Saturday, September 3, 2016

ஐநா பொதுச்செயலாளர் பான் கி மூன்னின் ஶ்ரீலங்கா விஜயம்....


ஐநா பொதுச்செயலாளர் பான் கி மூன்னின் பதவிகாலம் விரைவில் ஒபாமா போலவே முடிவடைய இருக்கின்றது, இந்நிலையில் அவர் இலங்கைக்கு சென்று, யாழ்பாணத்திற்கும் சென்று சில அறிக்கைகளை விட்டிருக்கின்றார்.


Image may contain: 1 person , glasses and suit


இது இவரின் முதல்பயணம் அல்ல, மாறாக 2009 கொடூரபோர் முடிந்து 2 வாரத்தில் மே 25ல் சென்றார், கம்பிவேலி மக்களை சந்தித்தார். வான் வழியாக வடக்கினை சுற்றிபார்த்தார், ராஜபக்சேயினை சந்தித்தார்


சிங்கள பக்கம் அவரை சந்தேகமாக பார்க்க, தமிழர் பக்கம் அவரை ஏக்கமாக பார்த்தார்கள். அவர் சம்பிரதாய பேச்சுக்களை பேசினார் கிளம்பினார். அதன் பின் ஐநாவில் போர் குற்றம் இன்ன பிற சர்ச்சைகள் வநதபோதும் அன்னார் பெரும் அறிக்கை ஏதும் விடவில்லை.


இப்போது இலங்கை தீவிரவாதமில்லா சுதந்திர இலங்கை, ஆனால் தமிழ் மக்களுக்கு இன்னும் தீர்வு கிடைத்திடா அதே இலங்கை


நேற்று வந்தார் பான்கின்முன் , இலங்கையினை சுற்றி பார்த்தார். இலங்கை வேகமாக வளர்கிறது, அமைதி தளைக்கின்றது என்றார் அதோடு விட்டாலும் பராவியில்லை, அடுத்த வரிதான் ஈழ உணர்வாளர்கள் முகத்தில் கரிபூசும் வரிகள்


இலங்கை அரசு இன நல்லிணக்கத்தை மிக நல்ல முறையில் கடைபிடிக்கின்றது, நாடு நல்ல வளர்ச்ச்சியினை பதிவு செய்கின்றது, என பாராட்டினார்


அதன் பின்பு உலக அரசியல் விளையாட்டு ஆரம்பமாயிற்று, ஒரு நாளும் இல்லா கோலமாக யாழ்பாணம் சென்றார்.


இதுதான் கவனிக்கவேண்டியது முன்பெல்லாம் எந்த ராஜதந்திரிகளும் அங்கு செல்லமாட்டார்கள். கொழும்பு போய்விட்டு வந்துவிடுவார்கள், காரணம் அது தமிழர் பகுதி தனி தீவு போன்ற நில அமைப்பு கொண்டது, ஈழத்தவரின் இதயம் அதுதான் என்றாலும் அதனை விட கேந்திர முக்கியத்துவம் கொண்ட பகுதி உண்டென்பதால் தவிர்ப்பார்கள்


பலாலி விமான நிலையத்தை இந்தியா கட்டுபாட்டில் வைத்திருப்பதும், யாழ்பாணத்தில் இந்திய தூதரகம் வந்ததும், முதல் மனிதராக மோடி அங்கு சென்றதும் பல கண்களை உறுத்தியிருக்கின்றன.


அப்படி பான் கின் மூனும் சென்று, அங்கு அர்த்தமுள்ள வரிகளையும் சொல்லி இருக்கின்றார். அதாவது இறுதிபோரில் தமிழர்களை காக்க ஐ.நா தவறிவிட்டது


பொறுப்பான தலைவரிடமிருந்து "தவறிவிட்டது" எனும் வார்த்தை உலக அரங்கில் வருமானால் அதன் பொருள் "எங்களை ஏதோ ஒரு விஷயம் தடுது தயங்கி நின்றோம், முடியும்தான் ஆனால் செய்யவில்லை" என்ற ரீதியிலேதான் அர்த்தமாகும்.


இறுதியில் போர்குற்றத்தை ஐ.நாவும் இலங்கை அரசும் சேர்ந்து விசாரிக்கும் என வழக்கம் போல சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார், இனி ரிட்டையர்டும் ஆகிவிடுவார்.


அவரின் இலங்கை விஜயத்தையும், அவர் சொன்ன வார்த்தைகளையும், அவரின் யாழ்பாண விஜயத்தையும் கூட்டி கழித்து பார்த்து


புரிந்துகொள்ள முடிந்தோர் புரிந்துகொள்ளுங்கள், அவர் சொன்ன விஷயங்களின் சாரம்சம் இதுவே


அதாகபட்டது இலங்கை ஒரு தீவிர்வாதத்தை ஒழித்து நன்றாக வளர்ந்துகொண்டிருக்கின்றது, மக்கள் நல்லிணக்கம் பேணும் நல்ல அரசு அது, ஒரு காலத்தில் சில சர்ச்சைகள் நடந்திருக்கலாம் அதனை இலங்கை விசாரித்து ஐநாவிடம் சொல்லும், அவ்வளவுதான்.


