Friday, September 30, 2016

பாரத தேசமென்று பெயர் சொல்லுவர், மிடிப் பயங்கொல்லுவார், துயர்ப் பகை வெல்லுவார்...



Image may contain: 1 person , beard, hat and close-up


ஒருவழியாக பாகிஸ்தான் தூக்கத்தை கெடுத்தேவிட்டது இந்தியா, தீவிரவாதிகளின் சொர்க்கமாக இருக்கும் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள், இந்திரா காலத்திலே வராத இந்தியா இனி நம்மிடம் அணுகுண்டு இருக்கும்போது வராது என நம்பிகொண்டிருந்த பாகிஸ்தான் கனவில் மண் அள்ளிபோட்டுவிட்டது பாரதம்.


மிக கச்சிததமாக குறி வைத்து அடித்திருக்கின்றார்கள், சொல்லபோனால் தீவிரவாதிகளை ஒழிக்கும் மிகசிறந்த பிரிவு உருவாக்கபட்டிருக்கின்றது.


முன்பு பஞ்சாப் பொற்கோயில், ராஜிவ் கொலையாளி சிவராசன் முற்றுகை, மும்பை தாஜ்ஹோட்டல் தாக்குதல் என பல இடங்களில் இந்த கமாண்டோ படை தேவை பட்டவர்த்தனமாக தெரிந்தது, அந்த பாடங்களில் இருந்து கற்று இன்று உருவாக்கிவிட்டோம்.


முன்பே இப்படி ஒரு பிரிவு இருந்திருந்தது என்றால், ஈழத்து பிரபாகரன், சிவராசன், மும்பையினை தாக்கியவர்களை ஓசைபடாமல் தூக்கி இருக்கலாம்.


யாழ்பாணத்தில் பிரபாகரனை அன்றே தூக்கி இருக்கலாம், இப்படி சரியாக திட்டமிடாமல், அதே நேரம் புலிகளுக்கு வல்லரசுகள் கொடுத்த பெரும் வலையில் சிக்கி எமது ராணுவம் அன்று கண்ட அவமானம் பெரிது, இன்று எமது ராணுவமும் தன்னை மாற்றிகொண்டது, வாழ்த்துக்கள்


மிகசிறந்த குழுவினை உருவாக்கி இருக்கின்றார்கள்.


கிட்டதட்ட அமெரிக்க சீல் படையினை, இஸ்ரேலிய ஸ்பெஷல் படையினை போன்ற குழு இது. இப்பொழுதெல்லாம் யுத்த தந்திரம் மாறிவிட்ட காலம், எதற்காக முழுபடையெடுத்து எல்லாவற்றையும் அழித்து, அதன் பின் குறிவைத்தவனை கொல்லவேண்டு?


இலக்கினை அதுபோக்கில் விடு, அவன் சுதந்திரமாக சுற்றட்டும். அவனாகவே அவன் பாதுகாப்பினை அவனே தளர்த்துவான். அசந்த நேரம் கழுகுவேகத்தில் தூக்கு, அது போதும்.


முதன் முதலில் இதனை செய்துகாட்டியது இஸ்ரேல், அதன் பின் அமெரிக்கா, உச்சகட்டமாக பாகிஸ்தானில் பின்லேடனை அப்படித்தான் தூக்கியது. இன்று தென்கொரியா வடகொரிய அதிபரை அப்படி தூக்கபோவதாக பகிரங்கமாகவே மிரட்டுகின்றது.


இந்த முண்ணணிநாடுகளை போலவே பாரதமும் சொல்லாமல் அசத்தி இருக்கின்றது, உண்மையில் அசாத்தியமான திட்டம் இது


army


யூரி சம்பவத்திற்கு முன்பாகவே இலக்குகளை மிக துல்லியமாக கணித்த்திருக்கின்றார்கள், நாள் மட்டும் குறிக்கவில்லை. யூரி சம்பவம் நடந்தபின்னும், பெரும் ராணுவநடவடிக்கை போல தயார் செய்தார்கள், பாகிஸ்தானும் யுத்தம் எதிர்கொள்ளதயார் என கிளம்பிற்று, அவர்கள் போர் ஒத்திகையில் சில சீன விமானம் டமால் என விழுந்த அவமானங்களும் நடந்தன.


