Wednesday, September 14, 2016

திருவோணம் வாழ்த்துக்கள்


Stanley Rajan's photo.


அன்றொரு காலத்தில் முந்தைய தமிழர் நாடான‌ சேரநன்னாட்டினை ஆண்டுகொண்டிருந்தான் பெரிய முப்பாட்டன் மகாபலி.


ஆட்சி என்றால் அப்படி ஒரு அற்புதமான ஆட்சியினை கொடுத்தான் என்கிறது புராண வரலாறு. நாட்டில் எங்கும் அமைதி, வளம், செழிப்பு அதற்கும் மேல் நோய் நொடி என்பது ஒரு நொடி கூட இல்லை


எல்லோருக்கும் எல்லாம் இருந்துவிட்டால் நாட்டில் குழப்பம் ஏது?


மன்னன் மாவீரனும் கூட இந்த லோகம், கீழோலகம், மேலோகம் என எல்லா உலகினையும் வென்று ஆண்டுகொண்டிருந்தான். ஆட்சி என்றால் பொற்கால ஆட்சி


இதனை படிக்கும்போது , அந்த கூட்டம் ஓ.. நன்றாக ஆண்டிருக்கின்றான் அதாவது தற்போதைய தமிழகம் போல என நிச்சயம் கன்னத்தில் போட்டுகொள்வார்கள், அவர்கள் அப்படித்தான்


ஆனால் மன்னனுக்கு சிக்கல் பெரிய இடத்து சண்டையில் வந்தது, பெரிய இடம் என்றால் தேவர்கள் அசுரர்கள். இதில் மாமன்னன் மகாபலியின் கரம் அசுரர்கள் பக்கம் இருந்தது, அசுர குரு சுக்கிராச்சாரியாரே அவனுக்கும் ராஜகுரு


மகாபலி சக்கரவர்த்தி எல்லா கேரள மக்களையும் போல பெரும் விஷ்ணுபக்தன். மலையாளம் அப்படித்தான், இன்றைய பத்மநாப சுவாமி கோயிலின் தங்க புதையலே அதற்கு சாட்சி


தோல்வி மேல் தோல்வி பெற்ற தேவர்கள், அவர்களின் புகலிடம் விஷ்ணுவிடம் சென்று அழுதார்கள். அவரும் மகாபலியினை அடக்கினால் அசுரர்கள் வீழ்வார்கள் என கணித்து அவனை விரட்ட சித்தமானார்


மிக குள்ள உருவில் வந்தார், எப்பொழுதுமே ஒருவனின் வீக் பாயிண்ட் பார்த்து அடிப்பதில் விஷ்ணு கெட்டிக்காரர். மகாபலியின் பலவீனம் அவனது கொடை மனம், எதனை கேட்டாலும் மறுக்க மாட்டார்.


அவனிடம் மூன்றே மூன்று அடி நிலம் வேண்டும் என்றார், அவனும் ஏனய்யா 3 அடி நிலம் வைத்து என்ன செய்வீர்? என கேட்கவில்லை, தவமிருப்பார் போலும் என நினைத்து அவ்வளவுதானா என தரதயாரானன்.


ஆனால் சுக்கிரச்சாரியாருக்கு வந்திருப்பவர் யார் என் தெரிந்து தடுத்தார், ஆனால் அன்னாளைய ஆச்சாரப்படி கமண்டல நீர் வார்த்து தானம் தர எழும்பினான் மகாவலி


ஆனால் மகாபலி அழிந்தால் அசுரகுலம் அழியும் என எண்ணிய சுக்கிராச்சாரி வண்டாக மாறி கண்டலத்தை அடைத்து நீர் வராமல் அழிச்சாட்டியம் செய்தார் கன்னட வாட்டாள் நாகராஜ் போல.


