியே பெங்களூர் வாழ் தமிழர்களுக்காக அமைதி காப்போம் என சப்பைகட்டு கட்டினாலும், அன்று ஈழப்போர் நடக்கும்போது கொழும்பில் தமிழர், சிங்கள ராணுவ ஆட்சியின் கீழ் தமிழர்கள் யாழ்பாணத்திலும் மட்டகிளப்பிலும் இல்லையா?
அவர்களுக்கு ஆபத்து அன்று இல்லையா?


அப்படியானால் சிங்களை விட கன்னடன் கொடூரமானவன் என்றொரு அறிக்கை விடவேண்டும் என அச்சமா? இல்லையா?


இதைபற்றி எல்லாம் யாரும் கேட்கமாட்டார்கள், நாமும் கேட்க கூடாது. ஆனால் இப்படிபட்ட முடிவுக்கு எல்கேஜி குழந்தை கூட வரும்.


அதாகபட்டது கலைஞர் ஆட்சி என்றால் அன்னார் கண்டபடி கேள்வி கேட்கவும், இல்லாத அட்டகாச பேச்சுக்களை பேசவும் எங்கிருந்தோ உரிமை வழங்கபட்டிருக்கின்றது, அன்னார் ஆடியிருக்கின்றார்.


இப்பொழுது அப்படி அல்ல, சிறையில் அடைத்து விடுவார்கள் ஹிஹிஹி என பம்முகின்றார், இலங்கை தமிழருக்காக சிறை செல்லவும், அதனை உடைக்கவும் தயார் என முழங்கிய இவர்.


இவர் இவரே தான், இப்பொழுது தமிழக தமிழர்களுக்காக சிறை செல்ல தயக்கம் என்கிறார்.


இருக்கட்டும், அவர் அப்படித்தான்.


கொஞ்சநேரத்திற்கு முன்பு மூன்றாம் பிறை சினிமா பார்த்தேன், ஸ்ரீதேவி ஒரு குரங்கிற்கு உத்தரவிட்டு கொண்டிருந்தார்.


ஆட்ரா ராமா, தாண்டுரா ராமா....


எப்படிபட்ட படம் அது, ஸ்ரீதேவி, கமலஹாசன், சில்க் என எல்லோருமே நடிப்பில் பட்டையினை கிளப்பியிருந்தார்கள், அந்த குரங்கு உட்பட...









கன்னட முதல்வர் ஏதோ செய்து 12 ஆயிரம் கன அடியாக நீரினை குறைக்க செய்திருக்கின்றார், ஆக செப்டம்பர் 20ம் தேதிவரை வரும் நீரிலே ஒரு பங்கு குறைத்தாகிவிட்டது


நம்முடைய முதல்வர் என்ன செய்வார்?, ஒரு அனைத்து கட்சி கூட்டம் நடத்துவாரா? பெரும் வகையில் மூவ் எடுப்பாரா என எதிர்பார்க்கும்பொழுது அறிவித்தார் பாருங்கள், சர்வ நாடியும் அடங்கிவிட்டது


நத்தம் விஸ்வநாதன் விரட்டியடிப்பாம், நமது டிசைன் இப்படி










No comments:

Post a Comment