Wednesday, April 26, 2017

தினகரன் இன்று இயேசுநாதரைப் போல புனிதராகியுள்ளார் - நாஞ்சில் சம்பத்


நேற்று நள்ளிரவில் பன்னீர் அணியும், எடப்பாடி அணியும் பேச்சுவார்த்தை நடத்தின, இன்றிரவும் பேச்சுவார்த்தை நடக்கும் : செய்தி


பாஷா படத்து கடத்தல் கேங் போல நள்ளிரவில் மீட் செய்திருக்கின்றார்கள், பொதுவாக மாபியா குழுக்கள் அப்படித்தான் சந்தித்துகொள்ளும்


இவர்களும் அப்படியே சந்திக்கின்றார்கள், ஒருவேளை நள்ளிரவு 12 மணிக்குத்தான் அம்மா ஆன்மா பஞ்சாயத்து பேச வருமோ?




ஏதும் சுடுகாட்டு அருகில் சந்திப்பார்கள் போல..




  






கலிங்க போரிலே அசோகர் வென்றார், மனம் மாறினார் என்றுதான் வரலாறு சொல்லும்


ஆனால் அந்த கலிங்க மன்னன் யார்? அவன் என்ன குற்றம் செய்தான்? அவன் பெயர் என்ன? என ஒரு வரலாறும் பேசாது


அப்படி தினகரன் லஞ்சம் கொடுக்கமுயன்றார் என வரலாற்றில் பதிந்துவிடவேண்டும், யாரிடம் கொடுக்கமுயன்றார் என்பதெல்லாம் இந்திய மக்களுக்கு அறவே தேவையில்லாத கேள்விகள் என்கின்றனர் எக்ஸ்பர்ட்டுளான லோட்டஸ்கள்.





நடந்து முடிந்த நாடகத்திற்கு வசனம் எழுதுவது இந்தியாவில் புதிதா? அப்படி விரைவில் செய்தி வரும், வராமல் போகாது.

அதற்காக தேர்தல் கமிஷன் வாசலில் பெட்டியினை வைத்துவிட்டு தினகரனும், சுகாசும் காத்திருந்தார்கள் எனும் அளவிற்கு அபத்தமாக இருக்காது என நம்புவோம்..


 






எவ்வளவு அழிச்சாட்டியம் நடந்தது? காலை எழுந்ததும் அங்கு சென்று வணங்கிவிட்டுத்தான் குளித்தார்கள், பின் வணங்கிவிட்டுத்தான் உண்டார்கள், பின் வந்து உருண்டார்கள், கழிவறைக்கு போகும்பொழுதும் சமாதிக்கு வந்து வணங்கிவிட்டுத்தான் சென்றார்கள்


ஆளாளுக்கு அங்கு 24 மணிநேரமும் வழிபட்டுகொண்டே இருந்தார்கள், தமிழக பட்ஜெட் வரை அங்குதான் உருட்டபட்டது,


இப்பொழுது சத்தமே இல்லை, மகா அமைதி




எப்படியோ அம்மா சமாதி, ஆள் செல்லாமல் கைவிடபட்ட பகுதியானதில் மகிழ்ச்சி, விரைவில் அது புதர்மண்டி போகலாம்


அங்கு சென்று வணங்கிய யாரும் நிம்மதியாக இல்லை, சிலர் வெளியே கூட இல்லை..


இனி பத்மநாபாசாமி கோயில் போல புதையல் இருக்கின்றது எனசொன்னாலும் ஒரு பயலும் போகமாட்டான்


ஜெயாவிற்கு மட்டுமல்ல, அவர் சமாதிக்கும் ஜெயில் சென்டிமெண்ட் அதிகம் போல...







தினகரன் இன்று இயேசுநாதரைப் போல புனிதராகியுள்ளார் - நாஞ்சில் சம்பத்


இயேசு கைது செய்யபட்டவுடன் அவரோடு கூட இருந்த யூதாஸ் உடனே தூக்குபோட்டு செத்துட்டான் மிஸ்டர் சம்பத்...


அவன் மானஸ்தன்





அந்த இயேசுநாதருக்கு அப்படிபட்ட மானமுள்ள, விசுவாசமுள்ள சீடர்கள் கிடைத்திருக்கின்றார்கள், அவர் கைது செய்யபட்டதும் செத்திருக்கின்றார்கள்





‛தினகரனால் தமிழகத்திற்கு அவமானம்': தமிழிசை


காந்தியினை சுடுதல், மசூதி இடித்தல், மாட்டுக்காக மனிதனை கொல்லுதல், இன்னும் பல அட்டாகசங்களை செய்தல் போன்ற சம்பவங்களால் இந்தியாவிற்கு உலகளவில் எவ்வளவு "பெருமை" என இவரிடம் யாரும் கேட்டுவிட கூடாது


 






Image may contain: 1 person


இவர்கள் தொடங்கிவிட்டார்கள்,
வைகோ ஏன் சிறையில் இருந்துகொண்டார் என்பது புரியலாம் :)


அடுத்து போராடுவது யாராக இருக்கலாம்?








No comments:

Post a Comment