Wednesday, September 28, 2016

செய்தி சிதறல்கள்

நாட்டுகோழிக்குள் இருக்கின்றது நாலாயிரம் கோடி சுகம்....


சுவை உணர்ச்சி பொங்கிய மனம், உரிமை வேண்டி சொல்கின்றது,


"வெள்ளைகோழியே வெளியேறு"







நாட்டுகோழிக்குள் இருக்கின்றது நாலாயிரம் கோடி சுகம்....

சுவை உணர்ச்சி பொங்கிய மனம், உரிமை வேண்டி சொல்கின்றது,

"வெள்ளைகோழியே வெளியேறு"



தமிழகம் எங்கும் இன்று பாஜக ஆர்ப்பாட்டம்.


தமிழகம் எங்குமா? அவ்வளவு ஆட்கள் கட்சியில் இருக்கின்றார்களா?.


ஒருவேளை விருந்து ஆர்பாட்டகாரர்களை வெளிமாநிலத்தில் இருந்து இறக்கியிருப்பார்களோ? வெளிமாநிலம் என்றால் இப்போதைக்கு கன்னடம்தான், அவர்களும் வரமாட்டார்கள்





ஆக கட்சி அலுவலகத்தை பூட்டிபோடுவதற்கு மாநில அளவில் பந்த், ஆர்பாட்டம் என பெயரா?

என்ன ஆர்பாட்டமோ, ஆனாலும் மொபைல் கடைக்காரர்கள், கூடவே பிரியாணிகடைக்காரர்கள் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.

ஆர்பாட்டம் ஒரு பாதிப்பினையும் ஏற்படுத்தாது, ஆனால் பொன்னரும் தமிழசையும் சம்பந்தமே இல்லாமல் பேசிகொண்டிருப்பார்கள் அல்லவா? அந்த கொடுமையினை எப்படி தாண்டிசெல்வது என்பது தான் தமிழகத்தின் சவால்







 குஜராத் கோவில் வளாகத்தில் பூசாரி கொலை



ஆக இந்தியா முழுக்க இந்துக்கள் குறிவைத்து கொலை செய்யபடுகின்றனர் என கிளம்புவார்கள் கிளம்பட்டும், இனி கடுமையாக கத்துவார்கள், கொடிபிடிப்பார்கள்.


ஆனால் முன்பே இந்நாட்டில் பல இடங்களில் என்கவுண்டரில் செத்த பிரபல ரவுடிகளும், கோஷ்டிமோதலில் செத்த ரவுடிகளும்,





காஞ்சி கோயிலில் செத்த சங்கரராமனும், திருச்செந்தூர் ஆலய சுப்பிரமணியம் பிள்ளையும் இன்னும் பலரும் இந்துக்கள் என்பது குறிப்பிடதக்கது.

அன்றெல்லாம் ஏன் இப்படி சத்தமில்லை என யாரும் கேட்ககூடாது.

அதாவது இந்துவினை இன்னொரு இந்து கொன்றால் பிரச்சினையே இல்லை, மாறாக சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு இந்து செத்தால் இவர்கள் விடவே மாட்டார்கள.





அப்பல்லோவில் அதிகாரிகளுடன் 1 மணி நேரம் ஜெயலலிதா ஆலோசனை


விரைவில் அப்பல்லோவில் தமிழக‌ சட்டமன்ற கூட்டம் நடந்தது என செய்தி வரலாம்.


அப்பொழுது அப்பல்லோ ஆஸ்பத்திரி சென்னை கோட்டைக்கு மாற்றபட்டுவிட்டது என நாமாக புரிந்துகொள்ளவேண்டும்.




இருக்கட்டும் ஒரு முதல்வருக்கு உடல்நலமில்லை என்றால் ஆளுநர் சென்று சந்தித்து செய்திகளை வெளியிடுவது மரபு.


தமிழக ஆளுநருக்கு ராஜ்பவனில் மான்களை கணக்கிடும் பெரும் பணி இருப்பதால் அப்பல்லோ எல்லாம் வரமாட்டார்.


தமிழகம் இந்தியாவின் சுயாட்சிபகுதி என்பதுபோல இருப்பதனால் விரைவில் பான் கின் மூன் அப்பல்லோ வராமல் மீடியாக்களுக்கு கிடைக்காது முதல்வரின் அப்பல்லோ சந்திப்புகள் தொடர்பான‌ படங்கள்.







 

No comments:

Post a Comment