Saturday, April 22, 2017

புரட்சித்தலைவன் விளாடிமிர் லெனின்

https://youtu.be/gXUgia1qS8I


 தோற்றம் : 22-04-1870 :: மறைவு : 21-01-1924


மானிட வராலாற்றில் மக்களே அரசர்களை ஒழிக்கமுடியும் என முதன் முதலில் உலகிற்கு அறைந்து சொல்லிகொடுத்த ஒப்பற்ற தலைவனின் பிறந்த நாள் இன்று

பல்லாயிரம் ஆண்டாக தொடர்ந்த அந்த மானிட வரலாற்றினை, அரசர்கள் மட்டுமே ஆளதெரிந்தவர்கள் என்ற பொய்யினை அவன் தான் உடைத்தெறிந்தான்


விளாடிமிர் லெனினின் பிறந்தநாள் இன்று, அவன் தான் வரலாற்றாளன், புரட்சியின் தலைமகன்


ரஷ்யா ஜார் மன்னர்களின் ஆட்சி அப்படி கொடுமையாய் இருந்தது, பொறுத்துகொண்டிருக்க அவர்கள் என்ன தமிழக மக்களா? தமிழர்கள் போல் இருந்தால் எப்படி புரட்சி வெடிக்கும்? வாய்ப்பே இல்லை


ஆனால் ரஷ்யர்கள் கொதித்தார்கள், லெனினின் அண்ணன் முதல் போராளி, ஆனால் அரச சதி என சொல்லி கொல்லபட்டார்


தன் சகோதரனையே களபலியாக கொடுத்துத்தான் லெனின் அப்போராட்டத்தை தொடங்கினான், கார்ல் மார்க்ஸ் சொன்ன தத்துவம் உலகாளும் என நம்பினான்


Image may contain: 2 people, people standing, crowd and outdoorபொதுவுடமை ஒன்றும் புதிதல்ல, இயேசுவே ஒரு பொதுவுடைவாதியாகத்தான் இருந்தார், அவரின் சீடர்களும் தொடக்கத்தில் எல்லாவற்றையும் பொதுவாக கொண்டு வாழ்ந்ததாகத்தான் பைபிள் சொல்கின்றது


ஆனால் அவை எல்லாம் ஏட்டில் மட்டும் இருந்தன, இதனை மறைத்த மதகுருமார்கள்தான் ரஷ்யாவில் ஆட்சியின் அதிகார மையமாக இருந்தனர்


லெனின் ஜார் மன்னன், கிறிஸ்தவ திருச்சபை, அன்றைய ஜார் மன்னனை ஆட்டுவித்த சாமியாரான, ஜெயாவினை ஆட்டிய‌ நமது தமிழக மன்னார்குடி குடும்பத்தை போன்ற மர்ம சாமியாரான ரஸ்புடீன் என பல அதிகார மையங்கள் ரஷ்யாவில் இருந்தன‌


முதலில் ஐரொப்பிய தொழிலாளர்களோடுதான் வாழ்வினை தொடங்கினார் லெனின், அதனால் அவர்கள் சிரமமும், கஷ்டமும், அவருக்கு விளங்கிற்று


பொதுவுடமை பற்றி பல புத்தகங்கள் எழுதினார், அதன் மூலம் மக்களை திரட்டினார், ஆட்சிக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடினார்


முதலில் ஓட விரட்டபட்டார், அவர் ஜெர்மானியரின் கைக்கூலி என ஜார் மன்னர் சொல்லிகொண்டிருந்தார், ஆனால் அதனையும் மீறி லெனினை மக்கள் வரவேற்க காரணம் அவரின் பேச்சு, எழுத்து எல்லாவற்றிற்கும் மேலாக மானிட நேயம்


முதன்முறை தோற்றாலும் இரண்டாம் முறை ரஷ்ய அரசினை வீழ்த்தி ஆட்சியினை கைபற்றினார்


கடந்த நூற்றாண்டின் பெரும் அதிசயம் அது, அதற்கு முன் ஜனநாயக நாடு மக்களாட்சி நாடு என அமெரிக்காவும், பிரான்சும் அறியபட்டிருந்தாலும் அவை முதலாளித்துவ நாடுகளாகவே இருந்தன‌


லெனின் முதன் முதலில் தொழிலாளிகளுக்கான அரசை அமைத்தான், இப்பொழுது இந்தியாவில் திடீரென விவசாயிகளுக்கான அரசு அமைந்தால் நம்ப முடியுமா? அப்படித்தான் உலகம் திகைத்தது


லெனின் சோவியத் யூனியன் அமைத்து தொழிலாளர்களுகு விடிவு சொன்னபின்புதான், உலகெல்லாம் தொழிலாளர் பாதுகாப்பு, ஓய்வூதியம், ஓய்வு, குறிப்பிட்ட பணிநேரம் என சகல உரிமைகளும் கிடைக்கபட்டன‌


