Monday, September 5, 2016

சீனாவில் ஒபாமா... இப்படி பண்ணிட்டாங்களே...


ob


பெரிய மனிதனுக்கு நடக்கும் மரியாதை குறைவு பெரும் செய்தியாகிவிடுகின்றது, அப்படி சீனா ஒபாமாவினை அவமானபடுத்திவிட்டதாக பொங்கி தீர்க்கின்றனர் அமெரிக்கர்கள்.


எது ஒரு பெரிய நாடு என்றாலும் அமெரிக்காவிற்கு பிடிக்காது, அதுவும் சவால் விடும் நாடென்றால் சுத்தமாக பிடிக்காது, மறைமுகமாக ஆடுவார்கள்.


இப்பொழுது வளர்ந்துவிட்ட டிராகன் சீனா, அது ஜப்பானை உரசுகின்றது, தென் சீன கடல் முழுக்க எனக்கு என மல்லுகட்டுகின்றது, சர்வதேசம் கடலை விட்டு போ என சொன்னாலும் காவேரியில் கன்ன்டம் போல எதனையும் மதிப்பதாக‌ இல்லை. அமெரிக்காவிற்கும் அதற்கும் முறுகலான நிலை.


காரணம் அந்த கடல்பரப்பு போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்தது, முழுக்க சீன கட்டுபாடு என்றால் சிக்கல், அதனால் அமெரிக்க போர்கப்பல்கள் வந்து நிற்கின்றன, இது சீனாவிற்கு எரிச்சலோ எரிச்சல்.


இந்நிலையில் சீனாவில் ஜி20 மாநாடு நடைபெற்றது, அதற்கு அமெரிக்க அதிபர் வந்தார். அவர் விமானத்திற்கு வழங்கும் நகரும் படிகட்டுகளை சீனா கொடுக்கவில்லை, வேறு ஏணியில் இறங்கினார் ஒபாமா, அதாவது வழக்கமான ஸ்டைலில் இல்லாமல், சரக்கு லாரியில் இருந்து இறங்குவது போல இறங்கியது ஒரு அவமானமானது.


இன்னொன்று நமது மோடி போன்றவர்களுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு கொடுத்த சீனா, ஒபாமாவிற்கு ஒரு ஓலைபாயினையும் விரிக்கவில்லை, அதற்காக மோடி ஒபாமாவினை விட பெரும் தலைவராகிவிட்டார் என அடிப்பொடிகள் சொன்னால் அர்த்தமில்லை, ஒபாமாவினை அவமானபடுத்தியிருக்கின்றார்கள்


சீனா சொல்லும் காரணம் வேறு, பொதுவாக அமெரிக்க அதிபர் எங்கு சென்றாலும் அமெரிக்க குழுதான் பாதுகாப்புகொடுக்கும், காரணம் அதிபர் அவர்களின் உச்ச மதிப்பு. ஆனால் சீனா எங்கள் நாட்டில் நாங்கள் கொடுப்பதுதான் பாதுகாப்பு என்பது போல முரண்பட்டிருக்கின்றார்கள், அமெரிக்க குழுவோடு மோதல் நடந்திருக்கின்றது.


அதில் உனக்கு கம்பளம் எல்லாம் இல்லை போ என சொல்லிவிட்டு, அமெரிக்க பாதுகாப்பு குழுவினை நோக்கி இது எங்கள் நாடு, என கத்தியிருக்கின்றார் ஒரு சீன அதிகாரி.


ஒபாமாவோ, அன்று இலங்கையில் தாக்கபட்ட ராஜிவ் பெருந்தன்மையாக நடந்துகொண்டதை போல விட்டுவிட்டார், ஆனால் அமெரிக்கர்கள் கொதித்துகொண்டிருக்கின்றனர். தங்களுக்கே அவமானம் நிகழ்ந்துவிட்டதாக கடும் கொதிப்பு.


ஒபாமாவிற்கு இன்னும் 65 நாட்கள் கூட இல்லாததால் அவர் அமைதியாக இருக்கலாமோ?


சரி மோடியும் சென்றிருக்கின்றார், சீனாவோடு கை குலுக்கி இருக்கின்றார். அவர் கை குலுக்கிகொண்டே சீனாவின் பின்னால் வெடிவைத்திருக்கின்றார். அதாவது அவர் கைகொடுக்கும் நேரம் இந்தியா வியட்நாமுக்கான 3000 கோடி நிதியினை அறிவித்திருப்பது சீனாவின் முகத்தை கடுகடுக்க வைக்கின்றது.


சிலர் முகநூலில் குதிக்கின்றார்கள் அல்லவா? பீகாரில் ஆம்புலன்ஸ் இல்லை, பலருக்கு சாப்பாடு இல்லை, பின் ஏன் அடுத்த நாட்டிற்கு உதவி? என்பது மகா அபத்தமானது.


காரணம் தனக்கு உபயோமில்லாமல் எந்த நாடும் எங்கும் கொடுக்காது, இது உலக அரசியல் பாலபாடம் எல்லா உதவியிலும் சுயநலம் உண்டு.


ஆப்கனுக்கு இந்தியா அள்ளிகொடுப்பது ஏன்? அங்கிருந்தே பாகிஸ்தானை பார்க்கலாம், அப்படியே அதன் அருகிலிருக்கும் பலுசிஸ்தான் மக்களிடம், பாக் பிடிக்கவில்லையா? ஓஓ ஏன் தனியாக கிளம்பவேண்டியதுதானே என கேட்கலாம். அதாவது பாகிஸ்தானுக்கு குடைச்சல் கொடுக்கலாம். அப்படி உறவில்லாத காலத்தில்தான் ஏர் இந்தியா விமானம் ஆப்கனுக்கு கடத்தபட்டது குறிப்பிடதக்கது.


