Friday, September 9, 2016

விண்வெளியில் கப்பல் விடுவோம், அண்டசராசரத்தில் இனி எங்கும் உலவுவோம்...




No automatic alt text available.


ராக்கெட் தொழிநுட்பத்தில் மிக நவீனமானது கிரையோஜெனிக், அதாவது பெரும் எடை செயற்கைகோள்களை விண்ணிற்கு செலுத்தும் தொழில்நுட்பம்.


அதில் வென்றிருக்கின்றோம், நாமே உருவாக்கிவிட்டோம்.


இந்தியாவிடம் முன்பு இருந்தது குறைந்த எடை செயற்கைகோள்களை செலுத்தும் எந்திரமே, பெரும் எடை ராக்கெட்டுகளை ஏவ அது போதாது.





ரஷ்யா நமக்கு அந்த தொழில்நுட்பத்தினை தரும்பொழுது குறுக்கே பாய்விரித்து படுத்துகொண்டது அமெரிக்கா.

அதன்பின் நாமாக உருவாக்கமுயன்றோம், பல தோல்விகள். அப்பொழுதெல்லாம் லகான் படத்தில் கிரிக்கெட் பழகும் இந்தியர் போல நம்மை நினைத்து சிரித்த நாடு அது.

இன்று நாமே உருவாக்கி வெற்றிபெற்று நேற்று உலகிற்கு காட்டிவிட்டோம், இனி அமெரிக்க தூக்கம் தொலையும்.

காரணம், விண்வெளி ராக்கெட்டில் பெரும் அனுபவம் அப்படியே ராணுவத்திற்கும் மாற்றபடும், அதன் பின் பெரும் பாய்ச்சல் உண்டாகும், 6000 ஆயிரம் கிலோமீட்டர் அசராமல் பாயும் ஏவுகனைகளை இனி நாம் உருவாக்கலாம்.

அமெரிக்க கம்பெனி ராக்கெட்டுகள் வெடித்து சிதறும் வேளையில் இந்திய ராக்கெட் பொறுப்பாக செயல்பட்டிருக்கின்றது.

கிரையோஜெனிக்கில் நமது வெற்றி மாபெரும் வெற்றி, கொண்டாடவேண்டிய வெற்றி.

பாகிஸ்தான் இதன் பக்கம் எல்லாம் வரமுடியாது, அவ்வளவு பெரும் வெற்றி.

உலகம் வாயடைத்து போய் மிக உன்னிப்பாக நம்மை கவனிக்கின்றது.

அதற்காக மோடி வந்தவுடன் சாதித்தோம் என்பவனை பசுமாட்டு கழுத்தில் கட்டலாம்.

கிட்டதட்ட 30 ஆண்டுகால உழைப்பு இது.

வெள்ளிமலை, மேலை கடல் மட்டுமல்ல.

அண்டசராசரம் முழுவதும் இனி உலவுவோம், விண்வெளி கப்பல் விடுவோம்.

வந்தே மாதரம்!!!






No comments:

Post a Comment