Wednesday, January 4, 2017

சோதனை மேல் சோதனை... வருமான வரி சோதனை....

சென்னையில் 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனை


சசிகலா பன்னீரை விரட்ட, மத்திய அரசு காயினை நகர்த்துகின்றது.


ஆட்டம் சுவாரஸ்யமாக செல்கின்றது.




கட்சி தலைவர்களும், பத்திரிகை அதிபர்களும், இன்னும் பெரும் பிம்பங்களும் சடாரென விழுந்து கிடக்கும் சன்னதியில் தொழிலதிபர்கள் மட்டும் விழாமலா இருந்திருப்பார்கள்?


அதனால்தான் ரெய்டு அங்கே நடக்கின்றது.


இவர்கள் இருவரும் ஆடும் சதுரங்கத்தில் காற்றில் பறப்பது எது?


நிச்சயமாக தமிழக மானம்


ஊழல் நிறைந்த ஒரு மாநிலமாக தமிழகத்தை உலகிற்கு அறிவித்துகொண்டிருக்கின்றார்கள்,


உண்மையும் அதுதான் என்பது வேறு விஷயம்


அள்ளுகின்றார்கள், அள்ளுகின்றார்கள் அள்ளிகொண்டெ இருக்கின்றார்கள்


இது எல்லாம் யாருக்கு சேரவேண்டிய பணம்


நிச்சயமாக மக்களுக்கு தரமான சேவைகளுக்கான பணம்


எப்படிபட்ட முரண் இது?


கல்விக்கும், சாலைக்கும், பேருந்திற்கும், குடிநீருக்கும் கையேந்தும் மாநிலத்தில்தான், விவசாயி கொத்தாக சாகும் மாநிலத்தில்தான் இம்மாதிரியான பண குவியல்களும் கண்டுபிடிக்கபடுகின்றன‌


அடுத்தவேளை வாழ்விற்கு அஞ்சி செத்தேபோகும் விவசாயிகள் இருக்கும் மாநிலத்தில்தான் இப்படி பணகுவியலும் அகப்படுகின்றன‌


தமிழன் என சொல்வதற்கும், தமிழகத்தை சேர்ந்தவன் என சொல்வதற்கும் மிகுந்த வெட்கமாக இருக்கின்றது


தமிழன் என சொன்னாலே ஒரு மாதிரியாக சிரிக்கின்றார்கள், குறிப்பாக மலேசிய தமிழர்கள் பார்க்கும் பார்வையே ஆயிரம் அர்த்தங்களை சொல்கின்றது


இப்பொழுதெல்லாம் யாரும் கேட்டால் "எமக்கு மட்டகிளப்பு, அகதியாய் வந்தவன்" என சொல்லிவிட்டு வேகமாக சென்றுவிடுகின்றேன்


அவர்களாவது உலக அரசியலால் நாசமாய் போனவர்கள், நாமோ நம்மை நாமே கெடுத்து நாசயாய் போனவர்கள்


நம்மை விட அவர்கள் எவ்வளவோ பரவாயில்லை


மத்திய அரசு ஆட்டத்தை தொடர்கின்றது


அடிக்கட்டும், ஆழ அடிக்கட்டும்.


தமிழக மானம் பறக்கத்தான் செய்யும் பறக்கட்டும்


நெடுநாள் தேங்கிய சாக்கடையினை சுத்தபடுத்தும்பொழுது நாற்றம் வீசத்தான் செய்யும்


அந்த சாக்கடையே பல கொசுக்களை உற்பத்தி செய்கின்றது, அவை பலுகி பெருகி வீடு வரை பிடித்துவிடுகின்றன.


ஆக ஒரு கொசு பரும் கொசு பட்டாளத்தையும், ராணி கொசு, வேலைக்காரி கொசு என உருவாக்கி பெரும் நோய்களையும் பரப்புகின்றது


மக்கள் கொசுவலை போட்டு முடிந்தால் மருந்து தெளிக்கின்றார்கள், ஆனாலும் முடியவில்லை


இதற்கு ஒரே வழி சாக்கடையினை சுத்தம் செய்வதுதான்


மத்திய அரசு அதனைத்தான் செய்கின்றது


ஆக தனி திராவிட நாடு காண கிளம்பி, பூபாளம் இசைத்து, தமிழன் உரிமை காக்க உருவான மாபெரும் இயக்கத்தின் சாதனை என்ன?


இப்படி தங்க குவியல்களையும், பெரும் புதையல்களையும் உருவாக்கியது


அதுதான் சாதனை.


அந்த சாதனைக்கு கல்வெட்டுக்களை இப்பொழுது மத்திய அரசு எழதுகின்றது


டெல்லி வழக்கும், நடந்து கொண்டிருக்கும் மேக்ஸிஸ் மற்றும் 3ஜி வழக்கும் இருக்கும்வரை ஒரு திராவிட குரலும் ஓங்கி ஒலிக்காது


இந்த வீரமணி, சுபவீ போன்ற அல்லக்கைகள் கத்துமே அன்றி உச்ச தலமை பேசாது.


இப்படிபட்ட சாதனையினை எந்த இயக்கமாவது செய்ய முடியுமா?


இனி சசிகலா என்ன செய்வார்? முதல்வர் ஆகிவிடுவாரோ?


ஆகட்டும்


ஆனால் ஒரு மாநில முதல்வர் சிறைக்கு போன பெருமை அந்த கட்சிக்கு ஏற்கனவே உண்டு.


ஆனாலும் ஊழலை ஒழிப்பேன் என கிளம்பிய ராமசந்திரனின் கட்சியின் ஆட்சியில் இப்படி ஊழல் பணம் சிக்குவதுதான் பெரும் காமெடி..



No comments:

Post a Comment