Sunday, September 25, 2016

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு உணவு விதிவிலக்கு

மேற்காசியர்களுக்கு பன்றிக்கறி ஆகாது, இந்தியருக்கு மாட்டுகறி ஆகாது, சில இனங்கள் தாவர பட்சிகள்.


ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு உணவு விதிவிலக்கு.


ஆனால் ஊர்வனவற்றில் ரயில், பறப்பவனவற்றில் விமானம், நீந்துவதில் கப்பல் தவிர எல்லாவற்றையும் உண்ணும் பெரும் சமத்துவ உணவுக்காரர்கள் கிழக்காசியர்கள்.


சும்மா சொல்லகூடாது, பிய்த்து வயிற்றுக்குள் எறிகின்றார்கள்.


கலைஞர் கண்ட சமத்துவபுரம் போல, உணவு சமத்துவம் அவர்கள் உணவில் கொட்டி கிடக்கின்றது


அமீபாவும் கிளாமிடமோனசும் கிடைத்தாலும் சூப் வைக்க அவர்கள் தயார்.


மாட்டுகறி, பன்றிகறி சமையல் கற்றால் அது அரசியலாகிவிடும் வேண்டாம், பாய்ந்து வந்து அடிப்பார்கள், இந்தியாவுக்குள் வரமுடியாது.


ஆனால் ஆக்டோபஸ் சமையலாவது அவர்களிடம் கற்றுகொள்ளவேண்டும் என முடிவாயிற்று


சுத்தம் செய்யபட்ட ஆக்டோபஸ் ஆட்டுகுடல் போலவே வந்துவிடுகின்றது, குடல் வறுவல் சமைப்பது போல சமைத்தால் அப்படியே ஆட்டுகுடல் கொடுக்கும் சுவையினை கொடுக்கின்றது


ஆக்டோபஸில் ஆட்டுகுடல் ருசியினை ஒளித்து வைத்திருக்கும் எம்பெருமான், இன்னும் என்னென்ன கடல்வாழ் உயிரில் என்னென்ன ஒளித்து வைத்திருக்கின்றானோ?


ஒவ்வொன்றாக ஆராய்ச்சி செய்யவேண்டும்.

No comments:

Post a Comment