இந்தியாவோ முழு யுத்தம் என போக்கு காட்டிவிட்டு, கடந்த புதன் நள்ரவில் புகுந்து தீவிரவாத முகாம்களையும், அவர்களுக்கு பாதுகாகலாய் இருந்த பாகிஸ்தான் ராணுவத்தையும் போட்டு தாக்கிவிட்டது, பலிகணக்கு நூறினை தாண்டும் என்கின்றார்கள். பாகிஸ்தான் எம்ஜிஆர் போல இரண்டு என விரல்காட்டி கொண்டிருக்கின்றது


இது சிக்கல் நிறைந்த தாக்குதல், கண்காணிக்கும் பாகிஸ்தான் ராணுவம், அதனை மீறி வானில் சுற்றும் அமெரிக்க செயற்கைகோள்கள் என எல்லாவற்றையும் ஏமாற்றி புகுவது என்பது பெரும் சாகசம், போர் என்றால் புகுந்துவிடலாம். தந்திரமான ஆட்டம் என்றால் ஏமாற்றத்தான் வேண்டும்.


இந்திய உளவுஅமைப்பும், இந்திய செயற்கைகோள்களும் சாதித்திருக்கின்றன, உளவு அமைப்புகளுக்கு வாழ்த்துக்கள், பாகிஸ்தானில் உயிரிழந்த உளவாளிகளுக்கு வீரவணக்கம்.


எவனாவது கக்கூஸ் இல்லாத நாட்டிற்கு செயற்கைகோள் எதற்கு? ராக்கெட் எதற்கு என கேள்வி கேட்டால், அவனை இந்த வெற்றி செய்திகளால் அடிக்கவேண்டும். பார் மடையனே..விண்வெளி பலம் இன்றி இனி யுத்தவெற்றிகள் சாத்தியமே இல்லை, அதனைத்தான் நாங்கள் செய்கிறோம்,


ஒரு கக்கூஸ் கட்ட சொந்தமாக சம்பாதிக்க தெரியாத நீ நாட்டின் சுமை, உன்னை எல்லாம் ராக்கெட்டிலே வைத்து அனுப்பவேண்டும்


இவர்கள் அப்படித்தான், உணவிற்காவது சம்பாதிப்பார்களா? அல்லது அதனையும் அரசு ஊட்டவேண்டும் என்பார்களா என தெரியவில்லை, எல்லாம் அரசு என்றால் இவர்கள் நாட்டிற்கு எதற்கு?


பாகிஸ்தான் அலறி கிடக்கின்றது, ஊரெல்லாம் ஒப்பாரி வைத்து பார்க்கின்றது, எங்கள் இறையாண்மை(!)யில் இந்தியா கைவைத்ததாக கதறுகின்றது, பின்லேடன் கொல்லபட்டபோது அவர்கள் இறையாண்மைக்கு விடுமுறை அளிக்கபட்டிருந்தது குறிப்பிடதக்கது.


ஆனால் உலகநாடுகள் பாகிஸ்தானை "உன்னை பற்றி தெரியாதா?" எனும் நோக்கில் பார்க்கின்றன, இந்தியாவிற்கு ஆதரவு தெரிவிக்கின்றன. சீனா நாங்கள் சமரசம் பேசுகின்றோம் என கிளம்புகின்றது. பாகிஸ்தான் குப்புறபடுத்து அழுதுகொண்டிருக்கின்றது, அணுகுண்டு வீசுவோம் சத்தமெல்லாம் இல்லை.


இந்தியா சாமார்த்தியமாக சொல்கிறது, அவர்கள் ஆக்கிரமித்த காஷ்மீரில் இருந்து (வார்த்தைகள் மகா முக்கியம், முன்பு ஜே மைனாரிட்டி திமுக அரசு என்பார் அல்லவா) வரும் தீவிரவாதிகளை அவர்கள் அடக்கவில்லை, சோ நாங்கள் அவர்களை மட்டும் அழித்தோம், யுத்தம் எல்லாம் செய்யும் எண்ணமில்லை.


பாகிஸ்தான் பதறிகிடக்க, இந்த தேசம் மோடிக்கு ஆதரவினை வழங்கிகொண்டிருக்கின்றது, சோனியா முதல் எல்லோரும் ஆதரவினை கொடுக்கின்றார்கள், வாழ்த்துக்கள் என் தேசமே


இங்கே சிலர் கிளம்பி இருக்கின்றனர், சிங்களன் தமிழரை சுடாதபொழுது கிளம்பாத ராணுவம் பாகிஸ்தானில் புகுந்ததென்ன? ஏய்ய் ஹிந்தியமே என ஒரே அழிச்சாட்டியம்


உண்மையில் வங்கடலில் நடந்ததென்ன?


1970 வரை ஒரு சிக்கலுமில்லை, ஆனால் கடத்தல்கள் பெருக பெருக சிக்கல்கள் பெருகின, அக்கடற்பகுதி அப்படியானது. ஏதும் தொட்டால் தமிழனை கொல்கிறார்கள் என கிளம்புவார்கள், திராவிட அழிச்சாட்டிய ஆட்சிவேறு, அவர்களும் அடக்கியதாக தெரியவில்லை


இந்திரா தந்திரமாக கச்சதீவினை இலங்கை பக்கம் தள்ளி ஆட்டத்தை நீ ஆடு என சொல்லிவிட்டார், ஒரே கல்லில் பல மாங்காய்.