ஆனால் குச்சியால் குத்தி வண்டை விரட்டிய வாமணன் விரும்பிய வரம் அடைந்தார்


அவ்வளவுதான் நொடிபொழுதில் அணுகுண்டு வெடித்துகிளம்பும் பெரும் புகையாய் விஸ்வரூபமெடுத்தார் பெருமான், ஒரே அடியில் வானை அளந்தார், இன்னொரு அடியில் பூமி அளந்தார் மூன்றாவது அடி வைக்க இடமில்லை, மன்னா எங்கே உன் வாக்கு என்றார்?


அவனும் கொஞ்சம் சிந்தித்து, பெருமாளே பாதாள உலகை அளந்துகொள் என சொன்னால் முடிந்தது விஷயம், ஆனால் விஷ்ணு பக்தன் தன் கடவுளை பார்த்த மகிழ்வில் தன் தலையினை மிதிக்க கொடுத்தான்


அதோடு அவனை பாதாளம் தாழ்த்தி தேவர்களை நோக்கி புன்னகை பூத்தார் வைகுண்ட நாயகன், ஆனாலும் அவன் மீது அவருக்கொரு பரிவு இருந்தது, அவன் இருந்த இடம் தவறே அன்றி அவன் மகா நல்லவன், அவனிடம் ஒரு வரம் கேள் என்றார்


கேட்டான் மாமன்னன் மகாபலி, அவனது பெரும் குணம் அங்கேதான் விளங்கிற்று


தனக்காக அவன் கேட்கவில்லை, அசுரர்ககாக கேட்கவில்லை, தன் நாட்டு மக்களுக்காக கேட்டான், இதுதான் நல்ல தலைவனுக்கு அடையாள.


எம் மக்கள் ஒருகுறையும் இன்றி வாழவேண்டும், வருடா வருடம் ஆவணி திருவோண நட்சத்திரத்தன்று நான் வந்து பார்க்கவேண்டும், அவர்கள் வாழ்வாங்கு வாழ்வதை கண்டு மகிழ வேண்டும் என்றான்


அவனது உயர்ந்த உள்ளபடியே அவனுக்கு வரமளித்தார் பகவான், அப்படி அவன் வருடம் ஒருமுறை கேரளம் வந்து தன் மக்களை இல்லம் தோறும் சந்திக்கின்றான் என்பது அவர்கள் நம்பிக்கை


அவனை வரவேற்க அத்திப்பு கோலமிடுவார்கள், புத்தாடை அணிவார்கள், மகிழ்ச்சியினை காட்ட படகு ஓட்டுவார்கள், பொன்னூஞ்சல் ஆடுவார்கள், அவனும் மகிழ்ந்து பாதாளம் திரும்புகின்றான்


அதாவது தன் மக்கள் வாழ்வாங்கு வாழ்வதில் அவனுக்கொரு ஆனந்தம், இந்நிகவுதான அவர்களின் ஓணம் பண்டிகை, நெடுங்காலமாய் தொடரும் விழா


அவன் நல்ல அரசன், ஆனால் அசுவமேத யாகத்தின் போது தலைகணத்தில் செருக்கில் ஆடினான், விஷ்ணுவந்து தலையிலே மிதித்தார் என்றொரு கோணமும் உண்டு


திராவிட புரட்சி அந்நாளைய திராவிட பகுதியான கேரளாவினை தொட்டபொழுது வாமணன் ஆரியன், மகாபலி திராவிடன் தந்திரமாக ஆரியர்கள் திராவிடனை அழித்தனர். அதனால் இதனை கொண்டாட கூடாது என கோஷங்கள் எழுந்தன.


பகுத்தறிவு இப்படியெல்லாம் அங்கும் விதைக்கபட்டது ஆனால் பலனில்லை


மகாபலி கொடுர மன்னன் அதனால் வாமணன் கொன்றான், அவன் செத்ததை மக்கள் கொண்டாடுகின்றார்கள் என்றெல்லாம் கதைகள் திரிக்கபட்டன அதுவும் பலனற்று போயின.


