Saturday, April 29, 2017

நாஞ்சில் சம்பத் : முழுக்க நனைந்த பின் "எல்லாம்" எதற்கு?

https://youtu.be/PtJAxgMZ0Iw?autoplay=1

முழுக்க நனைந்தபின் முக்காடு எதற்கு? என்பது பழமொழி, நாஞ்சில் சம்பத்தோ முழுக்க நனைந்த பின் "எல்லாம்" எதற்கு? எனும் அளவில் டெல்லியில் தமிழக விவசாயிகள் நின்ற கோலத்திற்கு சென்றுவிட்டார்


ஜெயா டிவியின் செய்தியினை அவருக்கு குத்தகைக்கு விட்டாயிற்று, மனிதர் உறுமிகொண்டே உளறிகொட்டுகின்றார்


"அரசியல் பெண்கள் உலாவும் சோலை அல்ல" என்கின்றார், ஜெயாவும் சசிகலாவும் பெண் இல்லையா என அருகிலிருப்பவர்களும் கேட்கவில்லை, சகித்துகொள்கின்றார்கள்




சிறை தினகரனை சந்தித்துவிட்டு ஏதோ மண்டேலாவினை பார்த்துவருபவரை போல முழங்குகின்றார், அதிலொரு வார்த்தை குறிப்பிடதக்கது


"தினகரனின் முகத்தை பார்த்ததில் நெஞ்சார மகிழ்கின்றேன்", அதாவது சிறையில் தினகரனை பார்த்ததில் மகிழ்ச்சியாம்.


வைகோவின் அரசியல் வளர்ப்பல்லவா? மனிதர் அச்சுபிசகாமல் அவர் பாணியிலே அரசியல் செய்கின்றார்


இவர் சீறும் சீற்றத்தை கண்டால் மனிதர் வைகோவின் சிலீப்பர் செல்லாக இருக்கலாம் என சந்தேகிக்க தோன்றுகின்றது



No comments:

Post a Comment