Saturday, September 17, 2016

சிகப்பு சம்பா சோறு.. நாவில் தங்கிவிட்ட நீங்கா சுவை...




கோலாலம்பூரில் சுத்த தென்னிந்திய பொருட்கள் சில இடங்களிலே கிடைக்கும், அப்படி சுற்றிகொண்டிருந்தபொழுது சிகப்பு சம்பா அரிசி கண்ணில் பட்டது, சிறுவயதில் அந்த சோறுதான்


ஊரெல்லாம் அதுதான், திருமணம், கோயில் அசனம் இன்னும் பல விஷேசங்கள் என்றால் அதுதான்.


அக்கால நினைவுகள் அவை.





நெடுநாளைக்கு பின் அந்த அரிசி உலையில் கொதிக்கும்பொழுது அந்த மணமே பால்ய காலத்திற்கு இழுத்துசென்றது

வாயில் வைத்தவுடன் அதன் சுவை அப்படியே அக்கால நினைவுகளுக்கு இழுத்து சென்றது

மணங்களுக்கும், சுவைகளுக்கும் கூட நினைவுகளை கிளறிவிடும் மகத்தான ஆற்றல் கொண்டவை.

அந்த மணத்தில் அக்கால பாட்டிகளும், அந்த சமையல்காரர்களும் நினைவுக்கு வந்துகொண்டே இருக்கின்றார்கள். வரட்டும்

எவ்வளவு விஷயங்களை இழந்திருக்கின்றோம்

தாய்லாந்து, பர்மா என சுவையில்லா பாலிஷ் அரிசி குப்பைகளிலிருந்து இன்று பெரும் விடுதலை

அப்படிபட்ட அற்புதமான சுவை கொடுதிருகின்றது, இனி கொஞ்சம் கொஞ்சமாக அவைகளுக்கு விடைகொடுக்கலாம்.

விலை அதிகம்தான், ஆனால் அது கொடுக்கும் மணத்திற்கு எத்தனை கோடி கொடுப்பினும் தகும்,

காரணம் அது சொந்த கிராமத்து வாசனையினை மீட்டு கொடுக்கும் மணம், உறவுகளோடு உண்ட அந்த சுகமான நினைவுகளை திருப்பிகொடுக்கும் சுவை

நெஞ்சில் நிலைத்துவிட்ட, நாவில் தங்கிவிட்ட நீங்கா சுவை.






No comments:

Post a Comment