Saturday, September 3, 2016

தாயகம் திரும்பும் இலங்கை தமிழர்கள்

தாயகம் திரும்பும் ஈழ அகதிகள் எண்ணிக்கை கூடுகின்றது, சமீபத்தில் மட்டும் 456 இலங்க அகதிகள் இலங்கை திரும்பினர், இன்னும் ஏராளமானோர் திரும்பி செல்ல இருக்கின்றனர்.


அவர்களாக வந்தார்கள், அவர்களாக திரும்பி செல்கின்றார்கள். இங்கிருக்கும் ஈழ உணர்வாளன், தமிழர்களை காப்பாற்ற வந்தவன் என சொல்லிகொண்ட யாரும் அவர்களை வரவேற்கவுமில்லை, அவர்களை வழியனுப்பவுமில்லை.


இதுதான் இவர்கள் எங்கோ இருப்பவனுக்கு கொடிபிடிப்பார்கள், அவன் கால்மாட்டில் வந்தால் ஓடிவிடுவார்கள்.


இன்றும் பாருங்கள் லிபிய, சிரிய , ஆப்ரிக்க அகதிகளை ஏற்க விருப்பமில்லாமல் நடுகடலில் செத்து தொலையுங்கள் என கைவிரிக்கின்றன பல நாடுகள். சில நாடுகள் அகதிகளுக்கு நோ என்ட்ரி கார்டு போட்டாகிவிட்டது, மீறினால் சுடுவார்கள்.


ஆனால் என் தேசம் திபெத்தியரை உள்வாங்கியது, வங்கத்தவரை உள்வாங்கியது, பரிதவித்து வந்த ஈழ மக்களுக்கும் கண்ணீர் துடைத்தது. எப்படிபட்ட மனிதாபிமானம் உள்ள நாடு இது.


அந்த ஈழ மக்களை கடந்த 33 வருடமாக காத்துகொண்ட நாடு இந்தியா, அவர்களை அடைக்கலமாக பாதுகாத்த நாடு இந்தியா, ராஜிவ் படுகொலையில் சில ஈழ அகதிகள் என வந்திருந்தோர் சம்பந்தபட்டிருந்தபொழுதும் ஈழமக்கள் மீது ஒரு துரும்பும் படாமல் காத்துகொண்டது இந்நாடு.


இன்று அவர்களுக்காக இலங்கையிடம் பேசி அவர்களை உரிய ஆவணத்துடன் அனுப்பி இருப்பதும் இந்தியாவே, அவர்களுக்கு அங்கு ஏராளமான வீடுகள் கட்டி கொடுத்திருப்பதும் இந்த அரசே


இந்தியாவினையும், இந்நாட்டு அரசினையும் வாய்கிழிய விமர்சிக்கும் வைகோ, அங்கிள் சைமன், ஒரு விவரமும் தெரியாமல் பிதற்றும் திருமுருகன் காந்தி, நெடுமாறன் இவர்கள் எல்லாம் என்ன கிழித்தார்கள்? அவர்களுக்காக என்ன செய்தார்கள் அல்லது போராடினார்கள்? ஒரு மண்ணாங்கட்டியிமில்லை.


மிகுந்த நன்றிகடனோடு இந்தியாவினை வணங்கி அந்நாட்டிற்கு திரும்புகின்றார்கள் அவர்கள். புலிகளால் விரட்டபட்ட அவர்கள் வாழ்வினை திரும்ப கொடுதிருக்கின்றது எம் தேசம்.


இனியாவது அவர்கள் வாழ்வில் வளமும் அமைதியும் பெருகட்டும். அபலைகளாக வந்தவர்களை காத்து, அவர்கள் சந்ததிகளோடு அனுப்பி வைக்கின்றோம், ஆம் ஒரு தலைமுறையே இங்கு உருவானது அவர்கள் முதல்முறையாக தங்கள் தேசம் காணும் நேரமிது, சிலிர்ப்பாண தருணமிது.


திரும்பி செல்லும் ஈழமக்களே சந்தோஷமாக உங்களை கை காட்டி வழியனுப்பி வைக்கின்றோம், இந்த " உணர்வாள" அரைவேக்காடுகள் எப்படி கத்தினாலும் இத்தேசம் உங்களுக்கு என்றும் பாதுகாப்பாக இருக்கும் என்பதை மட்டும் நினைவில் வையுங்கள்.


சென்று வரவேண்டாம், சென்று வாழுங்கள் ஈழ மக்களே.


எதற்கெடுத்தாலும் மக்கள் வரிப்பணம் என்ன ஆனது? என சீறுவோர் இதனையும் நினைத்துகொள்ளலாம், இந்நாள்வரை அம்மக்களை காத்ததில் அந்த வரிப்பணமும் அடங்கி இருக்கின்றது, அதாவது நாம் அரவணைத்திருக்கின்றோம்.


ஒரு பெரும் மானிட சமூகத்தை அரவணைத்து , உணவளித்து இதோ பத்திரமாக அனுப்பி வைத்திருக்கின்றது எம் தேசம் என நினைக்கும்பொழுது ஒரு இந்தியனாக பெருமைபடுகின்றோம்.


வந்தே மாதரம், ஜெய் ஹிந்த்.

No comments:

Post a Comment