கட்சியின் சீனியரான தம்பிதுரைக்கு நிச்சயம் கட்சி மீதும் பன்னீர் செல்வம் மீது ஏதோ பெரும் கோபம் இருக்க வேண்டும், காரணம் அவரின் நடவடிக்கைகள் அப்படித்தான் இருக்கின்றன
சின்னம்மா பொதுசெயலாளராக வேண்டும் என முதலில் சொன்னவர் அவர்தான், இப்பொழுது சின்னம்மா முதல்வராக வேண்டும் என சொல்பவரும் அவர்தான்
அதுவும் தன் துணை சபாநாயாகர் லெட்டர் பேடில் கடிதம் எழுதும் அளவுக்கு கடும் ஆர்வம்
ஏன் கோபம் இருக்கும்?
பலமுறை வாய்ப்பு வந்தபொழுதும் கட்சியின் சீனியரான தன்னை விட பன்னீர் செல்வம் எப்படி முதல்வராவது, அதுவும் பலமுறை முதல்வராவது என்ற கோபம் இருக்கலாம்
அதனால் இந்த கட்சியும் ஆட்சியும் நாசமாய் போகட்டும் எனும் அளவிற்கு வெறுப்பு வந்திருக்கலாம்
அதனால் சின்னமா எல்லா பொறுப்பிற்கும் வரவேண்டும் என ஆரம்பித்துவிட்டார்
அவர் என்று அல்ல கட்சியின் சீனியர்கள் எல்லோருக்குமே இந்த கோபமும், பழிவாங்கும் ஆக்ரோஷமும் இருக்கலாம்
ஒன்று கூடி சபதமெடுத்திருக்கலாம்.
அதனால் சின்னம்மாவினை பொதுசெயலாளர் ஆக்கி, முதல்வரும் ஆக்கியே தீருவது என முடிவெடுத்துவிட்டார்கள்
சசிகலாவிடம் கட்சியும் ஆட்சியும் கொடுக்காமல் எப்படி கட்சியினினை அழிக்க முடியும்?
தங்களை அவமானபடுத்திய கட்சியினை அழிக்க அவர்களுக்கு இதனை விட சிறந்தவழி தெரிந்திருக்காது.
https://youtu.be/NZgwHLEE0Ys
No comments:
Post a Comment