அதன்பின்னும் கடத்தல் ஓஹோ என நடந்தது, உச்சமாக கடத்தல்காரர்கள் தமிழ் போராளிகள் என வேடம் தரித்தபின் அது தீவிரமாயிற்று.


ஆயுதபோராட்ட தொடக்கவாதிகளான தங்கதுரை, குட்டிமணி எல்லாம் அவ்வகையறா, அவர்களிடம் எடுபிடிகளாக இருந்து பின்னாளில் பெரும் ரவுடிகளான சபா ரத்னம், பிரபாகரன் எல்லாம் அந்த கும்பலே.


இப்படியாக அந்த ஈழபோராட்டம் கடத்தல்காரர்களாலேயே தொடங்கபட்டு பின்னாளில் இலங்கை ராணுவத்துடனான கோஷ்டி மோதலாகவே முடிந்தும் விட்டது.


நாம் சொல்லவில்லை கோர்ட்டில் தங்க துரையே எம் தொழில் கடத்தல் என சொன்னது.


இப்படி கடத்தல்காரர்கள் போராளிகளான பின் தமிழகத்திலிருந்து நிறைய கடத்தபட்டன, அவற்றினை தடுக்கும்பொருட்டு சிங்கள கடற்படை ஆரம்பித்ததுதான் துப்பாக்கி சூடு.


இதனை எல்லாம் தடுக்கும்பொருட்டுதான் எமது ராணுவம் அமைதிபடை எனும் பெயரில் சிங்களத்தில் கால்பதித்தது


இன்று சிங்களன் துப்பாக்கி சூட்டை இந்தியா தடுக்காதது ஏன்?,, என முழ்டி தூக்கும் கூமுட்டைகளே, கவனியுங்கள். அன்று இதற்காகத்தான் இந்திய படையே இலங்கையில் குவிந்தது புரிகின்றதா....


அதன்பின் புலிகள் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி, எம் ராணுவம் 1500 பேரினையும் ஒரு தலைவனையும் கொன்றபின் இந்தியா ஒதுங்கிற்று


புலிகள் எல்லாவித கடத்தலிலும் ஈடுபட்டது உண்மை, ராஜிவ் கொலைவழக்கில் புலிகளின் கடத்தல்தங்கம் எப்படி விளையாடியது என்பது விளக்கபட்டுள்ளது, ஈழத்தில் தங்க சுரங்கம் இருப்பதாக தகவல் இல்லை, பின் எப்படி?


இறந்த கோடியக்கரை மிராசுதர் சன்முகம் புலிகளுக்காக கடத்த பதுக்கி இருந்த பொருட்களே சாட்சி.


இந்தியா ஈழபிரச்சினையில் இருந்து ஒதுங்கினாலும் புலிகளின் கடத்தல் தொடர்ந்தது, இலங்கை ராணுவம் சுட்டது


கவனியுங்கள், புலிகள் அழிந்தபின் அவை எல்லாம் குறைந்தன, இப்பொழுதெல்லாம் துப்பாக்கி சூடு எல்லாம் இல்லை.


அதன் பின் நடப்பது மீணவர் பிரச்சினை. நமது மீணவர்களின் பெரும் பலம் முன் ஈழமீணவன் பாதிக்கபட்டதால் வந்த சிக்கல், கைதுகள் என சர்ச்சைகள். சில இடங்களில் எல்லை தாண்டினோம் என நமது மீணவர்களே பகிரங்கமாக சொல்கின்றனர், அப்பொழுதுதான் மீன் கிடைக்குமாம்


அதற்கும் தீர்வுகள் எட்டபட்டுகொண்டே இருக்கின்றன,


ஆக சிங்கள கடற்படை அத்துமீறி வந்தால் எப்பொழுதோ நம் கடற்படை மண்டையினை பிளந்திருக்கும், இது வேறுமாதிரியான சிக்கல்,


ஆனால் முன்பு இந்தியா தன் இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி அவர்களை மிரட்டத்தான் செய்தது


ஆனால் புலிகளோடு அவர்கள் மோதும்பொழுது ஏய் அட்டூழிய படையே திரும்பவா என சத்தமிட்டது தமிழர்களாகிய நாமே தான். நாம் தான் கத்தினோம்.


அன்று எவனுக்காவது ராமேஸ்வர மீணவன்,கடத்தல் இன்னபிற இம்சைகள் நினைவுக்கு வந்ததா? வராது, அது எப்படி வரும்?


போராட்டத்தில் இலங்கையில் சிலபேர் செத்தால், தமிழகத்தில் 4 பேர் செத்தால் என்ன? என்றளவுக்கு இருந்தது இவர்கள் மனநிலை


எல்லாம் முடிந்து 2009ல் இந்தியா தலையிடவேண்டும் என்று கத்தினால் எப்படி எமது ராணுவம் வரும்?


