அது நடிகனால் தொடங்கபட்ட கட்சி, அடுத்த தலைவரும் நடிகையே அதனால் நடிப்பது என்பது கட்சி அடையாளங்களில் ஒன்று
எல்லோரும் நடிப்பார்கள், குனிவார்கள், அழுவார்கள், கதறுவார்கள். கேமரா முன்னால் நடிப்பு அவர்களுக்கு அனாசயாமக வரும்
அந்த நடிப்பு இன்றி நடிகர் கட்சியில் நீடிக்க முடியாது
ஆனால் திமுக வேறு, வசனங்களால் வாழும் கட்சி
பொதுவாக அழமாட்டார்கள், எதனையும் தாங்குவார்கள்
கட்சி பலமுறை உடைந்தபோதே தாங்கியவர்கள், முரசொலி மாறன் போன்ற ஜாம்பவான்கள் மறையும் பொழுதும் கலங்கியதில்லை
ஆனால் ஸ்டாலின் பதவி ஏற்கும்பொழுது குலுங்கி அழுதார் துரைமுருகன்
திமுகவினரில் சிரிக்க சிரிக்க பேசுபவர் துரைமுருகன், அதிமுகவினரை அவர் கலாய்க்கும் விதமே தனி,
பின் ஏன் அழுதார்?
இரண்டு வாய்ப்புத்தான் இருக்க முடியும்
ஒன்று செயல் தலைவர் பதவியில் அவருக்கு ஒரு கண் இருந்திருக்கலாம்
அல்லது அதிமுகவினர் எப்படி பதவி ஏற்றார்கள் என்பதை கலாய்த்திருக்கலாம்
முன்பொருமுறை ஜெயா போலவே குலுங்கி சிரித்தவர் அவர், இம்முறை சசிகலா போலவே அழுதிருக்கலாம்
இந்த இரண்டாவது விஷயத்திற்கு வாய்ப்பு அதிகம். அவர் அப்படியானவர்
அதிமுகவினரை அவர் கலாய்த்தார் என்பதுதான் உண்மையாக இருக்கலாம்.
ஆனால் இப்பொழுது அதிமுகவில் இதனை புரிந்துகொள்ள யாருமில்லை என்பதுதான் சோகம்
நமக்கு புரிகின்றது..

No comments:
Post a Comment