ஆப்கனுக்கு செய்யும் உதவிகளில் எல்லாம் பாகிஸ்தானுக்கான செக் இருக்கின்றது.


இலங்கை வேறுமாதிரி கையாளபடவேண்டிய நாடு, நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இலங்கை நாட்டுபற்றாளன் பிரபாகரனின் துரோகம் மட்டும் இல்லை என்றால் என்றோ அங்கு வலுத்திருக்கும் இந்தியா, இப்பொழுது ஏதோ செய்துகொண்டுதான் இருக்கின்றது, ஆனால் இந்தியாவினை இலங்கையிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையும் யாராலோ நடத்தபடுகின்றது, உதாரணம் இந்திய இலங்கை பாலம் வேண்டாம் எனும் இலங்கையின் அழுகை.


சரி வியட்நாமில் ஏன் பணம் கொட்டவேண்டும்.


வியட்நாமினை சீனாவின் அண்டை நாடாக பார்க்கின்றது இந்தியா, பாகிஸ்தானில் சீனா என்ன அழிச்சாட்டியம் செய்கிறது, இலங்கை ஹம்பாந்தோட்டையில், மாலத்தீவில் அது செய்வதெல்லாம் உலகறியும்.


அப்பொழுது நாமும் அவர்கள் காலடியில் இருக்கும் நாட்டில் ஏதாவது செய்யவேண்டும், ஜப்பான், தென்கொரியா அமெரிக்க கட்டுபாடு, தைவானும் அப்படியே, கிழக்கே சீனாவினை எதிர்க்க துணிந்த நாடு வியட்நாம், ஏற்கனவே நமது பிரம்மோஸ் ஏவுகனை ஒப்பந்தம் அவர்களோடு உண்டு.


மேற்கொண்டு நெருங்குவதுதான் ராஜதந்திரம்.


இந்தியாவில் ஏகபட்ட செலவுகள் இருக்கும்போது, ராக்கெட்டும் அந்நிய நாட்டு நிதிகொடுப்பதும் தேவையா என சிறிதும் சிந்திக்காமல் சொல்லும் நாட்டுபற்றாளர்களை அப்படியே ராக்கெட்டில் வைத்து அனுப்புதல் நலம்


வீட்டில் ஆயிரம் சிக்கல் இருக்கலாம், உணவு கூட பற்றாக்குறையாக இருக்கலாம். ஆனால் வீட்டில் கதவு வலுவாக இருக்கவேண்டுமா வேண்டாமா? பணம் இல்லை என்றாலும் கடன் வாங்கியாவது கதவு போட்டு பூட்டமாட்டோமா? சக்திக்கேற்றபடி பாதுகாப்பு நடவடிக்கை செய்வோம் அல்லவா?


நமது வீடு என்றால் எப்பாடு பட்டாவது காக்கின்றோம் அல்லவா?, அப்படியானால் நாடு என்றாலும் அப்படித்தான்.


இந்த விண்வெளி கட்டுபாடு என்பது இத்தலைமுறைக்கான யுத்த களம், வானில் அனுபவம் இல்லை என்றால் தேசம் நொடியில் சாம்பலாகும், அந்த மகா அவசியமான தேவையினைத்தான் செய்கிறோம், அடுத்த நாட்டிற்கு கொடுக்கும் பணமும் அப்படியே.


மன்மோகன் சிங் செய்தார், மோடி செய்கிறார் இனி அடுத்து வருபவர்களும் செய்வார்கள். இதனை எல்லாம் வீண் என சொல்பவன் நிச்சயம் நாட்டிற்கு சுமை. ராமச்சந்திரன் படம் பார்க்க கூட தகுதியில்லாதவன்.


உலக அரசியல் அப்படியானது, நாமும் உடன்பட்டே ஆகவேண்டும், சில காரியங்களை செய்தே தீரவேண்டும்.


அதில் காங்கிரஸ் அல்லது பிஜேபி எனும் பேதமில்லை. நாட்டிற்கான கடமையினை ஆற்றியே தீருகின்றார்கள், வாழ்த்துக்கள்.


ஒபாமா விவகாரம் அமெரிக்காவில் எதிரொலிக்க, உலகமே ஆவலாய் இருக்கின்றது எதற்கு?


அங்கே டிரம்ப் சும்மாவே அமெரிக்க கவுரவம் உலகில் பாதிக்கபட்டுவிட்டது என சொல்லிகொண்டிருந்தார், நானே அதனை மீட்பேன் என வேறு அறிக்கையிட்டார், இதோ அவருக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது.


சும்மாவே ஆடும் சாமி, பீடம் போட்டு மேளம் அடித்து கிடா வெட்டினால் சும்மா இருக்குமா? அதுவும் தேர்தல் நெருங்கும் நேரம் வேறு.


விரைவில் அதிரடி காட்டுவார் பாருங்கள், எப்படி இருக்கும்? ஈரானை நொறுக்கி அதன் பின் சீனாவினை ஒரு கை பார்க்கலாம் எனும் ரீதியில் இருக்கும்.


நமது ஈழ சிங்கம் சைமன் போல‌





No comments:

Post a Comment