Wednesday, April 19, 2017

ஸ்டாலினுக்கு சுட்டு போட்டாலும் வராது

கலைஞர் நலமாக இருந்திருந்தால் நிச்சயமாக அதிமுகவின் ஒரு அணி இப்பொழுது திமுகவோடு கலந்திருக்கும்


அவரின் ஆற்றல் அப்படி,


டெல்லியின் ஆதிக்கம் பட்டவர்த்தனமாக தெரியும் பொழுது, அதன் ஆபத்து பற்றி சொல்லியே கரைத்திருப்பார், "நான் என்றே இரு கழகங்கள் இணைய பேசியவன் தெரியுமா?" என களமிறங்கியிருப்பார்




"பன்னீர் எடப்பாடி அணிகள் இணைவதை விட , அண்ணா கண்ட திராவிடராய் நாமெல்லாம் இணைவதே இன்று முக்கியம்.." என அசத்தியிருப்பார், அரசியல் அரங்கம் அதிர்ந்திருக்கும்..


அவர் இல்லாத அரசியலில் சுவாரஸ்யங்கள் இல்லை, ஸ்டாலினுக்கு அந்த வழி எல்லாம் தெரியவில்லை, அரசியலில் இம்மாதிரி நேர்மை, நியாயம் எல்லாம் மரத்தடியில் அமரவைத்துவிடும், ஸ்டாலின் அப்படி ஒரு மரத்தடியில்தான் இருக்கின்றார்


கலைஞர் பிறவி அரசியல்வாதி, ஒவ்வொரு விஷயத்தையும் அரசியலாக , கட்சியாகவே பார்ப்பவர். அதனை தாண்டிய எந்த கோணமும் அவரிடம் இருக்காது


ஸ்டாலினிடம் இதனை தாண்டிய எல்லா கோணமும் இருக்கின்றது, அதில் கோணலும் இருக்கின்றது


டெல்லி சிங்கம் ஒரு மந்தையினை கலைக்கும்பொழுது, அவை திசை தெரியாமல் தடுமாறும்பொழுது சில ஆடுகளை தன் மந்தையில் சேர்ப்பவனே நல்ல திறமையான மேய்ப்பன்


அவை தானாக என் கதவை தட்டட்டும் என்பதெல்லாம் வேலைக்கு ஆகாது


அப்படி அதிமுகவில் இருந்து 4 பேர் வந்துவிட்டால் தங்கள் இருப்புக்கு ஆபத்தோ என சிலர் ஸ்டாலினை தடுக்கும் சாத்தியமும் இருக்கின்றது


ஆக குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பது ஒரு கலை, அது எல்லாம் கலைஞருக்கு கை வந்த கலை


யாரையும் வளைக்கும் ஆற்றல் அவரிடம் இருந்தது..


ஸ்டாலினுக்கு சுட்டு போட்டாலும் வராது. அதிமுகவின் சில உச்ச தலமைகளின் பெரும் ஆறுதல் இப்பொழுது ஸ்டாலின் தான்..


ஓடுபவர்கள் எங்கும் சுற்றட்டும், நிச்சயம் வளைத்துபோட ஸ்டாலினுக்கு தெரியாது என்ற ஆறுதலில் இருக்கின்றார்கள்


அவ்வகையில் தமிழிசை உட்பட பலருக்கு மகிழ்ச்சி , அவ்வளவு ஏன்? அழகிரியும் சந்தோஷமாகத்தான் இருப்பார்..



No comments:

Post a Comment