Thursday, September 15, 2016

புதிய கல்வி கொள்கையினை எதிர்த்து போராட்டம் : வீரமணி

குலக்கல்வி திட்டத்தை கொண்டுவரும் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையினை எதிர்த்து போராட்டம் : வீரமணி


மத்திய அரசு இன்னும் கல்விகொள்கை அறிவிக்கவில்லை, ஒரு ஆய்வு செய்துகொண்டிருக்கின்றது அவ்வளவுதான். அதற்குள் குலகல்வி என கிளம்பிவிட்டார்கள்.


சரி அன்று என்ன நடந்தது?




ராஜாஜியின் கல்விமுறை என்பது குலகல்வி திட்டம், அது மகனை தந்தையின் தொழிலை செய்ய வைத்துவிடும் அபாயமுள்ளது என பெரும் போராட்டமெல்லாம் அக்காலத்தில் நடத்தினார்கள், நடத்தியது சாட்சாத் வீரமணி, கலைஞர் கும்பல்


இன்று கலைஞர் மகன் ஸ்டாலின், கலைஞர் தொழிலான திமுக கட்சியின் அடுத்த தலைவர் அதாவது தகப்பன் தொழிலே மகனுக்கு


ஸ்டாலின் மகன் உதயநிதியோ தாத்தாவின் தொழிலான சினிமாவினை மூன்றாம் தலைமுறையாக தொடர்கின்றார்


நாடகங்கள் எழுதிய முரசொலிமாறனின் மகன்கள் சின்னதிரை நாடகங்களை வம்சதொடர்ச்சியாக நடத்துகின்றனர்


பெரியார் சொத்துக்களின் நிர்வாகி எனும் தொழில் நடத்தும் வீரமணியின் தொழில் வாரிசாக அவரது மகன் நியமிக்கட்டுள்ளார் , அதாவது அறக்கட்டளையின் அடுத்த தலைவர்


ஆக குலகல்வி திட்டம் என ஒன்றை சொல்லி போராடிவிட்டு உள்வீட்டிலே அதனை வளர்த்திருக்கின்றார்கள் இவர்கள்


என்னா வில்லத்தனம்



No comments:

Post a Comment