Thursday, April 20, 2017

தென்னை மரத்திலிருந்து ஊட்டச்சத்து பானம் : முதல்வர் பழனிச்சாமி ஒப்புதல்

தென்னை மரத்திலிருந்து ஊட்டச்சத்து பானம், அல்வா, சாக்லேட் தயாரிக்கும் திட்டம் : முதல்வர் பழனிச்சாமி ஒப்புதல்


அங்கிள் சைமன், இங்கே பாருங்கள் உங்கள் தேர்தல் அறிக்கையினை காப்பியடித்துவிட்டார்கள், இதற்கு காப்பிரைட் உரிமை உங்களிடம்தான் இருக்கின்றது


பனைமரங்கள் மூலம் என்னென்ன திட்டம் நீங்கள் சொன்னீர்களோ அதனை எல்லாம் பழனிச்சாமி காப்பியடிக்கின்றார், ஆனால் பனைக்கு பதிலாக தென்னை




இனி அவர் ஆடுவளர்ப்பு அரசு தொழில் எனும் உங்கள் திட்டத்தை வான் கோழி வளர்ப்பு அரசு தொழில் என சொல்லும் முன் முந்திகொள்ளுங்கள்


குடிக்க தண்ணீர் இல்லை, தென்னை மரங்கள் நீரின்றி செத்துகொண்டிருக்கின்றன‌


தென்னைக்கு நீர் ஊற்ற வழிசொல்லாத அரசு, தென்னை மரத்துபாலில் அல்வா செய்யுமாம்


எப்படி இருக்கின்றது இவர்கள் திட்டம்? நுட்பத்தோடுதான் இருக்கின்றது


விவசாயிகள் நலனுக்காக தென்னையிலிருந்து பானம் செய்யும் திட்டம் வைத்திருந்தோம், வறட்சியில் தென்னை பட்டுவிட்டதால் திட்டம் கைவிடபடுகின்றது என சொல்லிவிட்டு நகரலாம்


எங்கே பனங்கள் டாஸ்மாக்கில் விற்கபடும், டாஸ்மாக் சாராயம் தடை செய்யபடும் என சொல்லட்டும் பார்க்கலாம்


எப்படி சொல்வார்கள்?


கட்சியிலிருந்து சசிகலா குடும்பம் விரட்டபட்டாலும், டாஸ்மாக்கிலிருந்து சசிகலாவின் "மிடாஸ்" விரட்டபடும், இன்னும் பல அதிமுக தொழில்களில் சசிகலா குடும்பம் விரட்டபடும் என சொன்னார்களா? இல்லை சொல்லத்தான் போகின்றார்களா?


எல்லாமே நாடகம், அப்படி இந்த தென்னமரமும் இப்பொழுது நாடகம்



No comments:

Post a Comment