Wednesday, September 7, 2016

பிரபாகரனை புகழ்கின்றார் சிங்கள ராணுவ‌ மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன

பிரபாகரனை புகழ்கின்றார் சிங்கள ராணுவ‌ மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன , அமைதிபடை காங்களில் சிறப்பாக செயல்பட்டார் என புகழாரம்.


இந்திய -இலங்கை பாலம் சர்ச்சையில், இலங்கை சீறிய போது நாம் அன்றே சொன்னோம் அல்லவா? இலங்கையில் இந்திய ஆதிக்கத்தை இலங்கையர் விரும்புவதில்லை, அமைதிபடையினை விரட்டிய பிரபாகரனை அவர்கள் பெரும் தேசபற்றுமிக்க இலங்கையராக விரைவில் கொண்டாடுவார்கள் என்று.


இதோ கொண்டாட தொடங்கிவிட்டார்கள், இனி சிலவருடம் கழித்து இந்திய படையினை விரட்டிய மாவீரன் என அவருக்கு பாராளுமன்றத்தில் சிலை வைப்பார்கள், பொறுத்து பாருங்கள்.




அவர்கள் அப்படித்தான், மோதுவார்கள் மறு நேரம் ஒன்றாகிவிடுவார்கள், இலங்கையராக பிரபாகரன் பிரேமதாசாவோடு கை கோர்த்தது அப்படித்தான்.


ஆக பிரபாகரன் இலங்கையின் இரண்டாம் சுதந்திர போராட்ட வீரன் என அழைக்கபடும் காலம் நோக்கி அவர்கள் காய் நகர்த்துகின்றார்கள், பிரபாகரன் செய்த சாதனையும் அதுவே. சிங்களன் செய்ய வேண்டிய வேலை எல்லாம் செய்தார், போராளிகளை ஒழித்தல், ராஜிவினை கொல்லுதல் என‌..


சிங்கண ராணுவ அணிவகுப்பில் தப்பிய ராஜிவினை கொன்ற பிரபாகரன் யாருக்கு உதவியிருக்கின்றான் என எளிதாக அனுமானித்துவிடலாம். இது ஒன்றும் பெரும் ரகசியம் அல்ல.


எனவே பிரபாகரன் இலங்கை நலனுக்கு பாடுபட்ட ஒரு இலங்கையன் என அறிவிக்கபடபோகின்றது முடிவு.


இனியும் தமிழகத்தில் எவனாவது மேதகு, மயிறு , தமிழின தலைவன் என பேசிக்கொண்டிருந்தான் என்றால் அவன் எப்படிபட்ட ஏமாற்றுக்காரன் என நீங்களே முடிவு செய்யுங்கள்.



No comments:

Post a Comment