Tuesday, April 18, 2017

அதிமுகவினரின் இம்சை ஒருபுறம், தமிழிசை காமெடி இன்னொருபுறம்....






அதிமுகவினரின் இம்சை ஒருபுறம், தமிழிசை காமெடி இன்னொருபுறம், இன்னும் பல இம்சைகள் தமிழகத்தில் இருக்க இந்த மனுஷ் என்பவரின் இம்சையும் தாளமுடியவில்லை

யாரோ எங்கோ ஏதோ சொல்லிவிட்டார்களாம், அந்த கதையினை, காதோர செய்தியினை கலைஞர் சாகித்ய அகாடமி விருதுக்கு ஆசைபட்டாரா எனும் அளவிற்கு கேள்வியாக்கி, கலைஞர் அப்படி செய்தார், இப்படி எழுத்தாளர்களை கொண்டாடினார், இவருக்கு சீட் கொடுத்தார், இவருக்கு வீடு கொடுத்தார் என சொல்லி மனிதர் ஏதோ குழப்பியடித்திருக்கின்றார்.

அதாவது இல்லாத ஒரு சர்ச்சையினை இவரே சொல்லி, நான் கலைஞருக்கு எப்படி வக்கலாத்து வாங்குகின்றேன் பார்த்தாயா? என தோள் தட்டியிருக்கின்றார்


கலைஞர் நலமாக இருந்தால் இப்பொழுது பின்மண்டையில் தட்டியிருப்பார்..

எழுத்தாளர்களை எந்த ஆட்சியாளரும் பகைக்கமாட்டார்கள், எம்ஜிஆர் சோலையினையும், வலம்புரி ஜாணையும், தன்னை வறுத்தெடுத்த கண்ணதாசனை கொஞ்சாத கொஞ்சுதலா?

கலைஞர் எழுத்தாளர்களை ஆதரிப்பார் என யாருக்கு தெரியாது? எல்லா எழுத்தாளர்களும் அவருக்கு நண்பர்கள்

தன்னை விமர்சிப்பதற்காகவே பிறந்த சோ.ராமசாமியினை கூட சந்தித்துகொள்வார், ஜெய்காந்தன் முதல் தன்னை வெறுத்த எல்லா எழுத்தாளர்களையும் சந்திப்பார்

இவ்வளவு எழுதினீர்களே என்னை உங்களால் என்ன செய்ய முடிந்தது எனும் கெத்தும் அதில் இருந்தது, அதுதான் கலைஞர்

இப்பொழுது மனுஷ் இதனை எல்லாம் சொல்லும் அவசியம் என்ன?

ஏதோ ஒருபடத்தில் பேப்பர் தோசைக்கு ஆசைப்பட்ட கவுண்டமணி , அது லிவருக்கு நல்லது என புளுகுவார்.

அப்படி ஒரு வீடு வேண்டும் என கேட்க வேண்டிய கேள்வியினை இப்படி வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் எழுப்பிகொண்டிருக்கின்றார், சம்பந்தம் இல்லாமல் பேசிகொண்டிருக்கின்றார்

கலைஞர் சாகித்ய அகாடமி விருதுக்கு ஆசைபடவே இல்லை என மறுக்கின்றாராம், இது யாருக்கு தெரியாது?

குடியரசு தலைவர் பதவி தேடிவந்தபொழுதே மறுத்தவர் கலைஞர் என்பது வரலாறு, இதில் அவர் விருதினை மறுத்தாரா எனும் புது சர்ச்சையினை கிளப்புகின்றார்

ஒன்றுமட்டும் புரிகின்றது

பாஜகவிற்கு ஒரு தமிழிசை என்றால், திமுகவிற்கு ஒரு "ஆண் தமிழிசை" மனுஷ் எனும் அளவிற்கு சென்றுகொண்டிருக்கின்றார்.

வாழ்வில் அவதூறுகளையும், திட்டுக்களையும், காது கூசும் வார்த்தை பிரவேசங்களையும் கேட்டு வளர்ந்தவர் கலைஞர் , யார் மீதும் வழக்கு தொடர்ந்தவர் அல்ல, வன்மம் வளர்த்தவரும் அல்ல‌

அந்த கலைஞரின் திமுக சார்பாக இவர் யார் மீதோ வழக்கு தொடுப்பாராம், சொல்லிகொண்டிருக்கின்றார்

வழக்கு தொடுப்பதென்றால் தன் காலத்தில் தொடுக்க கலைஞருக்கு தெரியாதா? இவர் ஏன் இப்பொழுது சொல்லிகொண்டிருக்கின்றார்?

ஸ்டாலின் சுதாரித்துகொள்வது அவருக்கு நல்லது, கட்சிக்கும் நல்லது

கலைஞரின் பெயருக்கு இன்னும் நல்லது




 

 



 

No comments:

Post a Comment