Thursday, September 1, 2016

1 GB டேட்டா 50 ரூபாய் : அம்பானி குழுமம் அதிரடி

1 GB டேட்டா 50 ரூபாய் : அம்பானி குழுமம் அதிரடி


ஆயிரம் சர்ச்சைகள் வந்தாலும் அக்கால அம்பானியின் சில அதிரடிகள் பெரும் வரலாறு, அவர் களத்தில் வந்த பின்புதான் பெரும் வியாபார சாம்ராஜ்யங்கள் வீழ்ந்தன, 150 வருட பாரம்பரியம் கொண்ட கம்பெனிகளை எல்லாம், வெறும் 15 வருடத்தில் வீழ்த்தியவர் அவர்.


ஜவுளி தொழிலில் அவர் அடித்த அடி அப்படி. இந்த விலையில் கொடுத்தால் கட்டுபடியாகிறதல்லவா? அப்படியானால் அவர்கள் என்ன சம்பாத்தியம் செய்திருப்பார்கள் என்ற அவரின் கேள்வியே பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியது.




ஆலமரமாக நின்று நாங்கள் வைத்ததுதான் சட்டம், விலை என இருந்த பெரும் கம்பெனிகளை சாமான்யனாக வந்த அவர் வீழ்த்திகாட்டினார், வியாபார உலகில் அவர் அணுகுமுறை இன்றளவும் பெரும் புதிர்.


இன்று தொலைதொடர்பு துறையிலும் அதே போல அடித்து நொறுக்க கிளம்பிவிட்டார்கள்


இன்று உலகெல்லாம் பெருகிவரும் அந்த மலிவுவிலை கலாச்சாரம் எல்லா விஷயத்திலும் மக்களை மகிழ்வித்து வருகின்றன‌


பட்ஜெட் விமானங்கள் வந்து பெரும் விமான சாம்ராஜ்யங்களை ஆட்டம் காண வைத்தன, இன்னும் ஏராளமான நன்மைகள் மக்களுக்கு கிடைக்கின்றன‌.


பெருகிவிட்ட சமூக வலைத்தளம் முன் நிற்கமுடியாமல் பெரும் செய்தி நிறுவணங்களே தள்ளாடுகின்றன, முன்பெல்லாம் இது சாத்தியமில்லை. இன்று எல்லாமே சாத்தியம்


பெருகிவிட்ட வியாபாரங்கள், கம்பெனிகள் வாடிக்கையாளர்களை தக்கவைக்க சகட்டு மேனிக்கு அள்ளிவிடுகின்றன‌


எப்படியோ, கம்பெனிகள் பெருகட்டும் அவைகளுக்குள் மோதட்டும், மக்கள் குறைந்த விலையில் பயனடையட்டும்.


கோடிகளில் புரளும் தமிழ்சினிமாவினை, அதன் டிக்கெட் உச்ச விலையினை அடித்து நொறுக்கவும் நிச்சயம் அம்பானி போல ஒருவன் வருவான். ஒரு நாளில் அந்த மாயை உடைபடும்.


அதுவரை நாம் இணையத்தில் சேரனுக்கு தெரியாமல் ஈழத்தவர் வாழ்க என சொல்லிவிட்டு படம் பார்க்கவேண்டியதுதான்.



No comments:

Post a Comment