ஐ.நா என்பது அமெரிக்க பண்ணையாரிடம் இருக்கும் கிராமத்து நாட்டாமை, பஞ்சாயத்தில் ஆயிரம் பேசுவார்கள், விவாதிப்பார்கள். ஆனால் பண்ணையாரினை மீறி நாட்டாமை ஒன்றும் பேசமாட்டார். அவரின் செயல்களில் அடாவடிகள் எல்லாம் பண்ணையாரை பாதிக்காது.


அவர் ஏதாவது ஆடு கோழி திருடியவனுக்கு நியாயம் சொல்லிவிட்டு துண்டை தோளில் போட்டு கிளம்பிவிடுவார், அதுவும் பண்ணையார் கண்ணை காட்டிவிட்டார் என்றால் அவ்வளவுதான் திருடிய ஆடு கூட அவனுக்கே.


போனவாரம்தான் அமெரிக்க போர் கப்பல் இலங்கை வந்தது, அதற்கு முன்பு இன்னொரு கப்பல் வந்தது. அமெரிக்க சிறப்பு தூதர்கள் அடிக்கடி கொழும்பு வருகின்றனர்.


வட இலங்கை வாழைபழ விளைவிக்கும் பன்னாட்டு கம்பெனிகளால் வளைக்கபடுகின்றன, அழகான வட இலங்கை கடற்கரைகள் உல்லாச தளங்களாக மாறிகொண்டிருக்கின்றன, இன்னும் என்னவெல்லாமோ தொடங்கிவிட்டது.


புலிகள் இல்லா அப்பகுதியில் பல மாற்றங்கள் வந்திருக்கின்றன, வளர்ச்சிகள் நடக்கின்றன, பல வெளிநாட்டவர்கள் முதலீடுகளை கொட்டுகின்றனர், சம்பாதிக்க போகின்றனர்.


பல வெளிநாட்டு அதிபர்கள் தொடர்ந்து வரபோகின்றார்களாம், எதற்கு? எல்லாம் வியாபாரம்.


ஆக புலிகளை யாரோ குறிவைத்திருக்கின்றார்கள், அவர்கள் அழிந்ததும் வந்து குழுமுகின்றார்கள், எல்லாம் ஒழுங்காக நடக்கிறதா என அடிக்கடி வந்து பார்க்கின்றார்கள், பான் கி முன் உட்பட‌


சீமான் பாய்ஸ் & வைகோ ஓல்டுஸ் & ஒண்மேன் நெடுமாறன் நீங்கள் சொல்லிகொண்டே இருங்கள், ஈழத்தை அழித்தது இந்தியா, கலைஞர், சோனியா


அது ஒருபுறம் இருக்கட்டும், ராஜபக்சே உலகம் சுற்றிகொண்டிருக்கின்றார், பல நாடுகளில் அவருக்கு பெரும் அபிமானம் இருக்கின்றது. இலங்கையின் இரும்பு மனிதர் என அவை அழைக்கின்றன, சில நாடுகள் அடுத்த இலங்கை அதிபர் அவரேதான் என குறிக்கின்றன‌


அப்படிபட்ட ராஜபக்சே மலேசியா வந்தார், தமிழ் அமைப்புக்கள் கொதித்து ஆர்ப்பாட்டம் நடத்தின, பல ஆர்ப்பாட்டங்களை அனுபவத்தில் கண்ட ராஜபக்சே அசால்ட்டாக கடந்து சென்றார் ராஜபக்சே


ராஜபக்சே வரக்கூடாது எனும் தமிழர்களின் கோரிக்கையினை சிறிதும் கண்டுகொள்ளவில்லை மலேசிய அரசு என்பது குறிப்பிடதக்கது.


ஆனால் ராஜபக்சேக்கு ஆதரவான சிங்கள பத்திரிகை ஓப்பாரி தொடங்கிவிட்டது " மலேசியாவில் மறைந்திருக்கும் புலிகள் ஆர்ப்பாட்டம்" என பத்திரிகை தர்மம் காத்துகொண்டது.


ராஜபக்சேக்கு இப்படி தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்துகொண்டே இருக்க, அதனை காட்டியே சிங்கள மக்களிடம் ஆதரவினை அவர் பெருக்கிகொண்டே இருக்கின்றார்


பாருங்கள், அடுத்தமுறை அவர் பொறுப்புக்கு வந்தால் அதற்கு காரணம் வெளிநாட்டில் வாழும் தமிழர்களாகத்தான் இருப்பார்கள், அவ்வகையில் இனி தமிழர்கள் செரிவாக வாழும் எல்லா நாட்டிற்கும் செல்வார் ராஜபக்சே.













No comments:

Post a Comment