எல்லா நாடுகளும் புரட்சிக்கு அஞ்சி தொழிலாளருக்கு உரிமைகள் கொடுக்க தொடங்கின, பல மக்கள் ஆட்சிக்கு சத்தமில்லாமல் திரும்பின‌


இந்த மாபெரும் மாற்றத்தை லெனின்தான் உலகில் தொடங்கிவைத்தார், பெரும் திருப்பம் அது


லெனின் ஆட்சி அமைத்தபின்பு தான் உலகெல்லாம் அவனால் விழிக்க தொடங்கிய பின்புதான் இனி இந்தியாவினை நெடுங்காலம் ஆளமுடியாது எனும் எண்ணம் பிரிட்டனுக்கே வந்து அது கமிஷன் அது இது என இறங்கிவற ஆரம்பித்தது


தமிழகத்து பன்னீர்செல்வம் (இவர் அன்றைய நீதிகட்சி பிரமுகர்) போன்றோர் எல்லாம் லண்டனுக்கு சென்று வெளளையோடு உரிமை பேசிய விஷயங்கள் எல்லாம் அதன் பின்னரே நடந்தன‌


இன்று சோவியத் இல்லை, உலகெல்லாம் தொழிலாளர்கள் எப்படி எல்லாம் வதைக்கபடுகின்றனர், 4 மணிநேரம் கூட ஓய்வு இல்லாமல் முதலாளித்துவம் எப்படி எல்லாம் வதைக்கபடுகின்றனர் என்பது கண்கூடாக பார்க்கின்றோம், உலகெல்லாம் அதுதான் நிலை


முன்பு அப்படித்தான் தொழிலாளரின் அடிமை நிலை இருந்தது, இதனை அரசு அமைத்து காத்த மாபெரும் தலைவன் தான் லெனின்


லெனினின் சாதனை ஏராளம் உண்டு, அவரால் உருவாக்கபட்ட சோவியத் யூனியன் அமைந்த 100ம் வருட சிறப்பு வரும் அக்டோபரில் கொண்டாடபோகின்றது, அப்பொழுது நிறைய கட்டுரைகள் வரும், எல்லோரும் படிக்கலாம்


அவர் பட்ட கஷ்டங்கள் ஏராளம், ஆட்சிக்கு வந்த மறுவருடமே சுடபட்டார், எத்தனையோ கொலை முயற்சிகளில் தப்பித்துதான் வந்தார், பக்கவாதத்தில் பாதிக்கபட்டாலும் எழுதுவதை கலைஞர் போல எழுதிகொண்டேதான் இருந்தார்


வரலாற்றை புரட்டிய லெனினினை தொடர்ந்துதான் ஸ்டாலின், மாவோ, காஸ்ட்ரோ, சே, ஹோ சி மின், என ஒப்பற்ற பெரும் பொதுவுடமை போராளிகள் எல்லாம் உலகில் வந்தனர், தேவை ஏற்படின் இன்னும் வருவர், அவர்களுக்கெல்லாம் என்றும் தலைமகன் லெனின்


கடவுள் என ஒன்று இல்லை, அது மக்களை மயக்கும் மாயவேலை, உழைப்பு மானிட இனத்தை உயர்த்தும், அறிவு மானிட இனத்தை காக்கும் என உலகிற்கு அரசு அமைத்து சொன்னவன் லெனின்


அந்த கடவுள் மறுப்பு பாதைதான் தமிழகத்திலும் ஒலித்தது, பெரியார் தைரியமாக எழுந்து , "அதொ கடவுளை மறுதலித்து, ஆலயங்களை இடித்துவிட்டு, மதகுருமார்களை விரட்டிவிட்டு எல்லோரும் மன்னர் என ஆட்சி அமைத்திருக்கின்றானே மாவீரன் லெனின், அவன் மனிதன், அவனுக்கு தலை வணங்குகின்றேன்" என சொல்லும் அளவிற்கு லெனின் தாக்கம் தமிழகத்தில் இருந்தது


பெரியார் போராடவும் , குரலெழுப்பவும் அவருக்கு லெனினின் வெற்றி பெரும் உந்து சக்தியாக இருந்தது, பெரியாரும் ரஷ்யா சென்று பொதுவுடமை அரசினை எல்லாம் கண்டு வந்தார்


பெரியார் ஒரு கம்யூனிஸ்டோ என வெள்ளையன் அஞ்சும் அளவிற்கு பெரியாரிடம் லெனின் தாக்கம் இருந்தது


பெரியாரை மட்டுமல்ல, உலகில் எங்கெல்லாம் மதம் எனும் மாயையில் மக்களை அடக்கினார்களோ அங்கு இருந்த மானிட நேயம் மிக்க மனிதர்களை எல்லாம் லெனின் தாக்கினார்


