Friday, April 7, 2017

வருமான வரி சோதனை .....

https://youtu.be/LnfPzDsfiFY




எத்தனையோ வருமானவரி சோதனைகள் நடந்திருக்கின்றன, இன்னும் நடக்கும்


சரி இவற்றில் ஏதாவது ஒன்று வழக்கு ஆனதா? யாராவது ஒருவர் தண்டிக்கபட்டாரா? இல்லை


ஜெயா மட்டும் சொத்துகுவிப்பு வழக்கு மட்டும் சிக்கினார், அதற்கு பல காரணங்கள் இருந்தன.




மற்றபடி வருமானவரி சோதனை எல்லாம் இழுத்து மூடபடும், கொஞ்சநேரம் காட்டும் வானவேடிக்கை காட்சிகள் இவை, அதன் பின் புஸ்வானம்தான்


பூட்டிய வீட்டுக்குள் சோதனை என்பார்கள், அது சோதனையா இல்லை கிடா வெட்டி சாப்பிட்டு தூங்குகின்றார்களா என யாருக்கு தெரியும்?


சோதனைகள் நடக்குமே தவிர, முடிவும் வராது, அறிக்கையும் வராது


இந்த நாட்டில் எல்லாமே நாடகம்,


அவரவர் நலனுக்காகவும் சில பல பேரங்களுக்காகவும் இம்மாதிரி சோதனைகள் நடத்தபடுமே அன்றி வருமான வரியினை பிடித்தே தீரவேண்டும் என்பதல்ல..


சோதனையில் சிக்கிய எத்தனையோ பேர் அதன் பின் ஒரு இடைஞ்சலுமின்றி வலம் வந்துகொண்டுதான் இருக்கின்றார்கள், இன்னமும் வருவார்கள், நாமும் பார்த்துகொண்டேதான் இருக்கின்றோம்.


இன்னும் பார்ப்போம், இந்நாட்டின் தலைவிதி அப்படி..






 

 



 

No comments:

Post a Comment