Saturday, January 7, 2017

பாவம் ஆண் பாவம்

தமிழகத்தில் இப்பொழுதெல்லாம் வேறுமாதிரியான சிக்கல்களை திருமணமான‌ ஆண்கள் சந்திக்கவேண்டி இருக்கின்றதாம்


அரசியலில் இருக்கும் பெண்களின் கணவர்களும், இன்னும் பல இடங்களில் பணி செய்து பெண்களின் கணவர்களும் அப்பெண்கள் கொடுக்கும் வசவுகளில் காதை பொத்தி கொண்டு ஓடுகின்றார்களாம்


அதாகபட்டது உள்ளாட்சி தேர்தலில் சேர்மன், கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் பதவியினை குறி வைக்கும் பெண்களும் சரி




பள்ளியில் தலமை ஆசிரியர் பணிக்கு குறி வைக்கும் பெண்களும், பிரிஸ்பல் பணிக்கு ஆசைபடும் பேராசியைகளும் கணவர்களை அப்படியே சொல்லி திட்டுகின்றார்களாம்


எப்படி?


"அவனவன் பொண்டாட்டிய முதலமைச்சர் ஆக்குறதுக்கு என்னா பாடு படுறான், அவன் அல்லவா கணவன்?,


நீங்களும் இருக்கீங்களே, ஒரு கவுன்சிலராக்கி, ஒரு பஞ்சாயத்து தலைவராது என்னை ஆக்க ஆசைபடுறீங்களா?


அந்த நடராஜன் சசிகலாவினை முதல்வராக்க எத்தனை வருடம் திட்டமிட்டு, எப்படி உழைத்து சி.எம் அளவிற்கு கொண்டு வந்துவிட்டார்


அவர் மனுஷன், அவர் புருஷன்


நீங்க சுத்த வேஸ்ட், ..புருஷண்ணா நடராஜன் மாதிரி இருக்க வேண்டாமா?.. அடடா எப்படி மனுஷன்? ,


ம்ம்ம்ம் அப்படி எல்லாம் நமக்கு கொடுப்பினையா இருக்கு?"


ஆக நடராஜன் இப்பொழுதெல்லாம் பெரும் உதார கணவனாக தமிழகமெங்கும் கொண்டாடபடுகின்றார், தாய்குலங்கள் வோட்டு இனி அவருக்கு விழலாம்


அவரின் அசைவுகளை தமிழக தாய்குலங்கள் சிலாகித்து கொண்டாடுகின்றன.


ஆனால் அவரால் விழும் வசவுகளால் ஆண்கள் தலைமேல் கைவைத்து அழுகினறனர்


இந்த தமிழக ஆண்குலத்தின் சாபம் நடராஜனை தாக்காமல் இருக்கட்டும்


இதுவரை இந்த கோணத்தில் சிந்திக்காத தாய்குலமே இனியாவது சிந்தித்து, நடராஜனை வாழ்த்துங்கள்.


ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னும் ஒரு ஆண் இருக்கின்றான் என இனியாவது நம்புங்கள்


அப்படியே உங்கள் கணவரையும் உசுப்பேத்த மறக்காதீர்கள்


தயாளு அம்மாளும், ராசாத்தி அம்மாளும் கலைஞரை பின்னி எடுக்க நினைக்கலாம், மனிதர் சும்மாவா யாரும் என்னை சந்திக்க வேண்டாம் என ஓய்வில் இருக்கின்றார்?


கலைஞரா கொக்கா?


திருமதி துர்கா ஸ்டாலின் காதில் கூட புகை வரலாம்


குஷ்பூ தன் கணவரை அப்படி எல்லாம் வசைபாட வாய்ப்பில்லை என எமது ஆழ்மனம் சொல்லிகொண்டிருக்கின்றது.



No comments:

Post a Comment