மலையாளிகள் அதனை எல்லாம் கொஞ்சமும் சட்டை செய்யாமல் தலைமுறை தலைமுறையாக கொண்டாடி மகிழ்கின்றனர் மகிழட்டும்


மகாபலியினை நினைக்கும் பொழுதெல்லாம் மகாபாரத கர்ணனே நினைவுக்கு வருவான். இருவரும் மகா நல்லவர்கள், கொடையாளிகள், ஆனால் இருந்த இடம் தவறு


நண்பர்களை விட்டுகொடுக்காமல் இறுதிவரை நட்பில் நின்றவர்கள், கொடை கொடுத்தே தங்கள் முடிவினை தேடியவர்கள், இருவருமே யாருக்கும் கிடைக்கா விஸ்வரூப தரிசனத்தை கண்ணார கண்ட பேறு பெற்றவர்கள்.


இன்று ஓணம் பண்டிகை


அக்கால ஆரியபட்டா முதல் இந்நாளைய ஏவுகனை விஞ்ஞானி டெய்சி தாமஸ் வரை


சிறந்த ஓவியர்களில் ரவிவர்மா வரை.


அக்கால பத்மினி முதல் இன்றைய நித்யா மேனன் வரை, ஜேசுதாஸ் , ஜென்சி முதல் சுவர்ணலதா வரை அவர்கள் கொடுத்த கலைஞர்கள் வரிசை மிக பெரிது, அது இருக்கட்டும் சொன்னால் சொல்லிகொண்டே செல்லலாம்.


மலையாள மக்களுக்கு எல்லோரும் ஓண வாழ்த்து சொல்லும் நேரம், நாமும் சொல்லிகொள்வோம் இப்படியாக‌


இறந்துவிட்ட பத்மினி சகோதரிகள், கல்பனா, நடிகை சுஜாதாவினை மட்டும் விட்டுவிட்டு செம்மீன் ஷீலா முதல், தீபா (அவர்தான் முந்தானை முடிச்சு டீச்சர்) அம்பிகா, ரேகா, ரேவதி என அந்த வரிசையில் லட்சுமி மேனன் வரை, அல்ல அல்ல மஞ்சுமா மோகன் வரை எல்லோருக்கும் ஓணம் வாழ்த்துக்களை சொல்லிக்கோள்வோம், அப்படியே சரிதா நாயருக்கும்,


அதிலென்ன வஞ்சனை ஷகிலாவிற்கும் ஒரு வாழ்த்து நமக்கெல்லாம் மலையாளம் கற்றுகொடுத்தவர் அல்லவா.


வாருங்கள் எல்லோருக்கும் சேர்த்து சொல்லிகொள்ளலாம்


இனிய ஓண அஷ்ம்சுகள்


(ஜெயப்பிரதா தெலுங்கர் என்பதால் இவ்வாழ்த்து சாத்தியபடாது)


நண்பர் Babu Rao போன்றோர் நயந்தாரா படத்தின் முன்பு நின்று இன்று முழுக்க மந்திரம் போல அஷம்சுகள் சொல்லிகொண்டே இருப்பார்கள்.


நெல்லுக்கு பாயும் நீர் புல்லுக்கு பாய்வது போல, அமைச்சர்களுக்கு கிடைக்கும் லஞ்சம் பி.ஏக்களுக்கும் பாய்வது போல இன்ன பிற மலையாளிகளுக்கும் கொஞ்சம் வாழ்த்துக்கள் போய் சேரட்டும், அவர்களுக்கு அவ்வளவு போதும்.


அந்த வாமண அவதாரம் அப்படி பிரசித்தி பெற்றது, காரணம் யுத்தத்தால் வெல்லமுடியா மாவீரனை குள்ளன் வடிவில் தானம் கேட்டு வந்து பகவான் வீழ்த்திய வரலாறு


இன்றும் கேரளாவில் திரிகராவில் அவன் அரண்மனைக்கு மேல்தான் வாமணன் கோயில் உண்டு என்கின்றார்கள். ஆச்சரியமாக மகாபலி கேட்டுகொண்டதன் பேரில் கேரளா கடவுளின் சொந்த மாநிலமாகவும் ஆயிற்று.


