Thursday, April 13, 2017

கலைஞர் கவிதையில் பதில்....


17523297_10208911073949226_2972983098555092205_n.jpg


முன்பொரு கவியரங்கத்தில் அப்துல் ரகுமான் பாடினார், மரம் சொல்லுமாம்


"ஏய் மனிதர்களே
நாங்கள் ஆயிரம் சிலுவைகள் தருகின்றோம்
நீங்கள், ஒரு கிறிஸ்துவினை தர தயாரா?"




எவ்வளவு அழகான கேள்வி? எப்படிபட்ட சிந்தனை?, மரங்கள் அப்படி கேட்டால் மானிட இனத்து பதில் என்ன? மொத்த சிந்தனையும் கலங்கிய நேரம் கலைஞர் கவிதையில் பதில்சொன்னார்


"ஏய் மரங்களே
நீங்கள் எத்தனை சிலுவை கொடுத்தாலும்
இனி அப்படி இம்சித்து கொல்ல‌
ஒரு மனிதனை தரவே மாட்டோம்"


கைதட்டி ஆர்பரித்தது கூட்டம்


எல்லோரும் எப்படி யோசித்தால், கலைஞர் இப்படி யோசித்தார் பார்த்தீர்களா? இதுதான் அவரின் பன்ஞ்


பெரிய வெள்ளி நெருங்கும் காலமெல்லாம் இந்த கலைஞரின் வரிகள் நினைவுக்கு வந்துகொண்டே இருக்கும்...



No comments:

Post a Comment