நீங்கள் நினைத்தால் அழைக்கவும், நீங்கள் நினைத்தால் விரட்டவும் அது உங்கள் மீசை மயிறா அல்லது பெருமை மிகு ராணுவமா?


அதன் பின் 2009ல் புலிகளின் சொட்டை முறிக்கபடும்பொழுது எமது ராணுவம் என்ன செய்யும்? இறந்த 1500 இந்திய வீரர்களுக்கு என்ன சொல்லும்? அவர்கள் தியாகம் என்ன வீணா? அதனால் இந்தியா அமைதி காத்தது, அட்டூழிய புலிகள் அழிந்தும் போயினர்


இன்று அதே போல 17 வீரர்களை இழந்ததும் எல்லை தாண்டி சாத்தியிருக்கின்றது.


எவனாவது இங்கே இந்தியகாஷ்மீரை தாண்டி பாகிஸ்தான் காஷ்மீரிலும் இந்தியா அட்டகாசம் செய்கிறது, ராணுவத்தை அனுப்பி மனித உரிமையினை நசுக்குகின்றது என சொல்வானானால்


நிச்சயமாக அவர்கள் மீது தேசதுரோக குற்றசாட்டை சுமத்தியே தீரவேண்டும்.


முன்பு எமது ராணுவம் இலங்கையில் நிலைபெற்றபொழுதே அப்படி கூக்குரலிட்ட இந்த திராவிட புலி சொறி வைகோ, அமைதிபடை வந்தே தீரவேண்டுமென அரசியல் செய்த கலைஞர், இன்னபிற அழிச்சாட்டிய இம்சைகளை எல்லாம் ராணுவத்தின் கட்டுபாட்டில் இந்நாடு விட்டிருந்தால் இந்த சில கூமுட்டைகளின் சத்தம் இன்று கேட்டிருக்காது


அன்று இவர்களை எல்லாம் விட்டு வைத்தது பெரும் தவறு, பின்னைய குழப்பங்களுக்கு எல்லாம் அதுதான் முதல்படி


இனியவாது இந்திய அரசு விழித்துகொள்ளவேண்டும்


ஒரு சில தமிழக‌ அல்லக்கைகளை, பைத்தியங்களை, மூளை இல்லா முண்டங்களை எண்ணி இந்திய அரசு யோசிக்கவேண்டாம்


பெரும்பான்மையான தமிழர்கள் இந்தியாவினையே நேசிக்கின்றனர், வோட்டு , அரசியல் வேறு நாட்டுபற்று வேறு.


எமக்கு பிந்ரன்வாலே, புர்கான், ஹபீப் சயித், மசூத், பிரபாகரன் என எல்லோரும் ஒரே வரிசையே


இதோ எல்லையில் நடந்த தாக்குதலை மொத்த தமிழகமும் வரவேற்கின்றது, எமது மாநில மக்கள் அந்த பெருமை மிகு ராணுவத்திற்கே பக்கபலமாய் இருக்கின்றனர்,எக்காலமும் இருப்பார்கள்.


ஈழபிரச்சினையில் மட்டும் போலி அரசியல்வாதிகளால் அவர்கள் குழப்பட்டனர், பின் உண்மை உணர்ந்து புலிகளை விரட்டியும் விட்டனர், ராஜிவ் கொலையில் கொலையாளிகளை கண்டுபிடிக்க எம்மக்கள் கொடுத்த ஒத்துழைப்பு பின்னாளில் பிரபாகரன் கொல்லபடும் வரை தொடர்ந்தது உண்மை.


இந்த தேசம் யுத்த தந்திரங்களில் புதிய பரிணாமத்தை எட்டியாயிற்று, இனி இந்திய அருகாமையில் இருந்து இந்தியாவினை எதிர்க்கமுடியாது என எதிரிகள் புரிந்தே கொண்டனர், தாவூத் இப்ராஹிம் இம்மாதிரி முறையில் கொல்லபட அதிக நேரம் ஆகாது.


ராணுவ உலகம் ஒருவித அச்சத்துடனே இந்தியாவினை நோக்க ஆரம்பித்திருக்கின்றது, வாழ்த்துகள் ராணுவமே



”பாரத தேசமென்று பெயர் சொல்லுவர் – மிடிப்
பயங்கொல்லுவார், துயர்ப் பகை வெல்லுவார்”


என்ற எங்கள் தேசகவிஞனின் வாக்கு மெய்யாகிவிட்ட காலம், அவன் வழியிலே நாங்களும் சொல்வோம்



"பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டு வோம்.



வந்தேமாதரம்!! ஜெய்ஹிந்த்!!!





No comments:

Post a Comment