Sunday, September 4, 2016

தவ வாழ்வு என்றால் என்ன ?




அன்னை தெரசா பற்றி ஜெயலலிதா பெருமிதம்


அதேதான் "தவ வாழ்வு" என்றால் என்ன என்று செருப்பில் அடித்தால் பொல இவருக்கு வாழ்ந்து காட்டியவரல்லவா அன்னை,


அதில் அந்த பெருமித உணர்வு வராவிட்டால் எப்படி? நிச்சயம் வந்திருக்கும். பொதுவாழ்வில் இருந்து தன்னையும் அவரையும் ஒப்பிட்டு பார்த்தால் பெருமிதம் என்ன? அவமான கண்ணீரும் சேந்தே வந்திருக்கும்





கொட நாடு, சிறுதாவுர் பங்களாவிற்கும், மெஷினரிஸ் ஆப் சாரிட்டிக்கும் ஒப்ப்பிட்டு பார்த்தால் தெரசா மீது யாருக்கு பெருமிதம் வராது? எல்லொருக்குகும்தான் வரும்.








அன்னை தெரசா காய்ச்சல் பலருக்கு தமிழகத்தில் அடித்துகொண்டிருக்கின்றது, ஆளாளுக்கு அழுது புலம்புகின்றார்கள். என்ன செய்ய? அழுது பழக்கபட்ட நடிப்பு, அழுகை வசனம் எழுதிய அனுபவம் ஆளாளுக்கு அழிச்சாட்டியம் தாளவில்லை

இப்பொழுது எமக்கு பயமெல்லாம் ஒன்றே ஒன்றுதான், திடீரென சீமான் நள்ளிரவில் எழும்பி, அன்னை தெரசா வழியில் போராடியவன் என் அண்ணன் பிரபாகரன் என ஏதும் சொல்லி தொலைத்துவிடுவாரோ எனும் அச்சம் தான்

சொல்லமுடியாது, அன்னார் ஒரு மாதிரி சொன்னாலும் சொல்வார், சொல்லிவிட்டு இருவரும் போராளிகள் என்ற அர்த்தத்தில் சொன்னேன் என அசிங்கமாக ஒரு சிரிப்பும் சிரிப்பார்


அப்படி ஒன்று நடந்தால் அன்னை தெரசா போப்பாண்டவர் கனவில் தரிசனமாகி தனக்கான புனிதர் பட்டத்தை ரத்து செய்யுங்கள் என மன்றாடி நிற்பார் என்பதில் ஒரு சந்தேகமுமில்லை

அங்கிள் பிளீஸ், ஏதும் சொல்லி தொலைத்துவிடாதீர்கள்


 



No comments:

Post a Comment