இயற்கை செழுமை, அழகு, கல்வி இன்னபிற விஷயங்களில் அது அப்படித்தான் தெரிகின்றது. அரேபிய எண்ணெய் வளங்களிலும் குறிப்பிடதக்க பங்கு அவர்களுக்கு வருகின்றது,


பூமிக்குள் புதைத்த மகாபலி அரேபியாவில் பெட்ரோல் பணத்தை மலையாளிகளுக்கு வாரி வழங்குகின்றாரோ என்னமோ?, இருக்கலாம்


இது புராதன கால வாமணன் வரலாறு


தமிழகத்தில் ஒரு வாமண அவதாரம் 90 ஆண்டுகளுக்கு முன்பு உதித்தது, 1950களில் அது விஸ்வரூபமெடுத்தது தமிழகத்திடம் மூன்று அடி கேட்டது.


k


ஒரு காலால் தமிழை அதன் வசன உலகை, வசன எழுத்து உலகை அளந்தது.


இன்னொரு காலால் அரசியல் உலகினை அளந்தது


மூன்றாவது காலை தமிழகத்தை மகாபலிபோல நன்றாக ஆண்டு கொண்டிருந்த காமராஜர் மீது வைத்தது


காரணம் காமராஜர் நல்லவர்தான் ஆனால் இருந்த இடம் காங்கிரஸ், அது சரியில்லை என அது உலகிற்கு சமாதானம் சொன்னது.


ஆனால் காமராஜர் வரம் ஏதும் கேட்டதாக தெரியவில்லை அவர் போக்கில் சென்றுவிட்டார்


இன்று அந்த வாமண அவதாரமும் அது விஸ்வரூபமாய் வந்து உருவாக்கிய
மாயைகளும் தமிழகத்தை ஆண்டுகொண்டிருக்கின்றன.


எப்படிபட்ட ஆட்சி என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை, கலியுக அவதார ஆட்சிகள் இப்படித்தான் இருக்கும்


ஆனால் நிச்சயமாக அவர் வாமணர். மிக குள்ளமாய் வந்து கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபமெடுத்து தமிழகத்தின் எல்லா திசைகளையும் தன் காலால் அளந்துவிட்ட வாமணன் அவர்.


தமிழக கலியுக வாமண அவதாரம் எடுத்திருக்கும் விஸ்வரூபம் அப்படியானது, ஆனால் இந்த விஸ்வரூபத்தை தாண்டி இன்னொரு மாற்றம் இங்கே இப்போதைக்கு சாத்தியமில்லை.


மக்களோ தமிழ்நாட்டு மகாபலி திரும்பவும் வரமாட்டானா என காத்துகொண்டே இருக்கின்றனர்.


வரலாற்றில் மகாபலி, கர்ணன், காமராஜர் எல்லாம் ஒரே வரிசையே, வஞ்சத்தால் வீழ்த்தபட்ட மகா நல்ல ஆட்சியாளர்கள்.


மலையாளிகளுக்கு அவர்களின் மகாபலி ஆண்டுக்கொருமுறை வருகின்றான்


தமிழ்நாட்டு பாகுபலி இனி பிறந்துவந்தால்தான் உண்டு,விடுங்கள் தமிழக தலைவிதி அப்படி


என்ன சொல்ல? அதே தான்


பத்மினி, சுஜாதா, கல்பனா தவிர எல்லா சேர நன்னாட்டு பெண்களுக்கும் இனிய ஓண அஷம்சுக்கள்.










இன்னும் பெரிய முப்பாட்டன் மகாபலி சக்கரவர்த்திக்கு வீரவணக்கம் என போஸ்டர் ஒட்ட கிளம்பாதாவர்களை வன்மையாக கண்டிக்கின்றோம்

எல்லா இனமான உணர்வாளர்களும் காவேரி விவகாரத்தில் பிசி போல,

என்ன தான் பிசியாக இருந்தாலும் முப்ப்பாட்டன்களுக்கு வீரவணக்கம் செலுத்தாமல் இருந்தால் என்ன தமிழ்தேசியவாதிகள்?

No comments:

Post a Comment