Wednesday, September 7, 2016

காவேரி கரையிருக்கு.....

 



பழையபடி கவிஞராக டி.ஆர் திரும்புவார் எனும் நமது கோரிக்கைக்கு அவர் செவிசாய்த்துள்ளார், ஆனால் இம்முறை காதல் கவிதை அல்ல.


பட்டுகோட்டை கல்யாண சுந்தரம் ஸ்டைலில் அரசியல் கவிதை. அவர் வைத்திருப்பதாக நம்ப்படும் கட்சி லதிமுக சார்பில் சிறுவாணி அணைக்கெதிராக அவர் பொங்கிய கூட்டத்தில் வந்த கவிதை இது


"எங்கே போய்க்கொண்டிருக்கிறது இந்திய நாடு
தண்ணீருக்காக தமிழகம் படுகிறது படாத பாடு.
எங்கே இருக்கிறது தேசிய ஒருமைப்பாடு.




மத்திய அரசே நடிக்காதே.
வயிற்றில் அடிக்காதே.


மத்திய அரசே இனியும் காட்டாதே மெத்தனம்.
இதுதானா அரசின் லட்சணம்"


இப்படி சிறுவாணிக்காக பொங்கிவிட்டாரா, இனி மைசூர் காவேரிக்காக விரைவில் சூப்பர் கவிதை ஒன்று விரைவில் வரும்


சந்தேகமே இல்லாமல் சொல்லலாம், "இவர் வேறு மாதிரி"







இரண்டு ஆண்டுக்கு முன்பு கோலாரில் இன எழுச்சி மாநாடு நடத்தி, கோலார் சுரங்கத்தை மூடி தமிழர் வாழ்வினை கெடுத்த மத்திய அரசு ஒழிக, நாமே மாற்று என முழங்கிய சீமானை


இப்பொழுது காவேரிக்காக கன்னடம் பற்றி எரியும்பொழுது காண முடியவில்லை


நான் தமிழக முதல்வரானால் கன்னடனிடம் கைஏந்த மாட்டேன், அப்படி ஒரு தீர்வு என்னிடம் இருக்கின்றது என தந்திடிவியில் சொன்னார் சீமான்,





சரி இப்பொழுதாவது அது என்ன திட்டம் என சொல்லலாம் அல்லவா?

எல்லோர் வீட்டு மாடியில் இருக்கும் சின்டெக்ஸ் டேங்க் தண்ணீரையும் காவேரியில் கொட்டும் திட்டமாக இருக்குமோ?

அங்கிள் சத்தமே இல்லை, ஒருவேளை அமைதிபடை 2 படத்தில் அருவியில் குதித்தாரே அப்படி எங்கும் சாடிவிட்டாரோ? இருக்காது அதற்கு முந்தைய காட்சியில் தத்ரூபமாக நடித்திருந்தார். அது வாழைபழம் சாப்பிடும் காட்சி.

அப்ப‌டி இந்த கலவர சூழலில் அன்ன்னார் எங்காவது வாழைபழம் உரித்து தின்றுகொண்டிருக்கலாம்.







No comments:

Post a Comment