Wednesday, September 21, 2016

இலங்கையும் இந்தியாவும் ஆடும் ஒரு வகை விளையாட்டு

எது எப்படி ஆயினும்  இலங்கையும் இந்தியாவும் ஆடும் ஒரு வகை விளையாட்டு படுவிறுவிறுப்பானது


சீனாவுடன் காலை சிற்றுண்டி, அமெரிக்காவுட கோழி கறி, இந்தியாவுடன் பால் சோறு, பாகிஸ்தானுடன் தேநீர் என ரஜினி சகல இந்திய அரசியல்வாதிகளையும் சமாளிப்பது போல அரசியல் செய்வது இலங்கை


ஆனால் திரிகோணமலையில் இந்திய பிடி ஆயில்குடோன் எனும் வடிவில் உண்டு, அதை அண்டிய சம்பூர் பகுதியில் அணல் மின் நிலையம் எனும் பெயரில் இந்திய பிடி உண்டு.


இந்த சம்பூர் பகுதி புலிகள் கட்டுபாட்டில் இருந்து மீட்கபட்ட முதல் பகுதி, திரிகோணமலையினை ஒட்டியிருப்பதால் முக்கியமான பகுதி இங்கு இரண்டாம் அணல் மின் நிலையம் அமைக்கும் பணியில் இந்தியா இறங்கியது.


அவ்வப்போது உரசும் இலங்கை இந்தியா கட்ட இருந்த பால விஷயத்தில் உரசியது, கொழும்பில் அமெரிக்க பிடியினை வளரவிட்டது, ஹம்பாந்தோட்டாவில் சீனாவினை விட்டது, பாகிஸ்தான் நடமாட்டம் உண்டு, கேட்டால் உங்களை போல அவர்களும் நண்பர்கள், நாம் எல்லோருக்கும் பொதுவானவர் என கள்ள சிரிப்பு சிரிக்கும் இலங்கை


இந்தியா கொழும்பின் முதுகெலும்பினை அடிக்கும் பொருட்டு இணையம் துறைமுகத்தில் கங்கணம் கட்ட தொடங்கிவிட்டது, அது செயல்படதொடங்கும் பொழுது கொழும்பு பாதிக்கபடும், அத்துறைமுகமே இலங்கைக்கு தமிழக டாஸ்மாக் போல பெரும் வருமானம்


அதோடு விடாத இந்தியா தூங்கி கிடந்த சேது சமுத்திர திட்டத்தை ஆய்வு செய்ய தொடங்கிற்று, அது இலங்கை முதுகெலும்பினை முற்றாக முறிக்கும் திட்டம்


ஆச்சரியமாக மாநில அரசுக்கு கூட தெரியாமல் மத்திய அரசு களத்தில் இறங்கி ஆய்வுகளை தொடங்கிற்று, அலறி அடித்த இலங்கை, காசி கரை சாமியார்கள் கைவிட்டுவிட்டார்களே என அலறி சரி பாலமே கட்டலாமா? எனும் அளவிற்கு தூது அனுப்பியது என்கின்றார்கள்


இந்தியா அதற்கென்ன மேலே கப்பல் செல்லட்டும் கீழே சுரங்கம் அமைக்கலாம் எப்படி எங்கள் யோசனை என சொல்ல, இனி இரட்டை ஆபத்தா? என கடும் ஆலோசனையில் மூழ்கியுள்ளது இலங்கை.


இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கலாம் என பார்க்கலாம்? இருந்தாலும் ஒரே ஒரு யூகம் உண்டு.


தமிழ் ஈழம், புலிகள் என்பதை இலங்கை மறந்துவிட்டது போல தமிழகமும் மறக்கவேண்டும், அங்கு பிரபாகரன் படம், கொடி பிடிப்பவர்களை அடக்கினால் பாலம் பற்றி பேசலாம் என இலங்கை இந்தியாவிடம் பேரம் பேசும் வாய்ப்பும் உண்டு.


அப்படி நடந்தால் என்ன ஆகும்?


போராளி பாய்ஸ் சடாரென பிரபாகரன் படத்தை இரட்டை மெழுகுவர்த்தியால் கொழுத்திவிட்டு முப்பாட்டன் முருகனின் படம் பிடித்து, சேவல் கொடி பிடித்து கத்துவார்கள் எப்படி?.


அரோகராரா அரோகரா...


யாழ்பாணம் நல்லூர் கோவில் முருகனும், கதிர்காம முருகனும் வாழ்க, அவற்றிற்கு நாங்கள் ஊர்வலமாக செல்லுவோம் என அடம்பிடிப்பார்கள்.


அப்பக்கம் சிங்களன் திருப்பதி கோவிலுக்கு ஊர்வலம் வருவான்


கோவிந்தா கோவிந்தா


இவர்கள் நிச்சயம் இப்படி தொடங்குவார்கள், அது இருக்கட்டும்


ஆனால் இணைய துறைமுகமும் தொடங்கி சேது சமுத்திரமும் தோண்டபட்டு கப்பல்களை ஓடவிட்டால் அவ்வளவுதான் நிச்சயம் கொழும்பிற்கு கோவிந்தா தான்.


எப்படியும் கொழும்பு இதனை தடுக்க இந்தியாவில் யாரையாவது ஏவிவிடும், பணம் கொடுத்தால் குலைக்க ஆயிரம் பேர் உண்டு,


எப்படி ராமர்பாலம் எதிர்ப்புகளை சமாளிக்கபோகிறார் மோடி என்பது அவர் முன் இருக்கும் சவால்


பார்க்கலாம்.


இந்துத்வ போராளிகள் பாயபோகும் நேரம் வரலாம், கலைஞர் சந்தடி சாக்கில் கடுமையாக காய்ச்சி எடுப்பதையும் ரசிக்கலாம்.


நாமே இதனை கவனித்திருக்கின்றோம் என்றால் அவர் எப்படி கவனித்திருப்பார், மிக விரைவில் பகுத்தறிவு கருத்துக்களோடும், இப்பக்கம் வீரமணி, சு.வீரபாண்டியனோடு களம் இறங்குவார் அவருக்கே உரித்தான வரிகளோடு


"பகுத்தறிவோடு சேது சமுத்திரம் பற்றி நான் சொன்னபோது என் நாக்கினை வெட்டி கேட்ட கங்கை நதிபுறத்து பண்டாரங்கள் எல்லாம், இப்பொழுது தன் தொகுதி எம்பியிடம் தலையில் இருப்பதை கூட கீழே இறக்கு என கேட்க‌மாட்டார்கள்,


தலையில் இருப்பது என்றால் கிரீடம் என்றும் கூட பொருள்...." என்ற ரீதியில் அறிக்கைகள் வரலாம் ..

No comments:

Post a Comment