லெனின் கொடுத்த அந்த ஒளியில்தான் உலகில் தொழிலாளர் வாழ்விலும், ஒடுக்கபட்டோர் வாழ்விலும் வெளிச்சம் வந்தது


உலகெல்லாம் புரட்சி தீபம் ஏற்றிய அந்த ஒப்பற்ற தலைவனின், உலக புரட்சி தலைவனின் பிறந்த நாளில் அவனுக்கு மனதார‌ அஞ்சலி செலுத்தலாம்


அந்த மாமனிதனே புரட்சிக்கு தலைவன், ஆனால் அவன் கடைசி வரை தோழர் என்றே அழைக்கபட்டான், ஆனால் தமிழகத்தில் கேமரா முன்னால் ஆடிய ஒரு கூத்தாடி புரட்சி தலைவன்


அந்த ரஷ்ய புரட்சிதலைவனுக்கு பின், பின் தங்கிய ரஷ்யா உலக வல்லரசானது, இன்றுவரை அது உலகை மிரட்டுகின்றது


ஆனால் தமிழக புரட்சி தலைவன் ஆட்சிக்கு பின் தமிழகம் என்னாயிற்று என்பதற்கு இன்றைய காட்சிகளே சாட்சி, அந்த புர்ச்சி தலைவனுக்கு ஒரு புரட்சி தலைவி வேறு, நம் தலைவிதி இப்படி


வராது வந்த மாமணியான லெனின் உடலை , அழியாமல் ரஷ்யாவில் பதப்படுதினார்கள், வருங்காலத்தில் மருத்துவம் வளர்ந்து அவர் உயிர்பெறலாம் எனும் நம்பிக்கை அக்கால ரஷ்யர்களிடம் இருந்தது என்பார்கள்


அவர் உயிபெறாவிட்டாலும் பரவாயில்லை, நம்மை எல்லாம் மானமும், அறிவும் பெற வைத்தவன் என்பதால் எல்லா தலைமுறையும் பார்க்கட்டும் என வைத்திருந்தார்கள்


ரஷ்யர்கள் கொடுத்து வைத்தவர்கள் அவர்களுக்கு "புரட்சி தலைவன்" லெனினும் அவனுக்கு பின் ஸ்டாலினும் இன்னும் பலரும் இன்று புட்டீனும் கிடைத்தார்கள்


நமக்கு "புரட்சி தலைவன்" எம்ஜிஆரும் அவருக்கு பின் புரட்சி தலைவி ஜெயாவும் அவருக்கு பின் இன்று பன்னீரும் எடப்பாடியும் வந்திருக்கின்றார்கள்


தமிழகம் உருப்படுமா? வாய்ப்பே இல்லை..


Image may contain: one or more people, crowd and outdoorதமிழக புர்ச்சி தலைவன் எம்ஜிஆர் செத்ததும், அதிமுகவினருக்கு அப்படி ஒரு ஐடியா வந்தது? எதற்கு? வைத்து வோட்டு கேட்கலாம் என்பதற்காக, அந்த கட்சியினருக்கு எந்நாளும் அறிவு அப்படித்தான்


ஆனால் டெல்லி மிரட்டியதால் , அவரை புதைத்துவிட்டார்கள் தமிழகம் தப்பியது இல்லாவிட்டால் இன்று எம்ஜிஆர் உடல் யாருக்கு என்பதில் பன்னீர் கோஷ்டியும் , தினகரன் கோஷ்டியும் வெட்டியான் போல முட்டிகொண்டிருக்கும், எப்படியோ அன்று டெல்லி தமிழகத்தை காப்பாற்றியிருக்கின்றது


இன்றும் காப்பாற்றிகொண்டிருக்கின்றது


உலகிற்கு பெரும் வழிகாட்டிய, மானிட நேயமிக்க, மார்க்ஸ் எனும் பெட்ரோலை விளக்காக எரியவிட்ட அந்த மாமனிதனை இன்று நினைத்துகொள்ளலாம்


லெனினுக்கு சாவில்லை, எல்லா ஒடுக்கபட்ட மக்களின் போராட்டத்திலும், அவர்கள் பெரும் உரிமையிலும் அவர் வாழ்ந்துகொண்டே இருப்பார்


அம்மாமனிதனுக்கு உள்ளார்ந்த அஞ்சலி,


கடவுள் இல்லை என சொல்லி, கடவுளின் ஆட்சியினை கொடுத்த கடவுள் அவன்..


(ஒரிஜினல் புரட்சி தலைவனும், டூப் புரட்சி தலைவனும்)






 துணுக்ஸ்


மனைவியினை அருகில் வைத்துகொண்டு குஷ்பூ படமோ அல்லது அவரின் நிகழ்ச்சிகளை காண்பதன் பெயர்தான் "சத்திய சோதனை"











No comments:

Post a Comment