Tuesday, September 20, 2016

நடந்தாய் வாழி காவேரி...

காவிரிப் பெண்ணே வாழ்க...  நீ வாழ்க...


met

மேட்டூர் அணை திறப்பு, செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசு காவிரி மேற்பார்வை குழு உத்தரவிட்டுள்ளது.


மைசூரில் கடும்பாதுகாப்புடன் அவசர நிலை நீடிக்கின்றது, கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு கடும் பாதுகாப்பு, பெங்களூரில் மதுவிற்க தடை, வாட்டாள் நாகராஜ் மகா அமைதி.


போராளிபாய்ஸ் இந்நிலை பொறுக்காமல் தீகுளித்து செத்துவிடாதீர்கள்.




போராளிபாய்ஸ் ஒருவனையும் காணோம், ஆற்றில் நீர் வந்தால் விழுந்து குளிப்பதை விட்டுவிட்டு, தீ குளித்து சாவார்களாம்


இப்படி இவர்கள் உணர்சிமிக்க ஆனால் அறிவில்லா தொண்டர்கள், இவர்களுக்கு ஒரு தலைவன், சரி இவர்கள் தீகுளிக்க இனி தலைவன் என்ன செய்வான்?


கல்லணை பக்கம் காவேரியில் ஆனந்தமாக நீராடுவான், என் மண்ணின் என் முப்பாட்டன் குளித்த நதியில் நான் குளிப்பதை பெருமையாக கருதுகிறேன் என விரைவில் அள்ளிவிடுவான் பாருங்கள்


மேட்டூரை தாண்டி காவேரி நிறைந்து ஹோ.. எனும் ஓசையுடன் வரும் காட்சி சொல்லி விளக்கமுடியாத அழகு, மனதினை நிறைக்கும் காட்சி.


ஆனால் அந்த ஓசையினை மிஞ்சி இனி சட்டசபையில் எழும்பும் பாடல்களை நினைத்தால் கலக்கமாக இருக்கின்றது, சும்மாவே பாடுவார்கள் இனி என்னென்ன ராகமோ?


"அம்மா போற்றுதும், அம்மா போற்றுதும்"
நடந்தாய் வாழி .....
வான்பொய்யினும் தமிழக வாக்கு பொய்க்காத .....


இளங்கோவடிகள் ஆவி காதை பொத்திகொண்டு ஓட தொடங்கும் நேரம்,


மனிதர் இருந்திருந்தால் சிலப்பதிகாரம் எழுதியதற்காக மேட்டூர் அணையிலே விழுந்து செத்திருப்பார்.



No comments:

Post a Comment